விவசாயத்தின் வீழ்ச்சி..! சமுதாயத்தின் தளர்ச்சி..!

வணக்கம் நண்பர்களே..! அனைவருக்கும் எமது முன்கூட்டிய இனிய 62வது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் அளவற்ற மகிழச்சியடைகிறேன். குடியரசு பெற்று 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நம்நாட்டில் இன்றும் வறுமையும், பட்டினிச்சாவும் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் உள்ளது. அரசின் கண்துடைப்பு சலுகைகள் தேர்தலை ஒட்டி மக்களுக்கு அப்பப்ப கிடைத்து வந்தாலும். உணவு மற்றும் தானிய உற்பத்தியில் இன்னும் மந்தமான நிலையே தலைதூக்கியுள்ளது. இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் உணவு பற்றாக்குறையும், தட்டுப்பாடும் அதிகளவில் ஏற்படும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.

இன்றைய பதிவில் நான் பகிர்ந்திட இருப்பது. நம்நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தின் அழிவினைப்பற்றி பேச்சுப்போட்டியில் பங்கேற்று உரையாற்றிய திருப்பூர் வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் பூ.க.அஷ்வத் ஆதித்யா ஃபேஸ்புக்  மூலம் நண்பரானர். (நட்புக்கு வயதுபேதம் தேவையில்லை என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்) அவர் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பிய மின்னஞ்சலின் மொழிபெயர்ப்பு தான் இப்பதிவு.  இனி அவர் உங்களுடன் பேசுவார்.
அனைவருக்கும் வணக்கம். நான் இங்கு பேச வந்த தலைப்பு விவசாயத்தின் வீழ்ச்சி..! சமுதாயத்தின் தளர்ச்சி..! உழுவார் உலகத்திற்கு ஆணி” என்னும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப , உழவு சிறப்பானது ஆகும். மனிதனாக பிறந்தால் உழைத்து வாழ வேண்டும். அதுவே நிலையான உயர்வைத் தரும். நம் பாரதத்தில் விவசாயமானது முதுகெலும்பாய் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த உழவுத் தொழிலின் உண்மையான நிலை என்ன..!!?? விவசாயத்தினை வெறும் சாயமாகவே இந்த சமூகம் மதிக்கிறது...!

அனைத்து வளங்களும் நம் நாட்டில் இருந்தும் என்ன பயன் ?? விவசாயி இன்றும் வறுமையில் வாடுகிறான். தம்மோடு போகட்டும் இந்த ஏர் பிடித்து உழவு செய்தல். இனி வரும் சமுதாயத்திற்கு வேண்டாம் என்று எண்ணுகிறான். இந்நிலைத் தொடர்ந்தால் எதிர்காலம் கேள்விக்குரியகும்..!? சமுகம் சங்கடத்துக்குள்ளாகும்.
(நன்றி.- கூகுள் தேடுபொறி படம்)

நம் நாட்டில் உணவு பஞ்சமும் பற்றாக்குறையும் ஏற்படுமாயின், சுவீடன் எத்தியோபியா, சோமாலியா, போன்ற நாடுகளில் ஒன்றாகிவிடும். விவசாய வீழ்ச்சிக்கு முதற் காரணம் சோம்பல் வயலில் உழைக்க விருப்பப்படுவது இல்லை. சங்க காலத்தில் விவசாயத்தை களியாக செய்தார்கள். ஆனால் இன்றோ களி கேலியாகி விட்டது. கொள்ளை இலாபத்திற்காக இரசாயனம் கலந்த உரங்களை பயன்படுத்தி மண்ணை மாசுபடுத்துகிறான்.

சோம்பல் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் இடைத்தரகர்கள். கடின உழைப்பாலான விளச்சல் சற்றும் உழைப்பில்லாத இடைத்தரகர்கள் கையில் அகபட்டு கொள்கிறது. தொழிற்சாலை பெருக்கம், நகர மயமாதல், இயற்கைச் சீற்றம், விண்ணைமுட்டும் விலையேற்றம், சமுதாய சிக்கல்கள், நீர் மற்றும் மின்சார பற்றாக்குறை, நவ நாகரீகம், நிலையற்ற வருமானம், சுற்றுச்சூழல் போன்ற பல காரணங்களை விவசாய வீழ்ச்சிக்கு சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால், இது நமக்கு ஆறுதல் அல்ல அவமானம்.

