விடா முயற்சி..... விஸ்வரூப வெற்றி..!

முன்னுரை.-
அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் முன்கூட்டிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதிலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கட்டுரை பகிர்வில் தங்களுடன் உரையாடுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டமைக்கும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பதிவு ஒரு விளம்பர நாளேட்டில் படித்தது. மையக்கருத்து பிடித்திருந்ததால் எமது சொந்த நடையில் பகிர்வுக்காக தங்களுடன் பகிர்கிறேன்.
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் - காற்று பிரேக்.-
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் இளமையிலேயே இயந்திர அமைப்பில் நாட்டம் கொண்டவராம். இவரின் தந்தை பண்ணை இயந்திரங்கள் செய்யும் பட்டறை ஒன்றை வந்திருந்தாராம். ஹவுஸின் இலட்சியம் இரயில் வண்டியை உடனே நிறுத்த பிரேக் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதானாம். இதற்காகப் பற்பல வழிமுறைகளை வகுத்திருக்கிறாராம். ஆனாலும் இந்த முயற்சிகள் எல்லாம் முயல் கொம்பாகவே முடிந்தனவாம்.
பீட்ஸ் பர்க் நகரில் ஒரு இயந்திர தொழிற்சாலையில் தொடர்ந்து சோதனைகளைச் செய்து பார்த்தாராம். இரண்டு ஆண்டு காலமாக இலட்சியத்துடன் சோதனையைச் செய்து கொண்டே இருந்தாராம். அதன் பயனாக தன்னுடைய 25 வயதிலேயே காற்று பிரேக்கைக் கண்டுபிடித்து விட்டாராம்.
அதன் பிறகு, இரயில்வே கம்பெனியை நடத்திக் கொண்டிருந்தவரிடம் ஹவுஸ் பிரேக் கருவியைப் பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தாராம். அப்போது அந்த பெரியவர் "ஓடுகின்ற இரயிலைக் காற்றைக் கொண்டு நிறுத்தி விடலாம் என்கிறீர்கள். அவ்வளவு தானே..!!" என்று கேட்க, இவரும் ஆமாம் என்று தலையசைத்திருக்கிறார். உடனே அவர் "உம்முடைய பைத்தியக்கார யோசனையைக் கேட்க நேரம் இல்லை..!" முதலில் இடத்தை காலி பண்ணுங்க என்று கடுமையாகக் கூறிவிட்டாராம்.
ஆனால் அவரது பேச்சைக் கேட்டு ஹவுஸ் மனம் தளர்ந்து விடவில்லை. மிகப்பெரிய அறிஞர்களின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் முதலில் எதிர்ப்பும், சாத்தியமற்றது எனவும், முட்டாளத்தனம் என்றும் அங்கிகாரம் மறுக்கப்பட்டிருப்பதை நாம் பல அறிஞர்களின் கண்டுபிடிப்புகளின் வராலற்றைப் படிக்கையில் அறிந்திருக்கிறோம். அவ்வாறே இவருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. சரி தகவலுக்கு வருவோம்.
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் பல இடங்களுக்குச் சென்று "காற்று பிரேக்"கைப் பற்றி விளக்கினாராம். நாளடைவில் அமெரிக்கா முழுவதிலும் இவருடைய "காற்று பிரேக்" உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டதாம். இறுதியில் உலகம் முழுவதிலும் இவரின் காற்று பிரேக்கே பொறுத்தப்பட்டதாம். வெஸ்டிங்ஹவுஸின் இந்த விடா முயற்சிதான் விஸ்வரூப வெற்றியாக உலகம் முழுவதும் பரவி பயன்பாட்டுக்கு வந்ததாம்.
முடிவுரை.-
துன்பங்களுடன் போராடப் போரடத்தான் மனவலிமை உறுதி பெறும். இடரும் இன்னலும்தான் நம்முடைய திறனைச் சோதித்துக் கூர்மைபடுத்தும். தெளிவான இலக்குடனும், கடின உழைப்புடனும், தளராத தன்னம்பிக்கையுடன் விடாது முயன்றால், முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஸ்வரூப வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் நம் பெயரையும் சேர்த்திடலாம்.
நன்றி.- கூகுள் தேடுபொறி படங்கள்
* * * * * * * * * * * *

You can leave a response, or trackback from your own site.
தங்கள் பதிவு வித்தியாசமாக மனதை தொடுகிறது.. அருமை...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.
10/10
ஓ சாரி நண்பா.. கட்டுரை பாணில போட்டிருந்தீங்களா மறந்தாப்புல மார்க் போட்டுட்டேன்.. முடிவுரை மிக அருமை...
thanks for the post
கட்டுரைக்கு நன்றி பிரவின். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
// ஹவுஸின் இலட்சியம் இரயில் வண்டியை உடனே நிறுத்த பிரேக் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதானாம். ////
ஹி ஹி ஹி .. அபாய சங்கிலிய பிடிச்சு நிறுத்தினா முடிஞ்சது ..!!
