குறுஞ்செய்தி மொக்கைகள் - சிரிக்க.. சிந்திக்க..

முன் குறிப்பு: இந்த பதிவு முழுவதும் மொக்கை என்பதால் பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம். மேலும் ஆங்கிலத்தில் வரும் எஸ்.எம்.எஸ்களை தமிழில் மொழி பெயர்த்து நமது செந்தமிழில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்க்காகவே. உங்களுக்கு ஏற்கனவே இதுபோல் ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி வந்து இருக்கலாம். நமது தமிழில் எழுதி பார்க்கும் போதும் கொஞ்சம் மகிழ்ச்சி அதற்காகத்தான் இப்பதிவு

1.மரண மொக்கை - (குறுஞ்செய்தியில் வந்தது)
ஒரு ஊருல மொக்கசாமினு ஒருத்தன் இருந்தான். அவன் கடவுளை நினைத்து வரம் வேண்டி பயங்கரமா தவம் இருக்க, கடவுளும் அவன் மீது இரக்கப்பட்டு கண்முன் தோன்றி ”என்ன வரம் வேண்டும் கேள்”..! என்றார்.
இவன் இனி எனக்கு ”சாவே” வரக்கூடாது என்ற வரம் கேட்டான். அப்படியே ஆகட்டும் எனக்கூறி கடவுளும் சிரித்துக்கொண்டே மறைந்து விட்டாராம்..!

பிறகு இவன் வீட்டிற்கு புறப்பட்டு போகும் போது வழியில் ஒருவன் இவனைப் பார்த்து உன் பெயர் என்ன கேட்க, இவன் மொக்கமி என்றானாம். பாவம் அவனுக்கு கடைசி வரை ”சா”வே” வரலையாம்.
                                        * * * * * * * * * *
2.நேரம் கேட்டது பெரிய குற்றமா?
ஒருமுறை வயதான பெரியவர் ஒருவர் தொடர்வண்டிககு காத்திருந்தார். அருகில் இளைஞன் ஒருவன் நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தான். பிறகு பெரியவரிடம் ஐயா..! மணி என்ன ஆகிறது என்று கேட்டான். பெரியவர் கவனிக்காததுபோல் பதிலளிக்காமல் திரும்பிக்கொண்டார். இவனும் விடாமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அவரிடமே கேட்டுவிட்டான் ஐயா நான் இவ்வளவு நேரம் கேட்கிறேன் ஒரு பதிலும் சொல்லாமல் என்னை அவமதிப்பதுபோல் இருக்கீங்களே.? அது ஏன் என்று வினவினான். அதற்கு அவர் முதலில் நேரம் கேட்பீங்க,  பிறகு முகவரி கேட்பீர்கள் பிறகு நல்லா பேசி பழகிட்டோமே என்று பக்கத்து இருக்கையில அமருவீங்க, நான் இறங்கும்போகும் நிறுத்தத்தில் என் மகள் என்னை அழைத்துச் செல்ல வருவாள். நீ.. அவளை பார்த்து அழகுல மயங்கி வழிவ.. பிறகு தொல்லை பண்னுவ, பின்தொடருவ.., காதல்னு தொந்தரவு பண்ணி திருமணம் வரை கொண்டு வந்துவிடும், அவளும் ரொம்ப நல்லவன்னு உன்னையதான் கட்டிப்பனு அடம்பிடிப்பா, முதல்ல ஒரு கைகடிகாரமாவது வாங்குங்க..! இப்படி கைக்கடிகாரம்கூட வாங்க முடியாத ஏழை பையனை மருமகனாக அடைய விரும்பல...???!!!
                                        * * * * * * * * * *
3.சந்திப்புகள்
ஒரு இடத்தில் கணினி மென்பொருள் பொறியாளரும், இன்னொரு கணினி மென்பொருள் பொறியாளரும் சந்தித்துகொள்கிறார்கள். 
மற்றொரு இடத்தில் ஒரு பிச்சைக்காரரும் இன்னொரு பிச்சைக்காரரும் சந்தித்துகொள்கிறார்கள். 
இவர்களில் ஒருவர் மற்றவரை பார்த்து கேட்ட கேள்வி.

நீங்க எந்த பிளாட்பாரத்துல வேலை செய்யுறீங்க...??? 
                                       * * * * * * * * * *
பின்குறிப்பு: இது போன்று மொக்கை குறுஞ்செய்திகளை தங்களுடன் பகிர்வது குறித்து தங்கள் கருத்தை அறிய ஆவல்.
                                        * * * * * * * * * *
You can leave a response, or trackback from your own site.

