வெற்றிப்பாதையில் செல்வோமா...??!!!

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கருத்துப் பகிர்வை தங்களுடன்  பகிர்ந்திட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டமைக்கு பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

வெற்றிப்பாதையில் செல்வதற்கு நமது மனதிற்கு நல்ல எண்ணங்கள் வேண்டும். இடைவிடாத முயற்சியாலும், பயிற்சியாலும், அனுபவத்தினாலும் நாம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திக்கொண்டு வெற்றியடைவதற்கான வழிவகைகளை நாம் கற்றுகொள்ள முடியும்.

1.நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். (அதனை பெரும்பாலும் காலை தூங்கி எழுந்தவுடன் முயற்சி செய்யாதீர்கள் பல்லை துளக்கிவிட்டு முயற்சிக்கவும். சமயத்தில் உங்களுக்கே மயக்கம் வரலாம். ஹி.....ஹி....ஹி...)
   (நன்றி.- கூகுள் தேடுபொறி படம்) 

2.துக்கம் அதிகமானால் தனியறையில் கண்ணீர்விட்டு அழுதிடுங்கள். அந்த கண்ணீர் துளிகளிலேயே உங்கள் சோகமும் துக்கமும் கரைந்து போகட்டும். (அதற்காக தினமும் துக்கமா இருக்குனு... எப்போதும் தனியறையிலேயே இருக்காதீர்கள்..! அப்புறம் இரத்தக்கண்ணீர் இராதாரவினு நெனச்சாலும் நெனச்சுடுவாங்க.... ஹி...ஹி..ஹி...)

3.மகிழ்ச்சி வந்தால் உற்சாகம் பொங்க சத்தமாகப் பாடுங்கள். (அதற்காக பொது இடங்களிலோ அலுவலக (அ) நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் முயற்சிக்கும் துணிச்சல் வேண்டாம். உங்க பாட்டை கேட்டு நீங்க கொலை செய்ய முயற்சித்ததாக பிரச்சினைகள் வரலாம். ஹி...ஹி..ஹி.. )

நாம் எதை எப்படிப் பார்க்கிறோமோ, நினைக்கிறோமோ அப்படியே நாம் உருவாகிறோம் என்பது விதி. நம்மை நாம் எப்படி இருப்பதாகப் பாவித்துக் கொள்கிறோமோ நாளடைவில் அப்படியே ஆகிவிடுகிறோம். ”நான் உற்சாகமாக இருக்கிறேன்” என்று நினைத்துப்பாருங்கள். நினைப்பை நம்புங்கள். உற்சாகமாகவே அமையும்.

நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளுமே உற்சாகத்தை நமக்குள் ஏற்படுத்துகின்றது. நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொண்டால் வாழ்கையில் சலிப்பு இருக்காது. எதிலும் நிறைவு காணும் எண்ணம் தானாக வந்துவிடும். நிறைவு ஏற்பட்டால் நிச்சயம் மகிழ்ச்சி வரும். மகிழ்வுடன் பாதை அமைத்தால் அது நிச்சயம் வெற்றிப்பாதையாகத்தான் இருக்கும்.

என்ன நண்பர்களே..!!! நாம் நமது வெற்றிப்பாதையில் மகிழ்ச்சியுடன் பயணிப்போமா....!!!???
You can leave a response, or trackback from your own site.

70 Responses for this post

 1. தெளிவாக சொல்லியிருக்கீங்க நண்பரே சூப்பர்...

 2. //நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளுமே உற்சாகத்தை நமக்குள் ஏற்படுத்துகின்றது. நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொண்டால் வாழ்கையில் சலிப்பு இருக்காது. எதிலும் நிறைவு காணும் எண்ணம் தானாக வந்துவிடும். நிறைவு ஏற்பட்டால் நிச்சயம் மகிழ்ச்சி வரும். //

  முற்றிலும் உண்மையான கருத்து

  நன்றி நண்பரே

 3. ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க!

 4. //நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். //

  அப்ப செல்வா மொக்கையை படிச்சி சிரிக்கலாமா?

 5. //நாம் எதை எப்படிப் பார்க்கிறோமோ, நினைக்கிறோமோ அப்படியே நாம் உருவாகிறோம் என்பது விதி. நம்மை நாம் எப்படி இருப்பதாகப் பாவித்துக் கொள்கிறோமோ நாளடைவில் அப்படியே ஆகிவிடுகிறோம். ”நான் உற்சாகமாக இருக்கிறேன்” என்று நினைத்துப்பாருங்கள். நினைப்பை நம்புங்கள். உற்சாகமாகவே அமையும்.