இத்தகைய காரணங்கள் வெறும் கண்துடைப்புகள். ஒவ்வொருவரும் தாமே முன்வந்து விவசாயம் செய்ய வேண்டும். அதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. சட்டங்கள் கடுமையானல்தான் தவறுகள் குறையும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் வருடத்திற்கு மூன்று மாதம் கட்டாயம் விவசாயம் செய்ய வேண்டும். இல்லையேல் சிறைவாசம் போன்ற சட்டங்கள் கொண்டுவர வேண்டும். இயந்திரத் தொழிலகம் போன்று விவசாயப் பண்ணைகள் தொடங்க வேண்டும். இத்தகைய ஆக்கப்புர்வமான நடவடிக்கைகளில் நம் அரசு ஈடுபடுமாயின் நம்நாடு விவசாய வீழ்ச்சியிலிருந்து மீண்டு வளர்ச்சி பெறும்.

”விவசாயம் செய்வோம்..! வாழ்வாதாரத்தை பெருக்குவோம்..!!” என்று கூறி என் பேச்சை கேட்ட அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி..! வணக்கம்..!.
* * * * * * *
You can leave a response, or trackback from your own site.

41 Responses for this post

  1. நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள். விவசாயத்தின் அருமையை, இந்த விலைவாசி உயர்வின் தாக்கத்தின் மூலமே ஓரளவு உணரப்பட்டு விட்டது. மாற்றம் விரைவில் வரும் என்று நம்புவோமாக..

  2. மாணவன் மாணவன் பி.அஷ்வத் ஆதித்யா-வுக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

  3. // ஒவ்வொருவரும் தாமே முன்வந்து விவசாயம் செய்ய வேண்டும். ///

    சரியாக சொன்னாய் மக்கா,
    சூப்பர் பதிவும், சரியான சவுக்கடியும்....

  4. //அனைவருக்கும் எமது முன்கூட்டிய இனிய 62வது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் அளவற்ற மகிழச்சியடைகிறேன்.//

    உங்களுக்கும்..

  5. //MANO நாஞ்சில் மனோ said...
    வடை எனக்கே....//

    வாங்க தல உங்களுக்கு இல்லாத வடையா..??!! ஹி..ஹி..

  6. //பாரத்... பாரதி... said...
    நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள். விவசாயத்தின் அருமையை, இந்த விலைவாசி உயர்வின் தாக்கத்தின் மூலமே ஓரளவு உணரப்பட்டு விட்டது. மாற்றம் விரைவில் வரும் என்று நம்புவோமாக..//

    நிச்சயமாக நண்பரே..! தங்களது ஆதரவுக்கு நன்றி நண்பா..!!

  7. //பாரத்... பாரதி... said...
    மாணவன் மாணவன் பி.அஷ்வத் ஆதித்யா-வுக்கு எமது நல்வாழ்த்துக்கள்.//

    கண்டிப்பாக தெரிவிக்கிறேன் நண்பரே..!!!

  8. //MANO நாஞ்சில் மனோ said...
    // ஒவ்வொருவரும் தாமே முன்வந்து விவசாயம் செய்ய வேண்டும். ///

    சரியாக சொன்னாய் மக்கா,
    சூப்பர் பதிவும், சரியான சவுக்கடியும்....//

    நன்றி தல. இந்த பெருமைகள் அந்த மாணவனுக்கும் அவரது ஆசிரியருக்கும் உரித்தாகட்டும்.

  9. //பாரத்... பாரதி... said...
    //அனைவருக்கும் எமது முன்கூட்டிய இனிய 62வது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் அளவற்ற மகிழச்சியடைகிறேன்.//

    உங்களுக்கும்..//

    மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி நண்பா..!!

