துணிவை துணையாக்குவோம்!

துணிவைத் துணையாக்கிஅச்சத்தை அச்சப்படுத்துவோம்!அகிலமே நமதென்றுஎதிலும் வெற்றி கொள்வோம்!மனதில் அச்சம் குடிகொண்டிருந்தால் உங்களால் எதையும் முழுமையாகச் செய்ய முடியாது. ஆகவே முதலில் அச்சத்தை மனதில் இருந்து வெளியேற்ற வேண்டும். அச்சத்தை வெளியேற்றும் ஆற்றல் தன்னம்பிக்கைக்குத் தான் உள்ளது. எனவே மனதில் தன்னம்பிக்கை சுடர் விட வேண்டும். மேலும் உங்கம் வாழ்க்கையில் வெற்றிபெற சமுதாயத்தில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களிடையே சுமூகமாகவும் இணக்கமாகவும் பழகவேண்டும். அப்பொழுது தான் அவர்களின் அன்பையும், உதவியையும் பெற்று உங்களால் உயர முடியும். அவ்வாறு அனைவரிடமும் அன்பாகவும், இயல்பாகவும் பழகுவதற்கும் அச்சம் தடையாக இருக்க ஒரு போதும்...Read more »

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றி வேற்கை (நறுந்தொகை)

இந்நூலை இயற்றியவர் கொற்கை நகரத்திலிருந்து ஆட்சி புரிந்த அரசர் அதிவீரராம பாண்டியன் என்பவர். இவர் பாண்டிய மரபினர். இவரை தென்காசிப் பாண்டியர் என்றும் கூறுவர். இவருடைய ஆட்சிக் காலம் 11-12ம் நூற்றாண்டு எனத் தெரிகிறது. இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவர். குருமூலமாக சிவ தீட்சை பெற்ற சிவபக்தர். இவர் இயற்றிய பிறநூல்கள் நைடதம், இலிங்கபுராணம், காசிக் காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி போன்றவை. இவருடைய சகோதரர் புலவர் வரதுங்க ராம பாண்டியன்.கடவுள் வாழ்த்துபிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.நூல் பயன்வெற்றி வேற்கை...Read more »