  //

  இதை வாழ்வில் கடைபிடித்தால் வாழ்வு என்றும் மகிழ்ச்சிதான்!

 6. நல்லாத்தான்யா சொல்ற..

 7. எளிமையான , இயல்பான வழிகள் முன்னேற்றப்பாதையில் செல்ல !!!

  பகிர்தலுக்கு நன்றி !!!

 8. அட்டகாசமா இருக்குலே மக்கா....

 9. //இடைவிடாத முயற்சியாலும், பயற்சியாலும், அனுபவத்தினாலும் நாம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திக்கொண்டு வெற்றியடைவதற்கான வழிவகைகளை நாம் கற்றுகொள்ள முடியும்//

  சரியாக சொன்னாய் தம்பி...

 10. //அப்ப செல்வா மொக்கையை படிச்சி சிரிக்கலாமா?//

  அதுக்கு பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்....

 11. //1.நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். (அதனை பெரும்பாலும் காலை தூங்கி எழுந்தவுடன் முயற்சி செய்யாதீர்கள் பல்லை துளக்கிவிட்டு முயற்சிக்கவும். சமயத்தில் உங்களுக்கே மயக்கம் வரலாம். ஹி.....ஹி....ஹி...) ///

  இப்பிடி பட்ட ஆளுங்க நெதமும் காலையில மெரீனா பீச்ல சிரிக்கிறதா கேள்வி பட்டேன்....

 12. //3.மகிழ்ச்சி வந்தால் உற்சாகம் பொங்க சத்தமாகப் பாடுங்கள். (அதற்காக பொது இடங்களிலோ அலுவலக (அ) நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் முயற்சிக்கும் துணிச்சல் வேண்டாம். உங்க பாட்டை கேட்டு நீங்க கொலை செய்ய முயற்சித்ததாக பிரச்சினைகள் வரலாம். ஹி...ஹி..ஹி.. )///


  வேலைக்கு ஆப்பு வேணுமானால் ஆபீசில் முயற்ச்சிக்கவும்....

 13. //நாம் எதை எப்படிப் பார்க்கிறோமோ, நினைக்கிறோமோ அப்படியே நாம் உருவாகிறோம் என்பது விதி.//

  ரைட்டு மக்கா ரிப்பீட்டே.....

 14. //மகிழ்வுடன் பாதை அமைத்தால் அது நிச்சயம் வெற்றிப்பாதையாகத்தான் இருக்கும்//

  டச்சிங்....

 15. //என்ன நண்பர்களே..!!! நாம் நமது வெற்றிப்பாதையில் மகிழ்ச்சியுடன் பயணிப்போமா....!!!???//

  ஃபைனல் டச்சிங் டாப்பே மக்கா.....

 16. குறிப்புகளை நகைச்சுவை உணர்வோடு சொல்லி இருப்பது, இன்னும் நல்லா இருக்குது.

 17. //ரஹீம் கஸாலி said...

  super post//

  தங்களது கருத்துக்கு நன்றி தல.

 18. //மாணவன் said...

  தெளிவாக சொல்லியிருக்கீங்க நண்பரே சூப்பர்...//

  வாங்க தல கருத்துக்கு நன்றி.

 19. //மாணவன் said...

  //நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளுமே உற்சாகத்தை நமக்குள் ஏற்படுத்துகின்றது. நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொண்டால் வாழ்கையில் சலிப்பு இருக்காது. எதிலும் நிறைவு காணும் எண்ணம் தானாக வந்துவிடும். நிறைவு ஏற்பட்டால் நிச்சயம் மகிழ்ச்சி வரும். //

  முற்றிலும் உண்மையான கருத்து

  நன்றி நண்பரே//

  தங்களது தொடர் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி தல.

 20. //எஸ்.கே said...

  ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க!//

  தங்களது கருத்துக்கும் நன்றி தலைவா...!!!

 21. //எஸ்.கே said...

  //நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். //

  அப்ப செல்வா மொக்கையை படிச்சி சிரிக்கலாமா?//

  இதுக்கு நம்ப தல நாஞ்சில் மனோ பதில பாருங்க... ஹி...ஹி...

 22. //MANO நாஞ்சில் மனோ said...

  //அப்ப செல்வா மொக்கையை படிச்சி சிரிக்கலாமா?//

  அதுக்கு பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்....///

  அய்யகோ சஞ்சீவி மருந்தை சயனைடு என்கிறீர்களே!

