கனிமொழியும், கணினிமொழியும் - ஓர் ஒப்பீடு

பதிவுல நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!
தமிழ்வாழ்க தமிழன்வளர்க என்று தலைப்பை வைத்து விட்டு தமிழைப்பற்றியும் எழுதாமல் தமிழனைப்பற்றியும் எழுதாமல்... (என்னத்த எழுதறது ஏதாவது தெரிந்தால்தானே) மாதத்திற்கு ஒரு முறை வரும் அமாவசை, பௌர்ணமி போல எப்பொழுதாவது பதிவும், பின்னூட்டமும்.. போட்டு நானும் ஒரு வாசகப்பதிவர்தான்னு தக்கவைத்துக் கொள்வதை தெரிந்தும், என்னையும் நம்பி பின்தொடர்பவர்களுக்கும், என்னை நிறைய எழுதுங்க.. அப்பப்ப.. வலைப்பக்கத்தை அப்டேட் பண்னுங்க என்று பின்னூட்டம் அளித்து ஊக்கமளிக்கும் சக பதிவுலக நண்பர்களுக்கும்  எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவு தமிழ்பழமொழிகளை வைத்து வலைப்பக்கம் (பிலாக்) குறித்த எமது சொந்த ஒப்பீட்டு கருத்துகளே..! ஏதாவது குறைபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். அடுத்த முறை மாற்றிக் கொள்கிறேன். சரி பதிவுக்கு வருவோம். பழம்பெருங் காலத்தில் கூறப்பட்ட (பழமை+மொழிகள்) பழ(கனி)மொழிகள் அனைத்தும் இன்றைய வலை(கணினி) மொழிக்கு  எவ்வாறு ஒத்துப்போகிறது என்று நீங்களே படித்துக்கூறுங்கள். (ஆங்கில கலப்பின்றி தூய தமிழில் எழுதவில்லை என யாரும் தவறாக நினைக்க வேண்டாம்... சில செய்திகள் இயல்பாய் சொன்னால்தான் நல்லா இருக்கும். மேலும் இப்பதிவு படிப்பதற்கு மட்டுமே ஆராய்ச்சிக்கு அல்ல....)

1.காற்றுள்ள போதே தூற்றிக் கொள்..!
நேரம் கிடைக்கும் போதே பதிவை எழுதிக் கொ(ல்)ள்..!

2.சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
என்னதான் பிரபல பதிவரா இருந்தாலும்.... வாசகருடைய ஓட்டும், காமெண்ட்ஸ்ம் தான் பெரிய ஹிட்ஸ் கொடுக்கும்.

3.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
பதிவின் அழகு டெம்ப்ளேட்டில் தெரியும்.


4.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
அதிக ஓட்டு வாங்கி, குறைந்த அலெக்ஸா டிராபிக் வாங்கி, ரொம்ப பிரபலமானாலும் ஐ.பி முகவரிக்கு ஆட்டோவும், பிலாக் பாஸ்வேர்ட் ஹேக்கிங்கும் செய்யப்படும்.

5.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்
 அதிக திரட்டிகளில் இணைத்தால் தான் பிரபல பதிவராக முடியும்.

6.விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
இன்றைய மொக்கைப்பதிவர்களே.. நாளைய சிறந்த பதிவர்கள் (எழுத்தாளர்கள்).

7.உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஓட்டு, காமெண்ட் போட்டவரை பிரபலபதிவரானுலும் நினை.

8.சிறு துரும்பும் பல்குத்த உதவும்
சிறிய :-) பின்னூட்டமும்.. பெரிய ஊக்கம் தரும்.

9.புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
என்னதான் பதிவு நல்லாயிருந்தாலும்.. சில பிரபல பதிவர்கள் கமெண்ட்ஸ்ம் ஓட்டும் போடவே மாட்டாங்க....

10.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
அதிக கேட்ஜட் இல்லாததே.... வலைப்பக்கத்தை வேகமாக திறககும்...

11.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
இமெயில், சாட்டிங், பிலாக் பழக்கம் பிரவுசிங்சென்டர், இன்டர்நெட்டே கதியன மாற்றும்.

12.உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது
ஓட்டும், கமெண்ட்ஸ்ம் போட்ட வாசகர்கள் பதிவை முழுசா படிச்சா... ஒருசில பதிவுகள் ஒன்னும் தேராது. (என்னுடைய பதிவுகளைப் போல)

13.செக்களவு பொன் இருந்தாலும் 
செதுக்கித் தின்றால் எத்தனை நாள் வரும்?.
எழுதுவதற்கு நிறைய பயனுள்ள தகவல்கள் இருந்தாலும் ஒரே மாதிரியான பதிவுகளையே பல பதிவர்கள் எழுதினால் எத்தனை பதிவுகள்தான் எழுத முடியும்?.

