1500 ஃபாலோவர்ஸ் - பனித்துளி சங்கருக்கு வாழ்த்துகள்..!!

வணக்கம் நண்பர்களே..!! பதிவின் தலைப்பிலேயே அனைவருக்கும் புரிந்திருக்கும். பதிவு யாரைப்பற்றி என்றும், எதற்காக என்றும், ஆம் நண்பர்களே..!! நம்ப பனித்துளி சங்கர் 1500 ஃபாலோவர்ஸ் பெற்றமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கவே இப்பதிவு. இதுதான் அவரது பிரபல லோகோ இது அனைவரும் அறிந்ததே.

இது அவரது போரட்டம் நிறைந்த வாழ்க்கையை விளக்குவதாகவும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினஉழைப்பு இவற்றால் தன்னுடைய இலக்குகளை அடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எல்லா மொழி அகராதிகளிலும் பிடிக்காத ஒரே வார்த்தை ”முடியாது” என்பதுதான். முடியாததையும் முயற்சித்து தோற்றுப்போவோம் எனும் தன்னம்பிக்கையின் மறுபெயர். தொடர் தோல்விகளால் வெற்றியை விரட்டிப்பிடித்தவர்.  தன்னை குற்றம் சொல்லி, குட்ட நினைப்பவர்களையும் ”ஊக்கம் இருந்தால் ஊக்குவிற்பவனும் நாளை தேக்கு விற்பான்” என தட்டிக் கொடுப்பவர். 


அவர் அப்படி என்னதான் சாதிச்சுட்டார் என கேட்க நினைப்பவர்களுக்கு அவர் மதுரையில் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, வாழ்கையெனும் போராட்டத்திற்காக தனது உணர்வுகளை தொலைத்து அமீரகத்தில் வாழும் ஒரு சிறந்த பண்புள்ள மனிதர். எளிமையானவராகவும், சகப்பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் ஒரு வாசகனாகவும், ரசிகனாகவுமே இன்று வரை இருந்து வருகிறார்.

அதற்கு சிறந்த உதாரணம் தமிலிஷ் எனும் இன்டிலியில் 60, 000 ஓட்டுக்கள் பதிவு செய்து நண்பர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.  அவரைப்பற்றி எழுதிட இந்த ஒரு பதிவு போதாது. மேலும் அவரை புகழ்ந்துபேசினால் அறவே அவருக்குப் பிடிக்காது என்பதால் சுருக்கமாகவே கூறிவிடுகிறேன். 

வலைப்பூக்களில் தினமும் கவிதைத் தேனை தேடும் சுறுசுறுப்பான தேனீக்கள் போன்ற நண்பர்களுக்கு இவரை தெரியாமல் இருந்திருக்காது. ”ஹைக்கூ” எனும் கவிதைத் தேனை அடிக்கடி வலைப்பூவில் அள்ளி வீசியவர்.

விரைவில் 2000க்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை தாண்டுவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...!!! காரணம் அவரது இன்று ஒரு தகவல் எனும் தொடர் பதிவுகள் தான் ஹைலைட். அவர் சொல்லும் விதமே நாம் பதிவை தொடர்ந்து படிக்க தூண்டுகோலாகவும், அறிவை விசாலமாக்கும் வகையிலும்,  சுவாரஸ்யமாகவும், புதுமையானதாகவும், ஆச்சரியப் படுத்தும் வகையிலும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விரைவில் அவரது தகவல் படைப்புகள் மற்றும் கவிதைகள் புத்தகமாக வெளிவர வர உள்ளது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான தகவலாகும்.

அவரது நகைச்சுவைப் பதிவுகள் அலுவலகத்தில் அல்லது நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் தங்களது பணிச்சுமைகளை மறந்து சிரிக்க வைக்கும் வகையிலும், கவலைகளையும், டென்சன்களையும் போக்கும் வகையிலும் இருக்கின்றன என்பதற்கு சகவாசக நண்பர்களின் ஆதரவிலிருந்தே அறியலாம்.

மேலும், அவரது நகைச்சுவைப்பதிவுகள் ஒவ்வொன்னும் 2000 பக்கங்களுக்கு மேல் வாசிக்கப்பட்டுள்ளன. அவரது ஹைக்கூ கவிதைகள் கூகுள் தேடுதளத்தில் அதிகளவில் தேடப்பட்டுள்ளன. மேலும் டிவிட்டர் 2000 ஃபாலோவிங் - 740 ஃபாலோவர்ஸ், மற்றும் ஃபேஸ்புக் 2240 நண்பர்கள் என சமூக வலை தளங்களிலும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

ஆகவே, நண்பர் அவர்கள் மேலும் பல பதிவுகள் படைக்கவும். அவரது தகவல் சேவைகள், நகைச்சுவை பகிர்வுகள் மற்றும் கவிதைப் படைப்புகள் இன்னும் மெருகேற்றத்துடன் தொடரவும் மீண்டும் ஒரு முறை பாராட்டுகளுடன் வாழ்த்துகளை தெரிவிப்போம் வாருங்கள் நண்பர்களே..!!
* * * * * * *
You can leave a response, or trackback from your own site.

32 Responses for this post

 1. சூப்பர் பனித்துளி சங்கருக்கு வாழ்த்துக்கள் மேலும் பல சாதனை படைக்க... வாழ்த்துக்கள்...!!!

 2. வாழ்த்துகள் பனித்துளி சங்கர்.....
  அவர் பதிவுகள் குறித்த கருத்துகள் எல்லாமே உண்மை...

