பேருந்துக் காதல்..! - தொடர் பதிவு

னைத்து வலைப்பதிவு நண்பர்களுக்கும் வணக்கம். ”பேருந்துக் காதல்” தலைப்பே கொஞ்சம் விவகாரமாகத்தான் இருக்கு. தொடர்பதிவு எழுதிட பிரபலபதிவர்கள் வரிசையில் எப்பொழுதாவது பதிவிடும், வலைப்பதிவு வாசகனாய் இருந்த என்னையும் சேர்த்து வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் பிரபலம்தான் என ஊக்குவித்து இங்கு என்னை அழைத்த எமது அருமை நண்பர் பனித்துளி சங்கர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை இந்த வாய்ப்பின் முலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ந்த தொடர் எங்கே ஆரம்பித்தது என்றும் தெரியல...? எங்கே முடியும் என்று தெரியல...? தொடர் பேருந்தாய் போகிறது....! (அதெல்லாம் உமக்கு எதற்கு அதான் தொடர் பதிவுனு சொல்லிடோம்ல பிறகு எதற்கு ஆராய்ச்சினு மனசுக்குள்ளே திட்டுவது கேட்குது) சரி விஷயத்திற்கு வருகிறேன். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் அதில் பயணியாக இருந்து பதிவுகளை வாசித்து வந்த என்னையும் ஒரு நாள் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் இருந்து எமது பயண எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்படி நமது நண்பர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க... எமது கற்பனை குதிரையை தட்டி விடுகிறேன். அது தறி கெட்டு ஓடினாலும் நீங்க ஓடாதீங்க.... (ஆமா இப்படியெல்லாம் மொக்க போட்டால் ஓடாம என்ன செய்ய..?)

மது நண்பர் ஒருவர் கல்லூரிச் சென்ற போது அவரது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். கல்லூரிக்குச் சென்ற முதல் இரண்டு ஆண்டுகள் அடிக்கடி பார்த்தாலும் பேசியதேயில்லை... மூன்றாவது ஆண்டின் இறுதிகட்டத்தில்தான் எப்படியும் முடிவு தெரிந்து கொள்ளும் ஆவலுடன் ஒவ்வொரு நாளையும் கழித்தான். இப்படியே நகர்ந்தது அவனது பேருந்தில் ஒருதலை காதல் பயணம்.


ழக்கம் போல் அவன் அன்று கல்லூரிக்குச் செல்ல புறப்பட்டான். கூட்டம் நிறைந்த பேருந்தில் எப்படியோ முண்டியடித்து முன்னேறி உள்ளே சென்றுவிட, சிறிதுநேரத்தில் மற்றொரு பேருந்து நிறுத்தம் வந்தது. உள்ளே வந்ததும் சுற்றும் முற்றும் தேடினான். கடைசி இருக்கைக்கு முன்புறம் சன்னல் ஓரம் அவள் அமர்ந்திருந்தாள். அவளருகில் அமர்ந்திருந்த ஒருபெண் இறங்குவதற்கு எழுந்துவிட, இரண்டு பேர் அமரும் அந்த இருக்கையில் ஒரு இருக்கை யாரும் உட்காராமல் காலியாகதான் இருந்தது. மேலே பார்த்தான் மகளிர்க்காக... என்று எழுதப்பட்டிருந்தது. அவன் பயந்த முகத்துடனும், காதல் பார்வையுடனும் அவள் அருகே சென்று ஏதாவது பேச்சுக்கொடுத்து பேசலாம் என எண்ணினான்.
ப்போது அவள் சிரித்த முகத்துடன், வாங்க.. உட்காருங்க..! என்றால் இவன் பரவாயில்லை இருக்கட்டும்..! என்று பெருமிதமாக கூறினான் உள் ஆசைகளை மறைத்து. அவள் பரவாயில்லை உட்காருங்கள் என்று கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள் அவனுக்கு உள்ளுர கொஞ்சம் தெம்பு வந்தது. தன் காதலை சொல்லி விடலாம் என வாயெடுத்தான் அதற்குள் அவள் தன் கைப்பையிலிருந்து நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதத்தை எடுத்தால்... அவனுக்கு தூக்கி வாரிபோட்டது அக்கடிதம் அவள் காதலை அவனிடத்தில் சொல்வதற்கு எழுதப்பட்டது என நினைத்து இவன் கற்பனையில் மிதந்தான்.
வனது கை கால்கள் கொஞ்சம் பயத்திலும் ஆர்வத்திலும் நடுநடுங்கியது. வடிவேலு காமெடி நினைவுக்கு வந்தது. ”Building Strorngu But Basement கொஞ்சம் Weak அது இததானோ...”! என்று புன்முறுவலுடன் நினைத்துக்கொண்டான். அப்பொழுது அவள் கூறினால் ”ஆச்சுவேலி எனக்கு தமில் சரியா வராது” சோ. ”நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க..ப்ளீஸ்..! கொஞ்சம் இந்த லெட்டரை கரைக்சன் பண்ணிதரீங்களா..!” நீங்க தமில்ல நல்லா தப்பு இல்லாம எழுதுவீங்களாமே..! நம்ப ப்ரண்டஸ்ங்க... சொன்னாங்க.. அதான் உங்ககிட்ட கேட்டேன் என்றால் கூலாக....! அவன் அக்கடித்தை படித்து பார்த்தான். நிறைய ர,ற கர, ன,ண கர மற்றும் ல,ள கர பிழைகள் துணைக்கால் எழுத்து (உதாரணம் உங்கலை கதாளிக்கிரேன்) மாற்றி போடப்பட்டு என பல பிழைகள் இருந்தது.

