பசங்களால் வெறுக்கப்படும் விஷயங்கள்..!
10:33 AM
Praveenkumar
வணக்கம் நண்பர்களே..!! மூன்றுமாத இடைவெளிக்குப் பிறகு புதுப்பிக்கும் பதிவு இது. (ஹெ... ஹெ.. ஹெ.. நாங்களும் இருக்கோம்னு சொல்லனும்ல... அதான்) இனிவருங்காலங்களில் பதிவுகளை பேச்சுவழக்கிலும் யதார்த்தமாகவும் எழுதலாம் என எண்ணியுள்ளேன்..! ஆகவே இது குறித்து யாராவது ஒரு பிரபலமான இயக்குனர் சொன்னால் நல்லாயிருக்குமே என எண்ணினேன். (தக்காளி நீயி போட போகுற மொக்கைப் பதிவுகளுக்கு இதுதான் குறைச்சலாக்கும்...) உடனே என் சிந்தனையில் உதித்தது பாரதிராஜாதான். இதோ அவர் எமது மாற்றத்தைப்பற்றி அவரது வழக்கமான அறிமுகத்துடன் உங்களுடன் பேசுவார். (ஹி..ஹி..ஹி.. இது ச்சும்மா கற்பனைக்காக மட்டுமே...)
என் இனிய வலையுலக தமிழ்மக்களே..!!
கிராமத்து வயற்காடுகளில் சுற்றித்திரிந்த இந்த கருங்குயில், வலைப்பூக்களில் தமிழ்தேனைப் பருகும் எண்ணத்துடனும், தமிழ்தேனின் சுவையை தமிழர்களிடம் பகிர்ந்திடும் முயற்சியிலும் கடந்தை சில கட்டுரைகளில் முழுவதும் தூயதமிழிலியே (ஆங்கில கலப்பின்றி) எழுத முயற்சித்தது.
தற்போது அந்த கருங்குயில், இப்படி தூயதமிழிலியே எழுதுவதால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது. பேச்சு வழக்கிலும் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும் எனும் சி்ந்தனை உதித்துள்ளதால், இனி வருங்காலங்களில் தனது இயல்பான எழுத்துநடையில் தமக்கு தெரிந்த கருத்துகளை பேச்சு வழக்கிலான கிறுக்கல்களுடனும், நண்பர்களாகிய தங்களது ஆதரவுடனும் பகிர்ந்துகொள்ளும் என ஆவலுடன் எதிர்ப்பார்க்கலாம்..!!
என்றும் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா..!!
பின்வருவன ச்சும்மா காமெடிக்காகவும், நக்கலுக்காகவும், லொள்ளுக்காகவும் மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். கொஞ்சம் ”சிரி”யஸாவே எடுத்துக்கோங்க... (இவை சிலசமயம் அப்படியே உல்டாவா..... பொண்ணுங்களுக்கும் பொருந்தும்)
பசங்களால் (பாய்ஸ்) வெறுக்கப்படும் இரண்டு விஷயம்.-
1.அழகான பொண்ணுங்க அண்ணா / தம்பி என அழைப்பது.
2.மொக்க / ச்சப்ப ஃபிகர்கள் மாமா / மச்சான் / அத்தான் என அழைப்பது.
* * * * * * *
மிகவும் கொடுமையான தருணம்.-
நாம் ஒருதலையாக காதலித்த பெண்ணிடம் நம் காதலை சொல்லும் போது, நமது உண்மையான காதலை புரிந்து கொள்ளாமல் நமக்கு அறிவுரை கூறும் தருணம். ”வேற நல்லா பொண்ணா பாருங்கண்ணா...!” (அடிபாவி மவள நீயி நல்ல பொண்ணு இல்லாயா..!?? #டவுட்டு) (இருதலை காதலில் இவ்வாறு சொல்லப்படும் போது அதை கொடுமையோ கொடுமை.. அவ்வ்வ்வ்வ்.......... ) # இங்கு நாம் என்பதில் எந்த உள்குத்தும் இல்லை. ஹி....ஹி...ஹி..ஹி... பொதுவாச் சொன்னேன்.
நல்லா சொன்னப் போ பொதுவா.. (ஹி..ஹி..ஹி..)
* * * * * * *
டிஸ்கி.- பிராக்கெட்ல போட்டு இருப்பது தங்களுடைய மைண்ட்வாய்ஸ்னு நான் நெனச்சு போட்டு இருக்கேன்.. அது ஊருக்கு ஊரு மாறுபடும். (ஹெ.. ஹெ.. இருக்காதா பின்ன...!! போங்க தம்பி கப்பித்தனமா டிஸ்கி போட்டுக்கிட்டு)
* * * * * * *





