16 Responses for this post

  1. பிரவீன்!! உமக்கு சாவே இல்லை!!!இஃகி!! இஃகி!!

  2. தமிழ் வளர்க்க இப்படியும் ஒரு வழியா?

  3. இஃகி!! இஃகி!! வாங்க.. தேவா சார். தங்களின் கருத்துக்கு நன்றி..!

  4. //தேவன் மாயம் said...
    தமிழ் வளர்க்க இப்படியும் ஒரு வழியா?//

    ஏதோ நம்மால் முடிந்தது. நடைமுறை வார்த்தைகளில் கொஞ்சம் தமிழை பயன்படுத்தி எழுதலாம் என்பதற்காகத்தான். ஆனால் முடியல.. தூய தமிழில் எழுதுவதற்கு.. இன்னொரு முறை படித்தால் எனக்கே அதற்கான பொருள் மறந்து போகிறது. காரணம் பேச்சு தமிழும் எழுத்து தமிழும் வெவ்வேறாக இருப்பதால்.. பேச்சுத் தமிழ் தூயத்தமிழாக பேசும்போதுதான்.. அதெல்லாம் சாத்தியமாகும் போலிருக்கு..!

  5. 2.நேரம் கேட்டது பெரிய குற்றமா?


    ..... நண்பர்கள், உங்களுக்கு SMS அனுப்பியது பெரிய "குற்றம்"......... ஆஆஆ.....

    ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

  6. வாங்க.. சித்ரா மேடம்..! தங்கள் நகைச்சுவை கருத்துக்கு நன்றி..!ஹா,ஹா,ஹா....!!

  7. //இந்த பதிவு முழுவதும் மொக்கை என்பதால் பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம்.///

    enakku pidichchathey athu mattum thaane...!!

    //காதல்னு தொந்தரவு பண்ணி திருமணம் வரை கொண்டு வந்துவிடும், அவளும் ரொம்ப நல்லவன்னு உன்னையதான் கட்டிப்பனு அடம்பிடிப்பா, ///

    ithukku pesaama avaru time sollirukkalaam..!!!

  8. ஹி ஹி செம காமெடி

  9. நேரம் கேட்டது பெரிய குற்றமா?

    அருமை நண்பா..

    தமிழ் வளர்க்க இப்படியும் ஒரு வழியா?

  10. நல்லது நீங்க சொன்னா மாதிரியே மொக்க தான்

    இன்னும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் :)வாழ்த்துக்கள்

  11. //ப.செல்வக்குமார் said...

    //இந்த பதிவு முழுவதும் மொக்கை என்பதால் பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம்.///

    enakku pidichchathey athu mattum thaane...!!

    //காதல்னு தொந்தரவு பண்ணி திருமணம் வரை கொண்டு வந்துவிடும், அவளும் ரொம்ப நல்லவன்னு உன்னையதான் கட்டிப்பனு அடம்பிடிப்பா, ///

    ithukku pesaama avaru time sollirukkalaam..!!!//
    வாங்க..ப.செல்வக்குமார் தங்களின் கருத்து பகிர்வுக்கு நன்றி..!

  12. கிரி said...

    ஹி ஹி செம காமெடி

    வாங்க நண்பரே..! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!

  13. வெறும்பய said...

    நேரம் கேட்டது பெரிய குற்றமா?

    அருமை நண்பா..

    தமிழ் வளர்க்க இப்படியும் ஒரு வழியா?

    வாங்க நண்பரே..!
    தமிழ் ஏற்கனவே வானளவு வளர்ந்துவிட்டது. நாம் அதை மேம்படுத்துவோம்..! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!

  14. //ஜில்தண்ணி - யோகேஷ் said...

    நல்லது நீங்க சொன்னா மாதிரியே மொக்க தான்

    இன்னும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் :)வாழ்த்துக்கள்//

    வாங்க நண்பரே..!
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!

  15. என்னாண்ட வாட்ச் இருக்கு , அந்த பெரியவர் அட்ரஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா ?

  16. வாங்க மங்குனி. நீங்க இப்பதான் வாட்சே வாங்கனீங்களோ..??? மறுபடியும் போய் அங்கேயே நில்லுங்க.. அந்த பெரியவர் வருவார்... அட்ரஸ் மட்டுமென்ன நீங்க கேட்க நினைப்பதெல்லாம் கேட்காமல் கிடைக்கலாம்..!!! ஹி...ஹி....ஹி..ஹா.. வருகைக்கும் கருத்தும் நன்றி அமைச்சரே..!

Post a Comment