//ஆனாலும் இந்த முயற்சிகள் எல்லாம் முயல் கொம்பாகவே முடிந்தனவாம்//
இப்பவெல்லாம் குதிரைக்கொம்புக்கு பதில் முயல்கொம்பா ..?
//முழுவதிலும் இவரின் காற்று பிரேக்கே பொறுத்தப்பட்டதாம். வெஸ்டிங்ஹவுஸின் இந்த விடா முயற்சிதான் விஸ்வரூப வெற்றியாக உலகம் முழுவதும் பரவி பயன்பாட்டுக்கு வந்ததாம்.
//
உண்மைலேயே ரொம்ப கலக்கலான கட்டுரை அண்ணா ..
அதுவும் இல்லாம நீங்க சொல்லிருக்கிற விதம் , கூடவே கூகுள் தேடுபொறி படங்கள் அப்படிங்கிற வார்த்தை நல்லா இருக்கு .!
//துன்பங்களுடன் போராடப் போரடத்தான் மனவலிமை உறுதி பெறும். இடரும் இன்னலும்தான் நம்முடைய திறனைச் சோதித்துக் கூர்மைபடுத்தும். தெளிவான இலக்குடனும், கடின உழைப்புடனும், தளராத தன்னம்பிக்கையுடன் விடாது முயன்றால், முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஸ்வரூப வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் நம் பெயரையும் சேர்த்திடலாம்///
சூப்பர் பதிவு பிரவீன்.....
வாழ்த்துக்கள் பல்லாயிரம்....
நல்ல பதிவு நண்பரே...
வித்தியாசமான பதிவு...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
//துன்பங்களுடன் போராடப் போரடத்தான் மனவலிமை உறுதி பெறும். இடரும் இன்னலும்தான் நம்முடைய திறனைச் சோதித்துக் கூர்மைபடுத்தும். தெளிவான இலக்குடனும், கடின உழைப்புடனும், தளராத தன்னம்பிக்கையுடன் விடாது முயன்றால், முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஸ்வரூப வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் நம் பெயரையும் சேர்த்திடலாம்.//
உண்மைதான் நண்பரே
“பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
தொடர்ந்து இதுபோன்று தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகளை எழுதுங்கள்....
நன்றி
நல்ல பதிவு
இறுதியில் நெஞ்சே தொட்டு விட்டது பதிவு
அருமை !!! தொடருங்கள் உங்கள் விடா முயற்சியை
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் பற்றிய பகிர்வு அருமை, முடிவுரை மிக அழகாக சொல்லி இருக்கீங்க\
விடா முயற்சின் விஸ்வரூபம் அருமை.
உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்துள்ளேன் முடிந்த போது வந்து பெற்று கொள்ளவும்.
//ம.தி.சுதா said...
தங்கள் பதிவு வித்தியாசமாக மனதை தொடுகிறது.. அருமை...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.//
தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே..!!
//பிரியமுடன் ரமேஷ் said...
10/10//
மிக்க மகிழ்ச்சி நண்பா..!
//பிரியமுடன் ரமேஷ் said...
ஓ சாரி நண்பா.. கட்டுரை பாணில போட்டிருந்தீங்களா மறந்தாப்புல மார்க் போட்டுட்டேன்.. முடிவுரை மிக அருமை...//
தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே..!!
//Samudra said...
thanks for the post//
நன்றிங்கோ..!!
//சைவகொத்துப்பரோட்டா said...
கட்டுரைக்கு நன்றி பிரவின். இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!!
தங்களுக்கும் நல்வாழ்த்துகள்.
sakthistudycentre.blogspot.com said...
தங்கள் பதிவு வித்தியாசமாக இருக்கிறது.
மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...
நிச்சயமாக இப்பவே பாலோ பண்றென், அறிமுகப்படுத்தறேன.
தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே..!!
கோமாளி செல்வா said...
// ஹவுஸின் இலட்சியம் இரயில் வண்டியை உடனே நிறுத்த பிரேக் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதானாம். ////
ஹி ஹி ஹி .. அபாய சங்கிலிய பிடிச்சு நிறுத்தினா முடிஞ்சது ..!!//
ஹெ..ஹெ... ரைட்டு சைத்தான் ரயில்ல வருது...!!
தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
இன்பம் தொடர! இதயம் குளிர!
துன்பம் தொலைய! தொல்லைகள் மறைய!
நண்பர்கள் வாழ்த்த! நானிலம் போற்ற!
இனிய இந்த வருடம்! இன்பம் இன்னும் சேர்க்கட்டும்!
என்றும்வல்ல இறைவன், இணைந்து இறை பாலிக்கட்டும்.
நல்ல பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வித்தியாசமான பதிவு...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
தமிழ் வலையுலகில் அறிவியல்,..
பாராட்டுகளும், நன்றிகளும்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
//கோமாளி செல்வா said...
