அலைபேசியும் - குறுஞ்செய்திகளும்

வணக்கம் நண்பர்களே..! முந்தைய இடுகையில் அஆஇ (அலைபேசியின் ஆபத்துகளும், இடர்களும்) பற்றி பார்த்தோம். இப்பதில் அவற்றின் அவசியம் குறித்தும், அவற்றின் மூலம் நம் மக்கள் செய்யும் அட்டகாசங்கள் குறித்தும் யாமறிந்தவரை பகிர்கிறேன். அதற்கு முன்பாக அலைபேசியின் முக்கிய அவசியங்களை காண்போம். (ஃக்கி...ஃக்கி.. உங்களுக்கு தெரியாததா...????!!!!!)

அலை(கொலை)பேசியின் அவசியம்.-

நமது வருகை குறித்து தெரிவிக்கவும், காலதாமதம் ஏற்பட்டால் அறிவிக்கவும், தவறிய அழைப்பு செய்ய (இது பெரும்பாலும் இளம்வயது பெண்கள் செய்கிறார்கள்) முக்கியமான செய்தி பேச, உரையாட, தகவல் பரிமாற, பொழுது போக்க, படம் பார்க்க, பாட்டு கேட்க, கடலைபோட, மொக்கைபோட, கூட்டஅழைப்பில் அரட்டை அடிக்க அல்லது கும்மியடிக்க, மற்றும் குறுஞ்செய்தியில் அரட்டை அடிக்க, மின்னஞ்சல் பாரக்க, சமூக வலைதளங்களில் கருத்துப்பகிர, வலைப்பக்கம் எழுத, என்று இப்படி அவரவர்தேவைக்கேற்ப சொல்லிக் கொண்டே போகலாம்... மேலும் இதுகுறித்து ஒரு பெரிய்ய்ய...... பதிவே போடலாம். (அதுக்கு நிறைய பேர் இருக்காங்க. அதனால அதைநான் விட்டுட்டுட்டேன்)

பெரும்பான்மையான குறுஞ்(அறுவை) செய்திகள்.-

அலைபேசிகள் குறுஞ்செய்திகளை பகிர்வதில் (ம) பரிமாறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு ஒரு சில.. இந்தியா முழுவதும் சுற்றிவிட்டு மீண்டும் நமக்கே வரும் அம்மா கவிதை, காதல் கவிதை, நட்பு கவிதை,  கருவறை கவிதை, கல்லரை கவிதை,........  

தயவு செய்து உதவுங்கள். உயர்காக்க இரத்தம் கொடுத்து உதவுங்கள், இதயஅறுவை சிகிச்சைக்கு ரூபாய் ஐந்து இலட்சம் தேவை, (பெரும்பாலும் போலியானவை) உங்களை எனக்கு முன்பின் தெரியாது. இதை 20 பேருக்கு முன்அனுப்புங்கள்  எனக்கு ஒரு குறுஞ்செய்திக்கு 10 பைசா கிடைக்கும், 

இன்று இரவுக்குள் 25 பேருக்கு இந்த குறுஞ்செய்தியை முன்அனுப்புங்கள் விரைவில் நல்ல செய்தி வரும். இல்லாவிட்டால் உங்கள் ப்ரியமானவர் உங்களை விட்டு பிரிந்திடுவார். அனுப்பினால் உங்களை கடவுள் காப்பாற்றுவார்.. (பெரும்பாலும் ஆங்கிலத்திலே வரும்.)

இது போன்று ஒரு ஐந்தாறு வகையான குறுஞ்செய்தி உள்ளது. நான் அலைபேசி வாங்கிய நாள்முதல் இப்படித்தான் வந்து தொலைகிறது. நானும் அதில் ஒரு சில ரசித்தவைகள் மற்றும் பிடித்தவைகளை மட்டும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை தொல்லைப்படுத்துவதுண்டு. என்னன்வோ எழுத வந்து உருப்படியா எதுவும் சொல்லாமல் நேரத்தை வீணாக்கிட்டேன். (சரி பதிவுனு எழிதினால் ஒரு சில மொக்கைகள் வரத்தானே செய்யும்.) க்கி..ஃக்கி.. மீண்டும் வருவேன். அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியாக ஒரு சமூக கருத்துடன் பகிர்கிறேன்.

முக்கிய குறிப்பு.-
இப்பதிவில் முடிந்தவரையில் தூயதமிழில் எழுத முயற்சித்திருக்கிறேன். (இணைக்கப்பட்டுள்ள படத்தை தவிர) ஏதாவது கலப்பு தமிழ் இருந்தால் தெரிவித்து, அதற்கு சரியான செந்தமிழை குறித்துக் காட்டவும். பதிவில் திருத்தி்க் கொள்கிறேன்.
You can leave a response, or trackback from your own site.

30 Responses for this post

  1. நமக்கு எதுக்கு பாஸ் இப்படி மொக்கையா ஒரு பதிவு..

  2. //தவறிய அழைப்புகள்//

    தமிழ் நல்லாவே இருக்கு பிரவின்.

