அஆஇ (அலைபேசியின் ஆபத்துகளும், இடர்களும்)

வணக்கம் நண்பர்களே..! நாம் இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அலைபேசியையும் (செல்போன்) நம்மையும் பிரிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

அலைபேசியை அதிகமாக பேசுவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுத் தகவல்களும், வலைப்பக்கங்களில் காணப்படும் உதாரணத்திற்கு...
நம்ம நண்பர் ! . பனித்துளி சங்கர் ! அவர்களின்
இன்று ஒரு தகவல் 21 - மனித இனத்தை மெல்ல அழிக்கும் மொபைல் போன்கள் !!!  இதுபோன்ற பயனுள்ள  கட்டுரைகளும் (இதுவரை படிக்காதவங்க அவசியம் படிப்பீங்கன்னு நம்புறேன்..!!) நாம் படித்து பல தகவல்கள் அறிந்தாலும், நம்மை அந்த நிமிடம் வரை மட்டுமே யோசிக்க வைக்கிறது. அதன் பிறகு அதைப்பற்றி நாம் அதிகம் கவனம் செலுத்தி யோசிப்பதில்லை. ஏனெனில் இயந்திரமயமான காலகட்டத்தில் அதற்கு நமக்கும் நேரமில்லை. சரி என்னதான் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்க நினைப்பது தெரிகிறது. இதோ எனது கருத்துப்பகிர்வுக்கு வந்துவிட்டேன்.

நாம் பேருந்தில் பயணம் செய்யும் போது நமக்கு அலைபேசி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நாம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பேருந்து படிகட்டில் பயணம் செய்யும் போது நமக்கு குறுஞ்செய்தியோ, அழைப்போ அல்லது தவறிய அழைப்போ வந்தால் (நம்மை தவறவைக்கும்) அவசியம் தவிர்ப்போம் என்பதே எனது முக்கிய கருத்து. ஏனெனில் பல விபத்துகளும் உயிரிழப்புகளும் அவற்றால் ஏற்படுகிறது.

படிக்கட்டு பயணத்தின் போது (வாகனம் ஓட்டும்போதும்) அழைப்பு வந்தால் தயவு செய்து (தவர்த்திடுங்கள்..!) எடுக்காதீர்கள்..!! ஏனெனில் அழைப்பது எமனாகவும் இருக்கலாம்..!!
* * * * * * *
You can leave a response, or trackback from your own site.

28 Responses for this post

 1. அவசியமான பதிவு நண்பரே.. இது குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்கிறது.. கூடவே அலட்சிய மனப்பாங்கும் இருக்கிறது..

 2. சிகரெட் பிடிச்சா உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தெரிஞ்சே செய்ற மாதிரிதான் இந்தப் பழக்கமும்.. வந்தா பாத்துக்கலாம்னு நினைப்புதான் இருக்கு இந்தமாதிரி செய்றவங்ககிட்ட..

  நல்ல விழிப்புணர்வுப் பதிவு நண்பரே..

 3. உண்மைதான் அண்ணா .,
  தொலைபேசிகள் தற்பொழுது தொல்லைபேசிகளாக மாறிவருவது வருந்தத்தக்கது. அதே போல வாகனங்களில் சென்றுகொண்டு தொலைபேசியைப் பயன்படுத்துவோர் அவர்கள் மட்டும் அல்லாது பிறருக்கும் தீங்கினை ஏற்படுத்துகின்றனர் ..!!

 4. //பிரியமுடன் ரமேஷ் said...
  அவசியமான பதிவு நண்பரே.. இது குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்கிறது.. கூடவே அலட்சிய மனப்பாங்கும் இருக்கிறது.. //

  தங்களது முதல் வருகைக்கும் கருத்துககும் மிக்க நன்றி நண்பரே..! தங்களது கருத்துகளும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவே உள்ளது.

 5. //சசிகுமார் said...
  Nice Information//

  தங்களது வருகைக்கும் கருத்துககும் மிக்க நன்றி நண்பரே..!

 6. //பதிவுலகில் பாபு said...
  சிகரெட் பிடிச்சா உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தெரிஞ்சே செய்ற மாதிரிதான் இந்தப் பழக்கமும்.. வந்தா பாத்துக்கலாம்னு நினைப்புதான் இருக்கு இந்தமாதிரி செய்றவங்ககிட்ட..