//ஆனாலும் இந்த முயற்சிகள் எல்லாம் முயல் கொம்பாகவே முடிந்தனவாம்//
இப்பவெல்லாம் குதிரைக்கொம்புக்கு பதில் முயல்கொம்பா ..?//
ஹி..ஹி..ஹி.. இது இப்ப இல்ல மக்கா..!!! அப்ப..!!!
//கோமாளி செல்வா said...
//முழுவதிலும் இவரின் காற்று பிரேக்கே பொறுத்தப்பட்டதாம். வெஸ்டிங்ஹவுஸின் இந்த விடா முயற்சிதான் விஸ்வரூப வெற்றியாக உலகம் முழுவதும் பரவி பயன்பாட்டுக்கு வந்ததாம்.
//
உண்மைலேயே ரொம்ப கலக்கலான கட்டுரை அண்ணா ..
அதுவும் இல்லாம நீங்க சொல்லிருக்கிற விதம் , கூடவே கூகுள் தேடுபொறி படங்கள் அப்படிங்கிற வார்த்தை நல்லா இருக்கு .!//
கருத்துக்கு ரொம்ப நன்றி தம்பி..! இதுல ஏதும் உள்குத்து இல்லையெ...!!?? ஹி..ஹி.ஹி.. ரைட்டு..!!
//MANO நாஞ்சில் மனோ said...
//துன்பங்களுடன் போராடப் போரடத்தான் மனவலிமை உறுதி பெறும். இடரும் இன்னலும்தான் நம்முடைய திறனைச் சோதித்துக் கூர்மைபடுத்தும். தெளிவான இலக்குடனும், கடின உழைப்புடனும், தளராத தன்னம்பிக்கையுடன் விடாது முயன்றால், முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஸ்வரூப வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் நம் பெயரையும் சேர்த்திடலாம்///
சூப்பர் பதிவு பிரவீன்.....
வாழ்த்துக்கள் பல்லாயிரம்....//
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா..! தங்கள் வாழ்த்துகளுடன் தொடர்கிறென்.
//அரசன் said...
நல்ல பதிவு நண்பரே...//
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!
//சங்கவி said...
வித்தியாசமான பதிவு...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...//
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..! தங்களுக்கும் வாழ்த்துகள்.
///மாணவன் said...
//துன்பங்களுடன் போராடப் போரடத்தான் மனவலிமை உறுதி பெறும். இடரும் இன்னலும்தான் நம்முடைய திறனைச் சோதித்துக் கூர்மைபடுத்தும். தெளிவான இலக்குடனும், கடின உழைப்புடனும், தளராத தன்னம்பிக்கையுடன் விடாது முயன்றால், முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஸ்வரூப வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் நம் பெயரையும் சேர்த்திடலாம்.//
உண்மைதான் நண்பரே
“பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
தொடர்ந்து இதுபோன்று தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகளை எழுதுங்கள்....
நன்றி//
தங்களது வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி நண்பரே..!
//கல்பனா said...
நல்ல பதிவு
இறுதியில் நெஞ்சே தொட்டு விட்டது பதிவு அருமை !!! தொடருங்கள் உங்கள் விடா முயற்சியை//
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கல்பு..!
//Jaleela Kamal said...
ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் பற்றிய பகிர்வு அருமை, முடிவுரை மிக அழகாக சொல்லி இருக்கீங்க\
விடா முயற்சின் விஸ்வரூபம் அருமை.
உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்துள்ளேன் முடிந்த போது வந்து பெற்று கொள்ளவும்.//
தங்களது கருத்துக்கும் விருதுக்கும் மிக்க நன்றி அக்கா..!
//சிவகுமார் said...
தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!//
மிக்க நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே..!
//பிரஷா said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....//
மிக்க நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள் பிரஷா..!
//உருத்திரா said...
இன்பம் தொடர! இதயம் குளிர!
துன்பம் தொலைய! தொல்லைகள் மறைய!
நண்பர்கள் வாழ்த்த! நானிலம் போற்ற!
இனிய இந்த வருடம்! இன்பம் இன்னும் சேர்க்கட்டும்!
என்றும்வல்ல இறைவன், இணைந்து இறை பாலிக்கட்டும்.//
மிக்க நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே..!
//ஜெகதீஸ்வரன். said...
தமிழ் வலையுலகில் அறிவியல்,..
பாராட்டுகளும், நன்றிகளும்.//
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!
//ஜெகதீஸ்வரன். said...
புத்தாண்டு வாழ்த்துகள்.//
மிக்க நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே..!
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html
@பிரஷா.
தங்களது எழுத்தும் கவிதைகளும் மென்மேலும் மெருகேற்றத்துடன் ஒளிவீச எமது மனமார்ந்த வாழ்த்துகள்.!!! மேலும் தங்களதுவிருது பகிர்வுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் சகோதரி..!!
தன் முனைப்பு பகிர்வு.... தகவலும் புதியது பாராட்டுக்கள்.
//சி. கருணாகரசு said...
தன் முனைப்பு பகிர்வு.... தகவலும் புதியது பாராட்டுக்கள்.//
தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே..!
வணக்கம் நண்பரே, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!