எமது கற்பனை கவிதைகள்!

என் வலை உலக தமிழ் நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்! மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிட்டுளேன் பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும், ஓட்டுகளையும் பதிவு செய்யுங்கள்! இப்படிக்கு வலைப்பதிவு வாசகன். பெண்ணே ! உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டு காயம்பட்ட வேடன் நான் ! உன் காந்தப்பார்வை வலை வீச்சீல் மாட்டித்துடிக்கும் மீனவன் நான் ! உன் நினைவுகளுடன் உருகி, உனக்காகவே வாழ்ந்து, கனவுகளுடன் காத்திருக்கும் மூடன் நான் ! *********** பெண்ணே ! மரங்களுக்கு மழைக்காலம் போல் பறவைகளுக்கு குளிர்காலம் போல் விலங்குகளுக்கு கோடை காலம் போல்...Read more »

படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோஅதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.=========================வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல!=========================ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.=========================நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,ஒரு நல்ல நண்பனின் மவுனம்இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.=========================நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;ஆனால் அனுபவமோதவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்=========================சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.அவற்றைக் கடந்து சென்றால்அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!=========================மேலாளர்: உன் தகுதி என்ன?சர்தார்: நான் Ph.Dமேலாளர்:...Read more »

சிந்தனை துளிகளை பகிர்வோம் !

1.நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும்இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்நீரோடை வெற்றி பெறுகிறது தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்2.ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்...3.வீழ்வதில் வெட்கப் படாதே! வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்!4.நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை மகிழ்ச்சியா வைத்துருக்க நாமும் விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம் 5.படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே. 6.மகான் போல் நீ வாழ...Read more »

காலத்தை வென்றவர்களின் பொன்மொழிகள்

சுவாமி விவேகானந்தர்:உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.வில்லியம் ஷேக்ஸ்பியர்:வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.அடால்ஃப் ஹிட்லர்:நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.ஆலன் ஸ்டிரைக்:இந்த உலகத்தில்...Read more »

பாய்ஸ் பொன்மொழிகள் - எழுத்தாளர் சுஜாதா

நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்.எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து வெல். முயற்சியை நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்.தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் மற்றவர்கள் நம்பவில்லையென்றாலும் 'நம்மால் முடியும்' என்பதை நம்பியவர்கள், முடியும் என்றால் முடியும்.தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான தோல்வி.. தோல்வி உங்களை அடையாளம் காட்டும் நான் மற்றபடி வாழ்ந்தால் இன்னும் தப்புகள் செய்வேன். களத்தில் குதியுஙகள்....Read more »

தமிழ்ப் பழமொழிகள்-4

மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும். மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம். மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி. மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா? மண்டையுள்ள வரை சளி போகாது. மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம். மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு. மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும். மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். மருந்தும் விருந்தும் மூன்று வேளை. மருந்தே யாயினும் விருந்தோடு உண். மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும். மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா? மல்லாந்து...Read more »

தமிழ்ப் பழமொழிகள்-3

நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா? நூலளவே யாகுமாம் நுண்ணறிவு. நூல் கற்றவனே மேலவன். நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு. நூற்றைக் கொடுத்தது குறுணி. நெய் முந்தியோ திரி முந்தியோ. நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? நெருப்பு என்றால் வாய்வெந்து போமா? நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ? நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும். நேற்று உள்ளார் இன்று இல்லை. நைடதம் புலவர்க்கு ஒளடதம். நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. நொறுங்கத் தின்றால் நூறு வயது. நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம். நோய்...Read more »

தமிழ்ப் பழமொழிகள்-2

சண்டிக் குதிரை நொண்டிச் சாரதிசத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமாசர்க்கரை என்றால் தித்திக்குமா?சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.சாண் ஏற முழம் சறுக்கிறது.சாது மிரண்டால் காடு கொள்ளாது.சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.சுக துக்கம் சுழல்...Read more »

தமிழ்ப் பழமொழிகள்-1

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.கடலுக்குக் கரை போடுவார் உண்டா?கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?கடல் திடலாகும், திடல் கடலாகும்.கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய்...Read more »

தமிழ்ப் பழமொழிகள்

அசையாமல் தின்கிறது வீடு.அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாதுஅஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?அடக்கமே பெண்ணுக்கு அழகு.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.அடாது செய்தவன் படாது படுவான்.அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.அந்தி மழை அழுதாலும் விடாது.அப்பன் அருமை மாண்டால் தெரியும்.அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்...Read more »

துணிவை துணையாக்குவோம்!

துணிவைத் துணையாக்கிஅச்சத்தை அச்சப்படுத்துவோம்!அகிலமே நமதென்றுஎதிலும் வெற்றி கொள்வோம்!மனதில் அச்சம் குடிகொண்டிருந்தால் உங்களால் எதையும் முழுமையாகச் செய்ய முடியாது. ஆகவே முதலில் அச்சத்தை மனதில் இருந்து வெளியேற்ற வேண்டும். அச்சத்தை வெளியேற்றும் ஆற்றல் தன்னம்பிக்கைக்குத் தான் உள்ளது. எனவே மனதில் தன்னம்பிக்கை சுடர் விட வேண்டும். மேலும் உங்கம் வாழ்க்கையில் வெற்றிபெற சமுதாயத்தில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களிடையே சுமூகமாகவும் இணக்கமாகவும் பழகவேண்டும். அப்பொழுது தான் அவர்களின் அன்பையும், உதவியையும் பெற்று உங்களால் உயர முடியும். அவ்வாறு அனைவரிடமும் அன்பாகவும், இயல்பாகவும் பழகுவதற்கும் அச்சம் தடையாக இருக்க ஒரு போதும்...Read more »

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றி வேற்கை (நறுந்தொகை)

இந்நூலை இயற்றியவர் கொற்கை நகரத்திலிருந்து ஆட்சி புரிந்த அரசர் அதிவீரராம பாண்டியன் என்பவர். இவர் பாண்டிய மரபினர். இவரை தென்காசிப் பாண்டியர் என்றும் கூறுவர். இவருடைய ஆட்சிக் காலம் 11-12ம் நூற்றாண்டு எனத் தெரிகிறது. இவர் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவர். குருமூலமாக சிவ தீட்சை பெற்ற சிவபக்தர். இவர் இயற்றிய பிறநூல்கள் நைடதம், இலிங்கபுராணம், காசிக் காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி போன்றவை. இவருடைய சகோதரர் புலவர் வரதுங்க ராம பாண்டியன்.கடவுள் வாழ்த்துபிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.நூல் பயன்வெற்றி வேற்கை...Read more »