  10. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு நண்பா சூப்பர்

    ”விவசாயம் செய்வோம்..! வாழ்வாதாரத்தை பெருக்குவோம்..!!”

    பகிர்வுக்கு நன்றி நண்பா

  11. மாணவர் பி.அஷ்வத் ஆதித்யா அவர்களுக்கு இந்த மாணவனின் நல்வாழ்த்துக்கள சொல்லிடுங்க நண்பா..

    உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் பல இப்படி ஒரு பதிவை பகிர்ந்தமைக்கு...நன்றி

  12. //மாணவன் said...
    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு நண்பா சூப்பர்

    ”விவசாயம் செய்வோம்..! வாழ்வாதாரத்தை பெருக்குவோம்..!!”

    பகிர்வுக்கு நன்றி நண்பா.//

    தங்களது ஆதரவுக்கு நன்றி நண்பா..!!

  13. //மாணவன் said...
    மாணவர் பி.அஷ்வத் ஆதித்யா அவர்களுக்கு இந்த மாணவனின் நல்வாழ்த்துக்கள சொல்லிடுங்க நண்பா..

    உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் பல இப்படி ஒரு பதிவை பகிர்ந்தமைக்கு...நன்றி//

    நிச்சயமாக நண்பா..!!
    தங்களது ஊக்கமிக்க கருத்துகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தல.

  14. Anonymous

    அருமையா தகவல் பிரவீன்
    எழுத்த்துகளில் கட்டி போட ஆரம்பிச்சிடிங்க
    ம்ம்ம் கலக்குங்க

  15. திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல தான் இதுவும்னு நினைக்கிறேன்..நானும் இதைப் பற்றி யோசித்திருக்கிறேன். நடைமுறை சாத்தியம் உண்டோ?

  16. நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள்..

    உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு ..
    http://sakthistudycentre.blogspot.com/

  17. சங்க காலத்தில் விவசாயத்தை களியாக செய்தார்கள். ஆனால் இன்றோ களி கேலியாகி விட்டது

  18. நம்மிடம் இருக்கும் அளப்பரிய பொக்கிசத்தை நாம் கூறுபோட்டு விற்றதன் துயரத்தை கூடிய விரைவில் அனைவருமே உணர்வோம்.

    எதிர்காலத்தில் உணவும், தண்ணீரும் மட்டுமே அதிக விலை விற்கும் ...

  19. விவசாயம் குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது இருப்பினும் இது தவிர்க்க முடியாததே. விவசாயத்திற்க்காக எந்த முயற்சியும் எடுக்காத நான் இது பற்றி வருத்தம் தெரிவிப்பது குற்ற உணர்ச்சியை தருகிறது.

    வேறு என்ன சொல்ல!

  20. Anonymous

    ”விவசாயம் செய்வோம்..! வாழ்வாதாரத்தை பெருக்குவோம்..!!”திருப்புர் வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் பி.அஷ்வத் ஆதித்யாவை பாராட்டுவோம்..

  21. நாட்டின் ஆதாரம் இது தானே...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    காதல் கற்பித்த தமிழ் பாடம்

  22. அருமையான தகவல் பிரவீன்...
    "முன்கூட்டிய இனிய 62வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்"

  23. அருமையாகச் சொன்னான் அஷ்வத்!பகிர்வுக்கு நன்றி

  24. ”காலத்தே பயிர் செய்” என்ற பழமொழிக்கினங்க இன்றய முக்கிய தேவைக்கு படைப்பாக்கம் கொடுத்த எனதருமை தோழர் திரு.பிரவின் அவர்களுக்கும் மாணவர் திரு.பி.அஷ்வத் ஆதித்யா, இவரின் ஆசிரியர் மற்றும் அவரின் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!!! பாராட்டுக்கள்!!!