 23. சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டுவது என்பது கத்திமேல் நடனம் போன்ற ஒரு ஆபத்தானதே . அதையும் அழகாய் உங்களின் இந்தப் பதிவு வெளிப்படுத்தி இருக்கிறது நண்பரே . தாமதமாய் பதிவுகள் தந்தாலும் அதில் சில விடயங்களை இந்த சமுதாயத்திற்கு விட்டு செல்கிறது என்பது மட்டும் உங்களின் பதிவுகளை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் அறிந்ததே . தொடந்து எழுதுங்கள் தங்களின் அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறேன் .

 24. அருமையான பதிவு...மனம் சம்பந்தப்பட்டது...

 25. //1.நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். (அதனை பெரும்பாலும் காலை தூங்கி எழுந்தவுடன் முயற்சி செய்யாதீர்கள் பல்லை துளக்கிவிட்டு முயற்சிக்கவும். சமயத்தில் உங்களுக்கே மயக்கம் வரலாம். ஹி.....ஹி....ஹி...//

  கோமாளி ப்ளாக் படிக்கணும்னு சொல்லுறீங்களா ? ஹி ஹி

 26. //3.மகிழ்ச்சி வந்தால் உற்சாகம் பொங்க சத்தமாகப் பாடுங்கள். (அதற்காக பொது இடங்களிலோ அலுவலக (அ) நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் முயற்சிக்கும் துணிச்சல் வேண்டாம். உங்க பாட்டை கேட்டு நீங்க கொலை செய்ய முயற்சித்ததாக பிரச்சினைகள் வரலாம். ஹி...ஹி..ஹி.. )
  //

  ஹி ஹி .. நீங்க தினம் பாடுரீங்கலாம்ல ..

 27. ஹி ஹி .. எனக்கு மூணாவது பாயிண்டும் அதற்க்கான உங்களோட கமெண்டும் செம காமெடியா இருந்துச்சு அண்ணா ,, சத்தியமா இன்னும் சிரிசிட்டே இருக்கேன் ,,,

 28. //எஸ்.கே said...

  //நாம் எதை எப்படிப் பார்க்கிறோமோ, நினைக்கிறோமோ அப்படியே நாம் உருவாகிறோம் என்பது விதி. நம்மை நாம் எப்படி இருப்பதாகப் பாவித்துக் கொள்கிறோமோ நாளடைவில் அப்படியே ஆகிவிடுகிறோம். ”நான் உற்சாகமாக இருக்கிறேன்” என்று நினைத்துப்பாருங்கள். நினைப்பை நம்புங்கள். உற்சாகமாகவே அமையும்.

  //

  இதை வாழ்வில் கடைபிடித்தால் வாழ்வு என்றும் மகிழ்ச்சிதான்!//

  ஆமாம் தல. தங்களது கருத்துக்கு நன்றி.

 29. //# கவிதை வீதி # சௌந்தர் said...

  நல்லாத்தான்யா சொல்ற..//

  கருத்துகக்கு நன்றி தல.

 30. //அருள் சேனாபதி said...

  எளிமையான , இயல்பான வழிகள் முன்னேற்றப்பாதையில் செல்ல !!!

  பகிர்தலுக்கு நன்றி !!!//

  தங்களது கருத்துக்கு நன்றி நண்பா..!!

 31. //MANO நாஞ்சில் மனோ said...

  அட்டகாசமா இருக்குலே மக்கா...//

  மிக்க நன்றி தலைவா..!!

 32. //MANO நாஞ்சில் மனோ said...

  //இடைவிடாத முயற்சியாலும், பயற்சியாலும், அனுபவத்தினாலும் நாம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திக்கொண்டு வெற்றியடைவதற்கான வழிவகைகளை நாம் கற்றுகொள்ள முடியும்//

  சரியாக சொன்னாய் தம்பி...//

  ம்ம் நன்றி அண்ணா..!!!

 33. //MANO நாஞ்சில் மனோ said...

  //அப்ப செல்வா மொக்கையை படிச்சி சிரிக்கலாமா?//

  அதுக்கு பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்....//

  ஹா...ஹா..ஹா.. அதானே..!!

 34. //MANO நாஞ்சில் மனோ said...