னால் அவன் கூறினான் இதை யாருக்கு எழுதீனிர்களோ..! அவர்களுக்கு இது நிச்சயம் புரியும். அதனால் நீங்க இதை இப்படியே அவர்கிட்ட கொடுங்க.. ஒருவேளை அவருக்கு புரியல்லை என்றால் பெயரை மட்டும் அடித்து எழுதிவிட்டு என்கிட்ட மீண்டும் கொடுங்க.. நான் காத்திருக்கிறேன் என்று நாசூக்காக சொன்னான். (மறைமுகமாக தன் காதலை சொன்ன திருப்தியுடன்..) அதற்குள் அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததால் இறங்கி சென்றுவிட்டான். (நல்வேளை இறங்கிவிட்டான் இல்லையெனில் என்ன ஆகி இருக்குமோ..? ஹி.. ஹி.. ஹி..)


ன்று முதல் இன்று வரை யாராவது சன்னல் ஓரம் அமர்ந்திருந்தாலோ... பயணச்சீட்டு எடுப்பதற்கு கைப்பையில் இருந்து பணம் எடுத்தாலோ... அவனுக்கு இந்த நினைவுகள்தான் வருவதாக.. அடிக்கடி புலம்புவான். சரி நண்பர்களே ரொம் போர் அடிக்க வைத்துவிட்டோனோ..??!! இது போன்ற அனுபவங்கள், புலம்பல்கள் தங்களுக்கோ, தங்கள் நண்பர்களுக்கோ ஏற்பட்டு இருந்தாலோ...! அல்லது பார்த்து ரசித்து இருந்தாலோ நீங்க நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன். தற்போதைக்கு இப்பதிவினை தொடர்பதிவாக எழுதிட நமது கீழ்கண்ட நண்பர்களை அவர்களின் வாசக நண்பர் என்ற முறையில்  நட்புடன்  அழைக்கின்றேன்.
You can leave a response, or trackback from your own site.

19 Responses for this post

  1. அன்பின் பிரவீன் குமார்

    பேருந்துக் காதல் அருமை - கதை - நடந்த நிகழ்வு - அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

    நல்வாழ்த்துகள் பிரவீன்
    நட்புடன் சீனா

  2. தங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி நண்பரே..!

  3. தங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி cheena (சீனா)ஐயா...! உங்கள் ஆசிர்வாதமுடன்... பிரவின்குமார்.

  4. ha,ha,ha,ha..... nicely written!