    இவ்வேலையில் நேற்று (24-01-2011 இரவு சுமார் 8 மணி) என் கன்னெதிரில் தமிழக விவசாயிகலுக்கு நடந்த கொடுமையை உங்களுடன்
    பகிற்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    புதுச்சேரியை சுற்றியுள்ள தமிழக விவசாயிகள் தங்களுது விவசாய உற்பத்தி பொருட்களை அருகிலுள்ள புதுச்சேரி ஒழுங்கு முறை விற்பனை
    கூடத்திற்கு எடுத்து சென்று விற்பது வழக்கத்தில் உள்ளது.

    இந்நிலையில், நேற்று (24-01-2011) காலை தமிழக விவசாயிகளால் புதுச்சேரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு "நெல் மூட்டைகள்" விற்பனைக்காக எடுத்து சென்றிருந்தனர். நேற்று காலை எடுத்து சென்ற நெல் மூட்டைகள் இரவு ஆகியும் எடை போடுவதற்கு எந்த அதிகாரியும் ஆவணம் செய்யவில்லை. இதனால் மன உலைச்சலுக்கு ஆலான விவசாயிகள் புதுவை ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரியிடம்
    முறையிட்டனர்.

    ஆனால் அந்த அதிகாரி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக விவசாயிகளை பார்த்து கூறியது -
    ”தமிழ் நாட்ல இருந்து தூக்கிட்டு வந்திடுறீங்க இங்க.... அறிவில்ல உங்களுக்கு?? ஏன் அங்க எதுவும் கமிட்டி(விற்பனை கூடம்) இல்லையா??”

    இந்த இழிவாக வார்த்தைகளை வாங்கிகொண்ட தமிழக விவசாயிகள் கொட்டும் பனியில் கடும் குளிரில் போர்வை கூட இல்லாமல் நேற்று இரவு முழுவதும் தங்கள் விவசாய விளைபொருட்களுடன் காத்துகொண்டிருந்தனர்.

    அரசு ஊதியம் வாங்கி அரிசி கடையில் வாங்கும் அந்த புதுவை ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிக்கு தெரியுமா ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய விவசாயி படும் பாடு என்னவென்று?????

    இந்தியாவின் முதுகெலும்பென்று வார்த்தைக்கு வார்த்தை கூறிக்கொள்ளும் இந்த நாட்டில் விவசாயிக்கு மரியாதை இல்லை. பாதுகாப்பு இல்லை.

    இன்னும் 50 ஆண்டுகளில் இந்நாட்டில் அனைவரிடமும் லட்சக்கணக்கான பணம் கையில் இருக்கும். ஆனால் உண்பதற்கு தேவைபடும் அரிசியை உற்பத்தி செய்ய ஒரு விவசாயி இருக்க மாட்டான் இந்நிலை தொடர்ந்தால்.

  25. விவசாயிகளை வாடவிடும் அரசு , உருப்படாது .

  26. //கல்பனா said...
    அருமையா தகவல் பிரவீன்
    எழுத்த்துகளில் கட்டி போட ஆரம்பிச்சிடிங்க
    ம்ம்ம் கலக்குங்க//

    தங்களது ஊக்கமிக்க கருத்துகளுக்கு மிக்க நன்றி தோழி.

  27. //டக்கால்டி said...
    திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல தான் இதுவும்னு நினைக்கிறேன்..நானும் இதைப் பற்றி யோசித்திருக்கிறேன். நடைமுறை சாத்தியம் உண்டோ?//

    தங்களது சந்தனையும் சரிதான். பல கைககள் தட்டினால் நிச்சயம் ஓசை வரும். தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.!!

  28. //sakthistudycentre-கருன் said...
    நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள்..

    உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு ..
    http://sakthistudycentre.blogspot.com/
    //
    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.!!

  29. //FARHAN said...
    சங்க காலத்தில் விவசாயத்தை களியாக செய்தார்கள். ஆனால் இன்றோ களி கேலியாகி விட்டது//

    உண்மைதான் நண்பரே..! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  30. //கே.ஆர்.பி.செந்தில் said...
    நம்மிடம் இருக்கும் அளப்பரிய பொக்கிசத்தை நாம் கூறுபோட்டு விற்றதன் துயரத்தை கூடிய விரைவில் அனைவருமே உணர்வோம்.