  3. (பெரும்பாலும் போலியானவை) உங்களை எனக்கு முன்பின் தெரியாது. இதை 20 பேருக்கு முன்அனுப்புங்கள் எனக்கு ஒரு குறுஞ்செய்திக்கு 10 பைசா கிடைக்கும்,


    ///////இன்று இரவுக்குள் 25 பேருக்கு இந்த குறுஞ்செய்தியை முன்அனுப்புங்கள் விரைவில் நல்ல செய்தி வரும். இல்லாவிட்டால் உங்கள் ப்ரியமானவர் உங்களை விட்டு பிரிந்திடுவார். அனுப்பினால் உங்களை கடவுள் காப்பாற்றுவார்.. (பெரும்பாலும் ஆங்கிலத்திலே வரும்.)
    .///////////

    என்ன ஒரு வில்லத்தனம் தக்காளி இதையே போலப்பாத்தான் பல பேரு இருக்காங்க என்று நினைக்கிறேன் .


    ஆனா இதில் பாருங்க இறுதியில் ஒன்று சொன்னிங்க பெரும்பாலும் இந்த குறுஞ்செய்தி ஆங்கிலத்தில்தான் வரும் என்று .
    நாங்கதான் ஆங்கிலத்தைப் பார்த்தாலே ஆறு கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் பொய்தானே நிற்போம் .

  4. அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியாக ஒரு சமூக கருத்துடன் பகிர்கிறேன்.

    //

    கண்டிப்பா வாங்க.. நாங்க எங்க போகப் போறோம்...

  5. தமிழிலேயே எழுத முயன்றதற்கு வாழ்த்துக்கள். தவறுகள் ஏதும் தெரியலை

  6. //பிரியமுடன் ரமேஷ் said...
    நமக்கு எதுக்கு பாஸ் இப்படி மொக்கையா ஒரு பதிவு..//

    நாமும் முயற்சித்து பார்க்கலாமே என்னுதான். ஹி.. ஹி..
    அடுத்த பதிவுல கருத்து இருக்கும்.

  7. சைவகொத்துப்பரோட்டா said...
    //தவறிய அழைப்புகள்//

    தமிழ் நல்லாவே இருக்கு பிரவின்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

  8. !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
    என்ன ஒரு வில்லத்தனம் தக்காளி இதையே போலப்பாத்தான் பல பேரு இருக்காங்க என்று நினைக்கிறேன் .


    ஆனா இதில் பாருங்க இறுதியில் ஒன்று சொன்னிங்க பெரும்பாலும் இந்த குறுஞ்செய்தி ஆங்கிலத்தில்தான் வரும் என்று .
    நாங்கதான் ஆங்கிலத்தைப் பார்த்தாலே ஆறு கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் பொய்தானே நிற்போம் .

    யாரு தல நீங்களா..??? ஹி.. ஹி.. நம்பிட்டேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

  9. வெறும்பய said...
    அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியாக ஒரு சமூக கருத்துடன் பகிர்கிறேன்.

    //

    கண்டிப்பா வாங்க.. நாங்க எங்க போகப் போறோம்...

    நிச்சயம் வாங்க நண்பரே..!தங்போதைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

  10. //மோகன் குமார் said...
    தமிழிலேயே எழுத முயன்றதற்கு வாழ்த்துக்கள். தவறுகள் ஏதும் தெரியலை//

    வாங்க மோகன் சார். மிக நீண்ட இடைவெளி்ககுப்பிறகு நம்ப பக்கம் வந்தமைக்கும் ஊக்கமிக் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

  11. நல்லா எழுதியிருக்கீங்க..

    நீங்கள் சொன்ன விசயங்கள் மட்டுமில்லாமல்.. செல்போன் நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு கால் பண்ணியும்.. மெசேஜ் அனுப்பியியும் தொந்தரவு பண்ணுவாங்க..

    ///அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியாக ஒரு சமூக கருத்துடன் பகிர்கிறேன்.///

    சரிங்க..

  12. //பதிவுலகில் பாபு said...
    நல்லா எழுதியிருக்கீங்க..

    நீங்கள் சொன்ன விசயங்கள் மட்டுமில்லாமல்.. செல்போன் நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு கால் பண்ணியும்.. மெசேஜ் அனுப்பியியும் தொந்தரவு பண்ணுவாங்க..

    ///அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியாக ஒரு சமூக கருத்துடன் பகிர்கிறேன்.///

    சரிங்க..//

    நீங்களும் சரியாதான் சொல்லியிருக்கீங்க.. அதை தடுக்ககூட தொந்தரவு செய்யாதீர்கள் (Do not distrub service) சேவை உள்ளது. ஆனால் நம்மவர்களது அட்டகாசத்தை எப்படி சமாளிப்பதோ தெரியல.. பாபு..???!!!தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

  13. நான் ஏர்டெல் கனெக்சன் யூஸ் பண்ணிட்டு இருக்கேங்க.. கனைக்சன் வாங்கின புதுசுல தொந்திரவு பண்ணிட்டே இருந்தாங்களேன்னு டு நாட் டிஸ்டர்ப் ஆக்டிவேட் பண்ணினேன்.. அதுக்கும் அவங்க தந்திரம் வச்சிருக்காங்க.. எப்படின்னா.. அந்த சேவையை ஆக்டிவேட் பண்ணி 45 நாள்லதான் ஆக்டிவேசன் ஆகும்னு சொல்லிட்டானுங்க..

