கண்ணீர்னா ரொம்ப பிடிக்குமாம்..!!


வணக்கம் நண்பர்களே..! மடகாஸ்கர் பகுதியில் தூங்கும் பறவையின் கண்களிலிருந்து, கண்ணீரை குடிக்கும் ஒருவகை அந்துப் பூச்சியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்களாம். பொதுவாக மான் போன்ற பாலூட்டிகளின் கண்களிலிருந்து அந்துப் பூச்சிகள் கண்ணீரை குடிக்குமாம். விலங்குகள் பூச்சிகளை விரட்டுவதில்லை. ஆனால், முதல் முறையாக பறவையின் கண்களிலிருந்து, அந்துப் பூச்சி கண்ணீர் குடிப்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடிதுள்ளனராம். அந்துப் பூச்சி கண்களை மூடிக்கொண்டு தூங்கும், பறவைகளின் கண்களிலிருந்து தும்பிக்கை போன்ற உறிஞ்சும் அவயத்தை பயன்படுத்தி, கண்ணீரை குடிக்கிறது. இது தூங்கும் பறவையை தொல்லை செய்வதில்லையாம். அந்துப் பூச்சிக்கு தேவையான உப்பு கண்ணீரிலிருந்து கிடைக்கிறது...Read more »