    எதிர்காலத்தில் உணவும், தண்ணீரும் மட்டுமே அதிக விலை விற்கும் ...//

    ம்ம் சரியாச் சொன்னீர்கள் நண்பரே..!! வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.

  31. //கிரி said...
    விவசாயம் குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது இருப்பினும் இது தவிர்க்க முடியாததே. விவசாயத்திற்க்காக எந்த முயற்சியும் எடுக்காத நான் இது பற்றி வருத்தம் தெரிவிப்பது குற்ற உணர்ச்சியை தருகிறது.

    வேறு என்ன சொல்ல!//

    தங்களது வெளிப்படையான கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தல.

  32. //மறைமலை.. said...
    ”விவசாயம் செய்வோம்..! வாழ்வாதாரத்தை பெருக்குவோம்..!!”திருப்புர் வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் பி.அஷ்வத் ஆதித்யாவை பாராட்டுவோம்..//

    நிச்சயமாக நண்பரே..!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

  33. //ம.தி.சுதா said...
    நாட்டின் ஆதாரம் இது தானே...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    காதல் கற்பித்த தமிழ் பாடம்//

    ஆமாம் நண்பரே..!! தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  34. //தோழி பிரஷா said...
    அருமையான தகவல் பிரவீன்...
    "முன்கூட்டிய இனிய 62வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்"//

    மிக்க நன்றி தோழி. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  35. //சென்னை பித்தன் said...
    அருமையாகச் சொன்னான் அஷ்வத்!பகிர்வுக்கு நன்றி//
    ம்ம். தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...!

  36. ///ம. பிரேம்குமார் said...
    ”காலத்தே பயிர் செய்” என்ற பழமொழிக்கினங்க இன்றய முக்கிய தேவைக்கு படைப்பாக்கம் கொடுத்த எனதருமை தோழர் திரு.பிரவின் அவர்களுக்கும் மாணவர் திரு.பி.அஷ்வத் ஆதித்யா, இவரின் ஆசிரியர் மற்றும் அவரின் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!!! பாராட்டுக்கள்!!!


    //

    தங்களது வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...!
    ஒஷர பதீவு அளவுக்கு தாங்கள் விளக்கிய விதம் அருமை. மேலும் தாங்கள் கூறியது அனைத்தும் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இன்றும் தொடர்கதையாய் தொடர்கின்றன....!!! நம்மால் நமது ஆதங்கத்தைதான் வெளிப்படுத்த இயலும்... வேறு என்ன செய்ய....

  37. //Vijay @ இணையத் தமிழன் said...
    விவசாயிகளை வாடவிடும் அரசு , உருப்படாது .//

    கண்டிப்பாக நண்பரே..!! தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல.

  38. //பாரத்... பாரதி... said...

    வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.//

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல.

  39. வணக்கம் தோழரே உங்களின் பதிவிற்கு உளம் கனிந்த பாராட்டுகள் இதை நீங்கள் ஒருமாணவன் எழுதியது பரிசு போட்டிக்காக என பதிவு செய்துள்ளீர் மக்கள் உழைக்க அயத்தமில்லை என்பதுபோல் இருக்கிறது அப்படி எல்லாம் இல்லை வேளாண் தொழில் இங்கு முடக்கப்பட வேண்டும் என்பது இந்தியா அரசின் வேலையாக இருக்கிறது அதனால்தான் வேலையே செய்யாமல் பணம் கொடடுத்து மக்களை சோம்பேறி யாக்கிவிட்டார்கள் உரம் பற்றி : இரண்டாம் உலக போரின் போது மீந்து போன வெடி மருந்துகளை இந்தியா அரசுதான் கொண்டுவந்து வேளான் தொழில்செய்கிரவர்களுக்கு வழங்கியது .எல்லாமே நடுவணரசின் திட்ட மிட்ட சதி என்பதை எல்லறோம் புரிந்து கொண்டே இருக்கிறார்கள்.

  40. நல்ல பதிவு.. விகடனில் பார்த்தே இங்க வந்தேன்

Post a Comment