 3. //சௌந்தர் said...
  சூப்பர் பனித்துளி சங்கருக்கு வாழ்த்துக்கள் மேலும் பல சாதனை படைக்க... வாழ்த்துக்கள்...!!!//

  வாங்க சௌந்தர் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!!

 4. //பலே பிரபு said...
  வாழ்த்துகள் பனித்துளி சங்கர்.....
  அவர் பதிவுகள் குறித்த கருத்துகள் எல்லாமே உண்மை...//

  வாங்க பலே பிரபு கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!!

 5. வாழ்த்துக்கள்.. அவருக்கும், சுட்டிக்காட்டிய உங்களுக்கும்..

 6. பிரவீன் என் வாழ்த்துக்களையும் சங்கரிடம் சொல்லிவிடுங்க..

 7. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
  வாழ்த்துக்கள்.. அவருக்கும், சுட்டிக்காட்டிய உங்களுக்கும்..//

  வாங்க நண்பரே..! மிக்க மகிழ்ச்சி. தங்களது வாழ்த்துக்கு நன்றி..!!

 8. //Dharshi said...
  பிரவீன் என் வாழ்த்துக்களையும் சங்கரிடம் சொல்லிவிடுங்க..//

  ம்ம்... கண்டிப்பாக தோழி. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!!

 9. நண்பர் பனித்துளி சங்கரின் சாதனைகள் இன்னும் தொடர என்வாழ்த்துக்கள்...

 10. உண்மை என்ன வென்றால் பனித்துளி தளத்தைப்பார்த்துதான் நான் வலைவுலகிற்கே வந்தேன்...

  அவரின் பதிவிற்கு என் வருகை கண்டிப்பாக இருக்கும். அவருடைய ரசிகன் நான்...

  அவரைப்பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி...

 11. அண்ணருக்கு வாழ்த்துக்கள்...

 12. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  நண்பர் பனித்துளி சங்கரின் சாதனைகள் இன்னும் தொடர என்வாழ்த்துக்கள்...//

  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..!!

 13. //# கவிதை வீதி # சௌந்தர் said...

  உண்மை என்ன வென்றால் பனித்துளி தளத்தைப்பார்த்துதான் நான் வலைவுலகிற்கே வந்தேன்...

  அவரின் பதிவிற்கு என் வருகை கண்டிப்பாக இருக்கும். அவருடைய ரசிகன் நான்...

  அவரைப்பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி...//

  ஓ.. அப்படிங்களா... ரொம்ப சந்தோசம் நண்பரே..!! தங்களது வெளிப்படையான கருத்துப் பகிர்வுக்கு மீ்ண்டும் ஒருமுறை நன்றி நண்பரே..!!

 14. //கந்தசாமி. said...
  அண்ணருக்கு வாழ்த்துக்கள்...//

  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..!!

 15. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

 16. ஆகவே, நண்பர் அவர்கள் மேலும் பல பதிவுகள் படைக்கவும். அவரது தகவல் சேவைகள், நகைச்சுவை பகிர்வுகள் மற்றும் கவிதைப் படைப்புகள் இன்னும் மெருகேற்றத்துடன் தொடரவும் மீண்டும் ஒரு முறை பாராட்டுகளுடன் வாழ்த்துகளை தெரிவிப்போம் வாருங்கள் நண்பர்களே..!!

 17. //Tamil Unicode Writer said...

  அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்//

  தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

 18. //மாலதி said...

  ஆகவே, நண்பர் அவர்கள் மேலும் பல பதிவுகள் படைக்கவும். அவரது தகவல் சேவைகள், நகைச்சுவை பகிர்வுகள் மற்றும் கவிதைப் படைப்புகள் இன்னும் மெருகேற்றத்துடன் தொடரவும் மீண்டும் ஒரு முறை பாராட்டுகளுடன் வாழ்த்துகளை தெரிவிப்போம் வாருங்கள் நண்பர்களே..!!// தங்களது வாழ்த்துக்கு நன்றிங்க...!!

 19. பனித்துளிசங்கருக்கு வாழ்த்துக்கள்... பதிவிட்ட பிரவீன் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

 20. //தோழி பிரஷா( Tholi Pirasha) said...
  பனித்துளிசங்கருக்கு வாழ்த்துக்கள்... பதிவிட்ட பிரவீன் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.//

  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி பிரஷா..!!

 21. வணக்கம் சகோதரரே பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன்
  சென்று அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்...........

 22. ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
  மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

 23. நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது

 24. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

 25. வாழ்த்துக்கள்

 26. வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

  கூட்டான்சோறு...

 27. 1500 ஃபாலோவர்ஸ் பெற்றுக்கொண்ட பனித்துளி சங்கர்
  அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தத் தகவலைப்
  பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....

 28. உண்மையில் அவர் ஒரு வித்தியாசமான மனிதர் தான். என் வாழ்த்துக்களையும் உங்களுக்கு எனது நன்றிகளையும் சேருங்கள் சகோதரம்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

 29. 1500 ஃபாலோவர்ஸ் பெற்றுக்கொண்ட பனித்துளி சங்கர்
  அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தத் தகவலைப்
  பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....

 30. 1500 ஃபாலோவர்ஸ் பெற்றுக்கொண்ட பனித்துளி சங்கர்
  அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தத் தகவலைப்
  பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....

Post a Comment