எமது கற்பனை கவிதைகள்!

என் வலை உலக தமிழ் நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிட்டுளேன்
பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும்,
ஓட்டுகளையும் பதிவு செய்யுங்கள்!
இப்படிக்கு வலைப்பதிவு வாசகன்.


பெண்ணே !

உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டு

காயம்பட்ட வேடன் நான் !

உன் காந்தப்பார்வை வலை வீச்சீல்

மாட்டித்துடிக்கும் மீனவன் நான் !

உன் நினைவுகளுடன் உருகி,

உனக்காகவே வாழ்ந்து,

கனவுகளுடன் காத்திருக்கும் மூடன் நான் !

***********

பெண்ணே !

மரங்களுக்கு மழைக்காலம் போல்

பறவைகளுக்கு குளிர்காலம் போல்

விலங்குகளுக்கு கோடை காலம் போல்

உன்னை நினைக்கும் ஒவ்வொரு காலமும்

என்னில் வசந்த காலம் ! ஆனாலும்

நீ என்னிடம் பேசியது இறந்தகாலம் !

நான் எனக்குள் பேசுவது நிகழ்காலம் !

உன் நினைவுகளால் என்னாகுமோ என் எதிர்காலம் !

*************

பெண்ணே !

உன் நினைவுகளின் வரவு என்னை விட்ட நீங்காத செலவு !

உன்னால் தன்னம்பிக்கையை என்னுள் கூட்டிக்கொள்கிறேன் !

உனக்கு பிடிக்காததை என்னில் கழித்துக்கொள்கிறேன் !

உன்னை நினைத்தே என் திறமையை பெருக்கிக்கொள்கிறேன் !

உனக்காகவே என் வாழ்க்கையை வகுத்துக்கொள்கிறேன் !

என்றும் உன்னை எனக்கு 100 சதவீதம் பிடித்திருப்பதால்.....!

*************
நண்பர்களின் வருகைக்கு நன்றி!
மீண்டும் வருக!
தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
பிரியமுடன் பிரவீன்குமார்.
You can leave a response, or trackback from your own site.

2 Responses for this post

  1. உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!



    வாசகனாய் ஒரு கவிஞன் ,
    பனித்துளி சங்கர்
    http://wwwrasigancom.blogspot.com

  2. கவிஞர் பனித்துளி சங்கர் நண்பரே!!!
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகள் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி!நன்றி!நன்றி!மீண்டும் வருக!

    என்றும் நட்புடன்
    பிரியமுள்ள பிரவீன்குமார்.

Post a Comment