  நல்ல விழிப்புணர்வுப் பதிவு நண்பரே..//

  தங்களது முதல் வருகைக்கும் கருத்துககும் மிக்க நன்றி நண்பரே..! தங்களது கருத்தும் சிந்திக்க வைக்கிறது நண்பரே..!

 7. //ப.செல்வக்குமார் said...
  உண்மைதான் அண்ணா .,
  தொலைபேசிகள் தற்பொழுது தொல்லைபேசிகளாக மாறிவருவது வருந்தத்தக்கது. அதே போல வாகனங்களில் சென்றுகொண்டு தொலைபேசியைப் பயன்படுத்துவோர் அவர்கள் மட்டும் அல்லாது பிறருக்கும் தீங்கினை ஏற்படுத்துகின்றனர் ..!! //

  வாங்க செல்வா. தங்களது கருத்துகளும் உண்மைதான். சரியாகச் சொல்லியிருக்கீங்க.. தங்களது தொடர் ஆதரவுக்கு நன்றி.

 8. //வெறும்பய said...
  good info frd,...//

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!

 9. மிக மிக அவசியமான பதிவு! பல சாலை விபத்துக்களுக்கு இதுதானே காரணம். நன்றி!

 10. //எஸ்.கே said...
  மிக மிக அவசியமான பதிவு! பல சாலை விபத்துக்களுக்கு இதுதானே காரணம். நன்றி!//

  வாங்க.. எஸ்.கே. தங்களது வருகைக்கும் நறுக்கான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!

 11. இன்று ஒரு தகவல் 21 - மனித இனத்தை மெல்ல அழிக்கும் மொபைல் போன்கள் !!! ///

  அந்த பதிவு நான் படிக்கலை , இந்த வரிகளுக்கு சொல்லுகிறேன் அதெல்லாம் சும்மா பிரவீன் , முதன் முதல்ல எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கும் இந்த மாதிரி கருத்து வரத்தான் செய்யும். சுத்த பைத்தியக்காரத்தனம்

 12. //மங்குனி அமைச்சர் said...

  இன்று ஒரு தகவல் 21 - மனித இனத்தை மெல்ல அழிக்கும் மொபைல் போன்கள் !!! ///

  அந்த பதிவு நான் படிக்கலை , இந்த வரிகளுக்கு சொல்லுகிறேன் அதெல்லாம் சும்மா பிரவீன் , முதன் முதல்ல எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கும் இந்த மாதிரி கருத்து வரத்தான் செய்யும். சுத்த பைத்தியக்காரத்தனம்//

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அமைச்சரே..! ஆனால் நீங்கள் எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க..!!???

 13. //தேவன் மாயம் said...
  Really nice information praveen!!//

  வாங்க தேவா சார். தங்களது ஆதரவுககும், கருத்துக்கும் மிக்க நன்றி..!

 14. விழிப்புணர்வு பதிவு ..

 15. //அன்புடன் மலிக்கா said...

  விழிப்புணர்வு பதிவு ..//

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

 16. //தேவன் மாயம் said...
  Praveen !! welldone! Keep writting!!//

  மிக்க மகிழ்ச்சி தேவா சார். தங்களது ஆதரவுடனும், ஊக்கத்துடனும் தொடர்கிறேன். நன்றி சார்.

 17. மிக அவசியமான விழிப்புணர்வான பதிவு.. நன்றி...

 18. //பிரஷா said...
  மிக அவசியமான விழிப்புணர்வான பதிவு.. நன்றி... //

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரஷா..!

 19. அவசியாமான பதிவு...

 20. //பார்வையாளன் said...
  அவசியாமான பதிவு...//

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!

 21. பின்பற்ற வேண்டிய விசயம்! பகிர்வுக்கு நன்றி பிரவின்.

 22. //சைவகொத்துப்பரோட்டா said...
  பின்பற்ற வேண்டிய விசயம்! பகிர்வுக்கு நன்றி பிரவின்.//

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர் சைவகொத்துப்பரோட்டா..!!

 23. படிக்கட்டு பயணத்தின் போது (வாகனம் ஓட்டும்போதும்) அழைப்பு வந்தால் தயவு செய்து (தவர்த்திடுங்கள்..!) எடுக்காதீர்கள்..!! ஏனெனில் அழைப்பது எமனாகவும் இருக்கலாம்..!!////////////
  உண்மை. அவசியமான விழிப்புணர்வு பதிவு

 24. کاش شما هندی ها را از نزدیک میدیدم

Post a Comment