    இப்போ ஓகே.. :-))

  14. நன்றாக இருக்கிறது நண்பரே..

  15. செந்தமிழில் எழுதிவிட்டு இப்படி ஒரு கேள்வியா? பிரவீன்!

  16. //பதிவுலகில் பாபு said...
    நான் ஏர்டெல் கனெக்சன் யூஸ் பண்ணிட்டு இருக்கேங்க.. கனைக்சன் வாங்கின புதுசுல தொந்திரவு பண்ணிட்டே இருந்தாங்களேன்னு டு நாட் டிஸ்டர்ப் ஆக்டிவேட் பண்ணினேன்.. அதுக்கும் அவங்க தந்திரம் வச்சிருக்காங்க.. எப்படின்னா.. அந்த சேவையை ஆக்டிவேட் பண்ணி 45 நாள்லதான் ஆக்டிவேசன் ஆகும்னு சொல்லிட்டானுங்க..

    இப்போ ஓகே.. :-)) //

    ஆஹா..! இப்படி வேறு செய்கிறார்களா..??? ரொம்ப கொடுமைங்க பாபு..! இப்ப புரிகிறது தங்களது ஆதங்கத்திற்கான காரணம். கருத்துப்பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

  17. //ஜெரி ஈசானந்தன். said...
    நன்றாக இருக்கிறது நண்பரே..//

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

  18. //தேவன் மாயம் said...
    செந்தமிழில் எழுதிவிட்டு இப்படி ஒரு கேள்வியா? பிரவீன்! //

    வாங்க மருத்துவர் அய்யா, எல்லாம் தங்களது ஊக்கமி்க்க தொடர் ஆதரவால் ஏற்பட்ட முயற்சிதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  19. வணக்கம் தங்களின் கவிதை தமிழ் ப்ரபஞ்சம் தளத்தில் தங்கள் பெயரிலயே மீள்பதிவு செய்துள்ளோம்

    http://alltamilblognews.blogspot.com/2010/11/blog-post_1817.html

  20. வணக்கம்.... தமிழ்வாசியில் வந்த இந்த பதிவையும் படிச்சு பாருங்களேன்
    ..http://tamilvaasi.blogspot.com/2010/09/sms.html

  21. //
    (இது பெரும்பாலும் இளம்வயது பெண்கள் செய்கிறார்கள்) ///

    என்ன நக்கலா ..?

  22. ///மொக்கைபோட, //

    தினம் ஒரு மொக்கை பத்தி சொல்லுறீங்களா ..?

  23. //அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியாக ஒரு சமூக கருத்துடன் பகிர்கிறேன்//

    ஐயோ , காப்பாத்துங்க .

  24. @sweatha இதோ பதிவுகளை இணைத்து விடுகிறேன். தகவலுக்கு நன்றி..!

  25. //Prakash_in தமிழ்வாசி said...
    வணக்கம்.... தமிழ்வாசியில் வந்த இந்த பதிவையும் படிச்சு பாருங்களேன்
    ..http://tamilvaasi.blogspot.com/2010/09/sms.html //

    மிகவும் அருமையாக சொல்லியிருக்கீங்க நண்பரே..! பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி.

  26. //ப.செல்வக்குமார் said...
    //
    (இது பெரும்பாலும் இளம்வயது பெண்கள் செய்கிறார்கள்) ///

    என்ன நக்கலா ..? //

    ஹ...ஹா.. உண்மைதானே செல்வா..!!???

  27. //ப.செல்வக்குமார் said...
    ///மொக்கைபோட, //

    தினம் ஒரு மொக்கை பத்தி சொல்லுறீங்களா ..?//

    ஆமாம் அதேதான் சரியா சொல்லீட்டீங்க..!!!

  28. //ப.செல்வக்குமார் said...
    //அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சியாக ஒரு சமூக கருத்துடன் பகிர்கிறேன்//

    ஐயோ , காப்பாத்துங்க . //

    ஹ...ஹா.. சிக்கியாச்சு அப்புறம் எங்கிருந்து காப்பாத்துறது.

    தங்கள் கருத்துக்கு நன்றி செல்வா..!

  29. //alltamilblognews said...
    வணக்கம் தங்களின் கவிதை தமிழ் ப்ரபஞ்சம் தளத்தில் தங்கள் பெயரிலயே மீள்பதிவு செய்துள்ளோம்

    http://alltamilblognews.blogspot.com/2010/11/blog-post_1817.html //

    தங்களது ஆதரவுக்கும் ஊக்கமிக்க சேவைக்கும் மிக்க நன்றி..!

  30. டமில் வாழ்க... பதிவு அருமை. வாழ்த்துக்கள்

Post a Comment