  //1.நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். (அதனை பெரும்பாலும் காலை தூங்கி எழுந்தவுடன் முயற்சி செய்யாதீர்கள் பல்லை துளக்கிவிட்டு முயற்சிக்கவும். சமயத்தில் உங்களுக்கே மயக்கம் வரலாம். ஹி.....ஹி....ஹி...) ///

  இப்பிடி பட்ட ஆளுங்க நெதமும் காலையில மெரீனா பீச்ல சிரிக்கிறதா கேள்வி பட்டேன்....//

  பாருங்கப்பா விஷயம் பஹ்ரைன் வரைக்கும் போயிருக்கு.... ஹி..ஹி..ஹி.. ரைட்டு.

 35. //MANO நாஞ்சில் மனோ said...

  //3.மகிழ்ச்சி வந்தால் உற்சாகம் பொங்க சத்தமாகப் பாடுங்கள். (அதற்காக பொது இடங்களிலோ அலுவலக (அ) நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் முயற்சிக்கும் துணிச்சல் வேண்டாம். உங்க பாட்டை கேட்டு நீங்க கொலை செய்ய முயற்சித்ததாக பிரச்சினைகள் வரலாம். ஹி...ஹி..ஹி.. )///


  வேலைக்கு ஆப்பு வேணுமானால் ஆபீசில் முயற்ச்சிக்கவும்....//

  ஹா...ஹா.. சரியாச் சொன்னிங்க தல.. ஹி..ஹி...

 36. //MANO நாஞ்சில் மனோ said...

  ரைட்டு மக்கா ரிப்பீட்டே.....
  டச்சிங்....
  ஃபைனல் டச்சிங் டாப்பே மக்கா.....//

  தங்களது மனமார்ந்த பாரட்டுகளுக்கும் கருத்துக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் தலைவா...!!

 37. //jaisankar jaganathan said...

  சூப்பர் தல் //
  வாங்க தல.. கருத்துக்கு நன்றி.

 38. //Chitra said...

  குறிப்புகளை நகைச்சுவை உணர்வோடு சொல்லி இருப்பது, இன்னும் நல்லா இருக்குது.//

  தங்களது கருத்துக்கு மிக்க நன்றி மேடம்.

 39. //எஸ்.கே said...

  //MANO நாஞ்சில் மனோ said...

  //அப்ப செல்வா மொக்கையை படிச்சி சிரிக்கலாமா?//

  அதுக்கு பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்....///

  அய்யகோ சஞ்சீவி மருந்தை சயனைடு என்கிறீர்களே!//

  இல்லை தல சயனைடு வை தான் நீங்க சஞ்சீவி மருந்து என்கீறீர்கள்..!! ஹி..ஹி..ஹி...

 40. //!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

  சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டுவது என்பது கத்திமேல் நடனம் போன்ற ஒரு ஆபத்தானதே . அதையும் அழகாய் உங்களின் இந்தப் பதிவு வெளிப்படுத்தி இருக்கிறது நண்பரே . தாமதமாய் பதிவுகள் தந்தாலும் அதில் சில விடயங்களை இந்த சமுதாயத்திற்கு விட்டு செல்கிறது என்பது மட்டும் உங்களின் பதிவுகளை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் அறிந்ததே . தொடந்து எழுதுங்கள் தங்களின் அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறேன் .//

  தலைவா தங்களது உற்காகமூட்டும் விரிவான கருத்துப்பகிர்வுக்கும், பாரட்டுக்கும் மிகுந்த நன்றிகள். தொடர்ந்து தங்களது ஆதரவுடன் தொடர்வேன்.

 41. //மைந்தன் சிவா said...

  அருமையான பதிவு...மனம் சம்பந்தப்பட்டது...//

  தங்களது கருத்துக்கு நன்றி தல.

 42. //கோமாளி செல்வா said...

  //1.நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். (அதனை பெரும்பாலும் காலை தூங்கி எழுந்தவுடன் முயற்சி செய்யாதீர்கள் பல்லை துளக்கிவிட்டு முயற்சிக்கவும். சமயத்தில் உங்களுக்கே மயக்கம் வரலாம். ஹி.....ஹி....ஹி...//

  கோமாளி ப்ளாக் படிக்கணும்னு சொல்லுறீங்களா ? ஹி ஹி //

  ஹி..ஹி..ஹி.. அதப்படிக்கறதவிட தூக்குல தொங்கலாம்... ஹி..ஹி..ஹி.. (ச்சும்மா மக்கா..!!)

 43. //கோமாளி செல்வா said...