14.நொருங்கத் தின்றால் நூறு வயது
பல்லைக்கடிச்சிக்கினு இது போன்ற பதிவுகளை படித்து.. ஓட்டும், கமெண்ட்ஸ்ம் போட்டால் எப்பவும் நீங்க பிரபல பதிவர்தான்.
(ஓட்டும், கமெண்ட்ஸ்ம் வாங்க இப்படி ஒரு ஐஸா..)

15.அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்.
உடனுக்குடன் ஓட்டும், காமெண்ட்ஸ்ம் போட்டால் உங்க பதிவும் பிரபல பதிவுதான், நீங்களும் பிரபல பதிவர்தான்.

(இதெல்லாம் ஒரு (பொழப்பா)பதிவானு கூட கேட்கத்தோனும் உங்க கோபம் நியாயமானதுதான் வாங்க வந்து பின்னூட்டத்தில பின்னுங்க... இது வலையல்லவா அதனால்....!! )
* * * * * *  *
You can leave a response, or trackback from your own site.

23 Responses for this post

  1. அஹா தலைவா எப்படி இப்படியெல்லாம் இதுதான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவதோ ! இங்கு சொல்லி இருக்கும் ஒவ்வொரு கணினி மொழியும் எந்த பதிவரும் மறுக்க முடியாத உண்மைதான் . கலக்குறிங்க போங்க . சரியா சொன்னிங்க . மறுமொழி போட்டால்தான் மறுமொழி மற்றவர்களும் போடுறாங்க . சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் பண்டப்பரிமாற்று முறை என்றுதான் சொல்லவேண்டும் போங்க . அதிலும் இன்னும் பலர் இருக்கிறார்கள் பதிவை வாசிப்பதே இல்லை . பதிவை போஸ்ட் அடுத்த நொடியே ஆஹா ஓகோ என்று மறுமொழி போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள் .

  2. 7.உப்பிட்டவரை உள்ளளவும் நினை
    ஓட்டு, காமெண்ட் போட்டவரை பிரபலபதிவரானுலும் நினை.//

    ரெண்டும் செய்தாச்சி.!

  3. தமிழ்மணத்தில் ஓட்டுப்போடமுடியவில்லை!

  4. //நேரம் கிடைக்கும் போதே பதிவை எழுதிக் கொ(ல்)..! ///
    இது நான் செய்வது ..!
    //இன்றைய மொக்கைப்பதிவர்களே.. நாளைய சிறந்த பதிவர்கள் (எழுத்தாளர்கள்).///
    உண்மையாவா சொல்லுறீங்க ..!!

  5. //11.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
    இமெயில், சாட்டிங், பிலாக் பழக்கம் பிரவுசிங்சென்டர், இன்டர்நெட்டே கதியன மாற்றும்.///
    அட அப்படித்தாங்க...
    பட்டைய கிளப்பிருக்கீங்க ..!! அருமை ..

  6. // !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    அஹா தலைவா எப்படி இப்படியெல்லாம் இதுதான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவதோ ! இங்கு சொல்லி இருக்கும் ஒவ்வொரு கணினி மொழியும் எந்த பதிவரும் மறுக்க முடியாத உண்மைதான் . கலக்குறிங்க போங்க . சரியா சொன்னிங்க . மறுமொழி போட்டால்தான் மறுமொழி மற்றவர்களும் போடுறாங்க . சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் பண்டப்பரிமாற்று முறை என்றுதான் சொல்லவேண்டும் போங்க . அதிலும் இன்னும் பலர் இருக்கிறார்கள் பதிவை வாசிப்பதே இல்லை . பதிவை போஸ்ட் அடுத்த நொடியே ஆஹா ஓகோ என்று மறுமொழி போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள் .///
    பதிவுக்கு மெருகேற்றுவதாய்... தங்கள்... ஒரு கருத்துரையே 100 கருத்துரைகளுக்கு மேல் வாசித்த மகிழ்ச்சி என்னுள் ஏற்பட்டது நண்பா..!! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி.. நண்பரே..!!

  7. //தேவன் மாயம் said...
    7.உப்பிட்டவரை உள்ளளவும் நினை
    ஓட்டு, காமெண்ட் போட்டவரை பிரபலபதிவரானுலும் நினை.//

    ரெண்டும் செய்தாச்சி.!

    தமிழ்மணத்தில் ஓட்டுப்போடமுடியவில்லை!//

    ஓட்டும் கருத்தும் அளித்தமைக்கு மிக்க நன்றி மருத்துவரே..!!
    தமிழ்மணம் ஓட்டுபட்டை வருமளவுக்கு இன்னும் பிரபலமாகவில்லை.. நண்பரே.. ஹி..ஹி...ஹா!!