  5. ம்ம்ம்.....ஒரு தலை ராகம்
    நல்லாத்தான் இருக்கு,
    என்கிட்டயும் பேருந்து கொடுத்து
    இருக்கீங்க, ரைட்டு கொஞ்சம் அவகாசம்
    கொடுங்க, ஓட்டிரலாம்,
    நன்றி பிரவின்.

  6. Chitra said...
    ha,ha,ha,ha..... nicely written!
    தங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி மேடம்.

  7. //சைவகொத்துப்பரோட்டா said...
    ம்ம்ம்.....ஒரு தலை ராகம்
    நல்லாத்தான் இருக்கு,
    என்கிட்டயும் பேருந்து கொடுத்து
    இருக்கீங்க, ரைட்டு கொஞ்சம் அவகாசம்
    கொடுங்க, ஓட்டிரலாம்,
    நன்றி பிரவின்.//

    வாங்க தலைவா..! நீங்க ஏற்கனவே பின்னி பெடலெடுப்பவர்.. அவகாசம் எடுத்துகொண்டு பட்டய கிளப்புவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு..! தங்களது கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி..!

  8. மிகவும் அருமை நண்பரே !
    இத்தனை நாட்களாக இந்த திறமையை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் ?
    மிகவும் ரசிக்கும் வகையில் சொல்லியிருக்கிறீர்கள் .
    தொடர்ந்து பதிவிடுங்கள்

  9. " ”நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க..ப்ளீஸ்..! கொஞ்சம் இந்த லெட்டரை கரைக்சன் பண்ணிதரீங்களா."

    அடடா! வடை போச்சே!

    பிரவீன் நான் கூட உங்க கதைய சொல்வீங்கன்னு பார்த்தால் உங்க நண்பர் கதைய கூறி இருக்கீங்க ;-)

    அழைப்பிற்கு நன்றி

  10. உங்களுக்கு விருது கொடுத்து
    உள்ளேன், பெற்று கொள்ளவும், நன்றி.

  11. HAIபிரவீன்


    அருமை நண்பரே !
    Rjoa

  12. // ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    மிகவும் அருமை நண்பரே !
    இத்தனை நாட்களாக இந்த திறமையை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் ?
    மிகவும் ரசிக்கும் வகையில் சொல்லியிருக்கிறீர்கள் .
    தொடர்ந்து பதிவிடுங்கள் //

    எல்லாம் தாங்கள் எனக்கு அளித்த வாய்ப்பும், ஆதரவும், ஊக்கமும்தான் நண்பரே..! தங்கள் தூண்டுதலுக்கு மிக்க நன்றி நண்பரே..!

  13. // கிரி said... " ”நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க..ப்ளீஸ்..! கொஞ்சம் இந்த லெட்டரை கரைக்சன் பண்ணிதரீங்களா."
    அடடா! வடை போச்சே!
    பிரவீன் நான் கூட உங்க கதைய சொல்வீங்கன்னு பார்த்தால் உங்க நண்பர் கதைய கூறி இருக்கீங்க ;-)
    அழைப்பிற்கு நன்றி //

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..! நீங்க பதிவிடும் ஒவ்வொரு பதிவும் பசுமரத்தாணி போல் பதிந்திடும் இந்த பதிவிலும் முத்திரை பதிப்பீங்க என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உங்கள் பதிவினை எதிபார்த்து உங்கள் வாசக நண்பன் பிரவின்குமார்.

  14. // சைவகொத்துப்பரோட்டா said... உங்களுக்கு விருது கொடுத்து
    உள்ளேன், பெற்று கொள்ளவும், நன்றி. //

    இவ்விருதினை தந்து எம்மை சிறப்பித்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகள் தலைவா..!
    என்றும் உங்கள் வாசக நண்பன் பிரவின்குமார்.

  15. //Google.com. said... HAIபிரவீன்
    அருமை நண்பரே !
    Rjoa //
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!

  16. Anonymous

    Mumbai BEST Bus was the first photo ?

  17. //Anonymous said...
    Mumbai BEST Bus was the first photo ?//
    மன்னிக்கவும். எனக்கு தெரியல... நான் Google Search செய்து எடுத்தேன்.

Post a Comment