  //3.மகிழ்ச்சி வந்தால் உற்சாகம் பொங்க சத்தமாகப் பாடுங்கள். (அதற்காக பொது இடங்களிலோ அலுவலக (அ) நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் முயற்சிக்கும் துணிச்சல் வேண்டாம். உங்க பாட்டை கேட்டு நீங்க கொலை செய்ய முயற்சித்ததாக பிரச்சினைகள் வரலாம். ஹி...ஹி..ஹி.. )
  //

  ஹி ஹி .. நீங்க தினம் பாடுரீங்கலாம்ல ..//

  ஹெ..ஹெ.. நானு.. போங்க காமெடி பண்ணிக்கிட்டு... ஹி..ஹி..ஹி...

 44. //கோமாளி செல்வா said...

  ஹி ஹி .. எனக்கு மூணாவது பாயிண்டும் அதற்க்கான உங்களோட கமெண்டும் செம காமெடியா இருந்துச்சு அண்ணா ,, சத்தியமா இன்னும் சிரிசிட்டே இருக்கேன் ,,,//

  ஹா...ஹா...ஹா.. ரொம்ப நன்றி மக்கா....!!! கருத்துக்கு....

 45. //முனைவர்.இரா.குணசீலன் said...

  நல்ல பகிர்வு நண்பா //

  தங்களது கருத்துக்கு நன்றி பேராசிரியரே...!!!!

 46. thank you for your words....

 47. //ksground said...

  thank you for your words....//

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!!

 48. வணக்கம் நண்பரே, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!

 49. மகிழ்ச்சியூட்டும்
  எழுச்சியூட்டும் பதிவு!
  நன்றி!

 50. //மாணவன் said...
  வணக்கம் நண்பரே, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!//
  தங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா..!

 51. //NIZAMUDEEN said...
  மகிழ்ச்சியூட்டும்
  எழுச்சியூட்டும் பதிவு!
  நன்றி!//

  தங்களது வருகைக்கும் கருத்துக்கம் நன்றி நண்பரே..!!

 52. எமது தளத்தினை பார்வையிட்டு கருத்துரை இட்டதற்கு மிக்க நன்றி. தங்களின் வலைபூ கண்டேன் மிக சிறப்பு. பணி சிறக்க வாழத்துக்கள்.

 53. //கோவை செய்திகள் said...

  எமது தளத்தினை பார்வையிட்டு கருத்துரை இட்டதற்கு மிக்க நன்றி. தங்களின் வலைபூ கண்டேன் மிக சிறப்பு. பணி சிறக்க வாழத்துக்கள்.//

  மிக்க மகிழ்ச்சி நண்பNuதங்களது வாழ்திற்கும் வருகைக்கும்...

 54. //Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

  வாழ்த்துகள்!//

  மிக்க நன்றி நண்பரே..!!

 55. உள்ளேன் ஐயா
  பயணிக்கிறேன் நானும்

 56. //siva said...

  உள்ளேன் ஐயா
  பயணிக்கிறேன் நானும்//
  தங்களது வருகைக்கும் பன்தொடர்ந்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!!

 57. Anonymous

  உற்சாக டானிக்...
  படிக்க படிக்க உற்சாகம் தானாக வரும்...

 58. super. பிரவீன். விளக்கம் அருமை.

 59. தெளிவாக சொல்லியிருக்கீங்க நண்பரே..

  அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

 60. வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
  http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_17.html

 61. //"குறட்டை " புலி said...

  உற்சாக டானிக்...
  படிக்க படிக்க உற்சாகம் தானாக வரும்...// தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா.

 62. //தோழி பிரஷா said...

  super. பிரவீன். விளக்கம் அருமை.// தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தோழி.

 63. //வேடந்தாங்கல் - கருன் said...

  தெளிவாக சொல்லியிருக்கீங்க நண்பரே..

  அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..// தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா.

 64. //எஸ்.கே said...
  வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி! // தங்களது தகவலுக்கும் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி தலைவா.

 65. //நம்மை நாம் எப்படி இருப்பதாகப் பாவித்துக் கொள்கிறோமோ நாளடைவில் அப்படியே ஆகிவிடுகிறோம்.//

  சரியாக சொன்னீர்கள்.

 66. //yohannayalini said...

  //நம்மை நாம் எப்படி இருப்பதாகப் பாவித்துக் கொள்கிறோமோ நாளடைவில் அப்படியே ஆகிவிடுகிறோம்.//

  சரியாக சொன்னீர்கள்.// தங்களது கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிங்க..!!!!

Post a Comment