  8. //ப.செல்வக்குமார் said...
    //நேரம் கிடைக்கும் போதே பதிவை எழுதிக் கொ(ல்)..! ///
    இது நான் செய்வது ..!
    //இன்றைய மொக்கைப்பதிவர்களே.. நாளைய சிறந்த பதிவர்கள் (எழுத்தாளர்கள்).///
    உண்மையாவா சொல்லுறீங்க ..!!//

    உண்மைய சொல்லனும்னா இந்த பழமொழிக்கு முதலில் ஞாபகம் வந்தது கோமாளி செல்வா.. (அதாங்க நீங்கதான்), ஜில்தண்ணி யோகேஸ், வெறும்பய ஜெயந்த் இவங்கதான்... உடனே ஞாபகத்தில் தோன்றியது. மொக்கைப்பதிவர்கள் என்று சொல்லிக்கிட்டு என்ன பிரமாதமா எழுதுறாங்கன்னு.... அதான்.. அப்படியே போட்டுட்டேன்...
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி.. நண்பரே..!!

  9. ங்கப்பா முடியலடா சாமீ

    இவ்வளவு நாளா ஒக்காந்து இததான் யோசிச்சீங்களா

    நான் கூட மத்திய அமைச்சர் கனிமொழிய பத்தி எழுதியிருக்கீங்களோன்னு ஆசையா படிச்சேன்.. ஹா ஹா ஹா

    எல்லாமே கலக்கல் :)

  10. //ஜில்தண்ணி - யோகேஷ் said...
    ங்கப்பா முடியலடா சாமீ

    இவ்வளவு நாளா ஒக்காந்து இததான் யோசிச்சீங்களா

    நான் கூட மத்திய அமைச்சர் கனிமொழிய பத்தி எழுதியிருக்கீங்களோன்னு ஆசையா படிச்சேன்.. ஹா ஹா ஹா

    எல்லாமே கலக்கல் :)//

    உங்களவுக்கு எல்லாம் யோசிக்க முடியாது நண்பா..! இன்னும் புதுசா... யோசிப்பபோம்....!!
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி.. நண்பரே..!!

  11. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சான்சே இல்லை.... ஒவ்வொரு பழமொழியையும், பதிவுலகத்தை நன்கு புரிந்து கொண்டு, சரியான விகிதத்தில் சொல்லியிருக்கும் அழகுக்காகவே, இந்தாங்க ஒரு பூங்கொத்து.... சூப்பர், மக்கா! பாராட்டுக்கள்!

  12. ஹா ஹா எல்லா பாயிண்டையும் நல்ல நோட் பண்ணி கொண்டேன்.

  13. //Chitra said...
    ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சான்சே இல்லை.... ஒவ்வொரு பழமொழியையும், பதிவுலகத்தை நன்கு புரிந்து கொண்டு, சரியான விகிதத்தில் சொல்லியிருக்கும் அழகுக்காகவே, இந்தாங்க ஒரு பூங்கொத்து.... சூப்பர், மக்கா! பாராட்டுக்கள்!//
    வாங்க மேடம்..! தங்களது பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகளுடன் அளவில்லலா மகிழ்ச்சியடைந்தேன்..! தங்களது பூங்கொத்து பரிசுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி..!

  14. // Jaleela Kamal said...
    ஹா ஹா எல்லா பாயிண்டையும் நல்ல நோட் பண்ணி கொண்டேன்.//

    ஹா ஹா.. மிக்க மகிழ்ச்சி.
    தங்களது கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி மேடம்.

  15. வழக்கம்போல சுவாரசியமான பதிவு நண்பரே!

    பகிற்விற்க்கு மிக்க நன்றி!

  16. //ம. பிரேம்குமார் said...
    வழக்கம்போல சுவாரசியமான பதிவு நண்பரே!

    பகிற்விற்க்கு மிக்க நன்றி!//

    தங்களது கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பிரேம் சார்.

  17. Anonymous

    நன்றாக இருக்கிறது. ஆனால் பதிவே வேலையாக இருக்க வேண்டாம்.

  18. //பிரபு said...
    நன்றாக இருக்கிறது. ஆனால் பதிவே வேலையாக இருக்க வேண்டாம்.//

    தங்களின் வருகைக்கும் ஆலோசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. பிரபு சார். தங்களது ஆலோசனையை நிச்சயம் கடைபிடிக்கிறேன் சார்.

  19. அடிச்சு துவைச்சிட்டிங்க சாமி.

  20. //santhanakrishnan said...
    அடிச்சு துவைச்சிட்டிங்க சாமி.//
    தங்களது கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க சாமி..!

  21. // அதிக கேட்ஜட் இல்லாததே.... வலைப்பக்கத்தை வேகமாக திறககும்...
    பயனுள்ள குறிப்பு.

  22. //ந.ர.செ. ராஜ்குமார் said...
    // அதிக கேட்ஜட் இல்லாததே.... வலைப்பக்கத்தை வேகமாக திறககும்...
    பயனுள்ள குறிப்பு.//

    தங்களது கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே.!.

  23. பழைய பழமொழிக்கு - காலத்திற்கு ஏற்ற நவீன சிந்தனை.

Post a Comment