1500 ஃபாலோவர்ஸ் - பனித்துளி சங்கருக்கு வாழ்த்துகள்..!!

1500 ஃபாலோவர்ஸ் - பனித்துளி சங்கருக்கு வாழ்த்துகள்..!!

வணக்கம் நண்பர்களே..!! பதிவின் தலைப்பிலேயே அனைவருக்கும் புரிந்திருக்கும். பதிவு யாரைப்பற்றி என்றும், எதற்காக என்றும், ஆம் நண்பர்களே..!! நம்ப பனித்துளி சங்கர் 1500 ஃபாலோவர்ஸ் பெற்றமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கவே இப்பதிவு. இதுதான் அவரது பிரபல லோகோ இது அனைவரும் அறிந்ததே. இது அவரது போரட்டம் நிறைந்த வாழ்க்கையை விளக்குவதாகவும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினஉழைப்பு இவற்றால் தன்னுடைய இலக்குகளை அடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எல்லா மொழி அகராதிகளிலும் பிடிக்காத ஒரே வார்த்தை ”முடியாது” என்பதுதான். முடியாததையும் முயற்சித்து தோற்றுப்போவோம் எனும் தன்னம்பிக்கையின் மறுபெயர். தொடர் தோல்விகளால்...Read more »

பசங்களால் வெறுக்கப்படும் விஷயங்கள்..!

பசங்களால் வெறுக்கப்படும் விஷயங்கள்..!

வணக்கம் நண்பர்களே..!! மூன்றுமாத இடைவெளிக்குப் பிறகு புதுப்பிக்கும் பதிவு இது. (ஹெ... ஹெ.. ஹெ.. நாங்களும் இருக்கோம்னு சொல்லனும்ல... அதான்) இனிவருங்காலங்களில் பதிவுகளை பேச்சுவழக்கிலும் யதார்த்தமாகவும் எழுதலாம் என எண்ணியுள்ளேன்..! ஆகவே இது குறித்து யாராவது ஒரு பிரபலமான இயக்குனர் சொன்னால் நல்லாயிருக்குமே என எண்ணினேன். (தக்காளி நீயி போட போகுற மொக்கைப் பதிவுகளுக்கு இதுதான் குறைச்சலாக்கும்...) உடனே என் சிந்தனையில் உதித்தது பாரதிராஜாதான். இதோ அவர் எமது மாற்றத்தைப்பற்றி அவரது வழக்கமான அறிமுகத்துடன் உங்களுடன் பேசுவார். (ஹி..ஹி..ஹி.. இது ச்சும்மா கற்பனைக்காக மட்டுமே...)என் இனிய வலையுலக தமிழ்மக்களே..!!கிராமத்து...Read more »

இலவசங்களால் பாதிக்கப்படும் பாமரமக்கள்..!!

இலவசங்களால் பாதிக்கப்படும் பாமரமக்கள்..!!

வணக்கம் வலையுலக நண்பர்களே..!! மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்பதிவின் வாயிலாக தங்களுடன் எமது கருத்தினைப் பகிர்ந்திட சூழ்நிலையை அமைத்துக் கொண்டதில் மட்டற்ற மகிழச்சி. தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில் நாம் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இலவசங்களை வாரி வழங்கி, மக்களை சோம்பேறியாக்க போகும் அடுத்த தமிழக முதல்வர் யார் என்பதே..!!!??? அடுத்த முதல்வராக யார் வந்தாலும் பாதிக்கப்பட இருப்பது அடித்தட்டு மக்கள் என்றும், பாமரமக்கள் என்றும் வர்ணிக்கபடும் கிராமத்து மக்கள்தான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. காரணம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றளவும் முழுமையாக கிடைக்கப்பெறாமையே..!!! அதற்கு சில...Read more »

வெற்றிப்பாதையில் செல்வோமா...??!!!

வெற்றிப்பாதையில் செல்வோமா...??!!!

அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கருத்துப் பகிர்வை தங்களுடன்  பகிர்ந்திட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டமைக்கு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றிப்பாதையில் செல்வதற்கு நமது மனதிற்கு நல்ல எண்ணங்கள் வேண்டும். இடைவிடாத முயற்சியாலும், பயிற்சியாலும், அனுபவத்தினாலும் நாம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திக்கொண்டு வெற்றியடைவதற்கான வழிவகைகளை நாம் கற்றுகொள்ள முடியும். 1.நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். (அதனை பெரும்பாலும் காலை தூங்கி எழுந்தவுடன் முயற்சி செய்யாதீர்கள் பல்லை துளக்கிவிட்டு முயற்சிக்கவும். சமயத்தில் உங்களுக்கே மயக்கம் வரலாம். ஹி.....ஹி....ஹி...)    (நன்றி.- கூகுள் தேடுபொறி படம்) ...Read more »

விவசாயத்தின் வீழ்ச்சி..! சமுதாயத்தின் தளர்ச்சி..!

விவசாயத்தின் வீழ்ச்சி..! சமுதாயத்தின் தளர்ச்சி..!

வணக்கம் நண்பர்களே..! அனைவருக்கும் எமது முன்கூட்டிய இனிய 62வது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் அளவற்ற மகிழச்சியடைகிறேன். குடியரசு பெற்று 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நம்நாட்டில் இன்றும் வறுமையும், பட்டினிச்சாவும் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் உள்ளது. அரசின் கண்துடைப்பு சலுகைகள் தேர்தலை ஒட்டி மக்களுக்கு அப்பப்ப கிடைத்து வந்தாலும். உணவு மற்றும் தானிய உற்பத்தியில் இன்னும் மந்தமான நிலையே தலைதூக்கியுள்ளது. இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் உணவு பற்றாக்குறையும், தட்டுப்பாடும் அதிகளவில் ஏற்படும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இன்றைய பதிவில் நான் பகிர்ந்திட இருப்பது. நம்நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் அழிவினைப்பற்றி...Read more »