வணக்கம் நண்பர்களே..!! பதிவின் தலைப்பிலேயே அனைவருக்கும் புரிந்திருக்கும். பதிவு யாரைப்பற்றி என்றும், எதற்காக என்றும், ஆம் நண்பர்களே..!! நம்ப
பனித்துளி சங்கர் 1500 ஃபாலோவர்ஸ் பெற்றமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கவே இப்பதிவு. இதுதான் அவரது பிரபல லோகோ இது அனைவரும் அறிந்ததே.
இது அவரது போரட்டம் நிறைந்த வாழ்க்கையை விளக்குவதாகவும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினஉழைப்பு இவற்றால் தன்னுடைய இலக்குகளை அடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எல்லா மொழி அகராதிகளிலும் பிடிக்காத ஒரே வார்த்தை ”முடியாது” என்பதுதான். முடியாததையும் முயற்சித்து தோற்றுப்போவோம் எனும் தன்னம்பிக்கையின் மறுபெயர். தொடர் தோல்விகளால் வெற்றியை விரட்டிப்பிடித்தவர். தன்னை குற்றம் சொல்லி, குட்ட நினைப்பவர்களையும் ”ஊக்கம் இருந்தால் ஊக்குவிற்பவனும் நாளை தேக்கு விற்பான்” என தட்டிக் கொடுப்பவர்.
அவர் அப்படி என்னதான் சாதிச்சுட்டார் என கேட்க நினைப்பவர்களுக்கு அவர் மதுரையில் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, வாழ்கையெனும் போராட்டத்திற்காக தனது உணர்வுகளை தொலைத்து அமீரகத்தில் வாழும் ஒரு சிறந்த பண்புள்ள மனிதர். எளிமையானவராகவும், சகப்பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் ஒரு வாசகனாகவும், ரசிகனாகவுமே இன்று வரை இருந்து வருகிறார்.
அதற்கு சிறந்த உதாரணம் தமிலிஷ் எனும் இன்டிலியில் 60, 000 ஓட்டுக்கள் பதிவு செய்து நண்பர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. அவரைப்பற்றி எழுதிட இந்த ஒரு பதிவு போதாது. மேலும் அவரை புகழ்ந்துபேசினால் அறவே அவருக்குப் பிடிக்காது என்பதால் சுருக்கமாகவே கூறிவிடுகிறேன்.
வலைப்பூக்களில் தினமும் கவிதைத் தேனை தேடும் சுறுசுறுப்பான தேனீக்கள் போன்ற நண்பர்களுக்கு இவரை தெரியாமல் இருந்திருக்காது. ”ஹைக்கூ” எனும் கவிதைத் தேனை அடிக்கடி வலைப்பூவில் அள்ளி வீசியவர்.
விரைவில் 2000க்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை தாண்டுவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...!!! காரணம் அவரது இன்று ஒரு தகவல் எனும் தொடர் பதிவுகள் தான் ஹைலைட். அவர் சொல்லும் விதமே நாம் பதிவை தொடர்ந்து படிக்க தூண்டுகோலாகவும், அறிவை விசாலமாக்கும் வகையிலும், சுவாரஸ்யமாகவும், புதுமையானதாகவும், ஆச்சரியப் படுத்தும் வகையிலும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விரைவில் அவரது
தகவல் படைப்புகள் மற்றும் கவிதைகள் புத்தகமாக வெளிவர வர உள்ளது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான தகவலாகும்.
அவரது நகைச்சுவைப் பதிவுகள் அலுவலகத்தில் அல்லது நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் தங்களது பணிச்சுமைகளை மறந்து சிரிக்க வைக்கும் வகையிலும், கவலைகளையும், டென்சன்களையும் போக்கும் வகையிலும் இருக்கின்றன என்பதற்கு சகவாசக நண்பர்களின் ஆதரவிலிருந்தே அறியலாம்.
மேலும், அவரது நகைச்சுவைப்பதிவுகள் ஒவ்வொன்னும் 2000 பக்கங்களுக்கு மேல் வாசிக்கப்பட்டுள்ளன. அவரது ஹைக்கூ கவிதைகள் கூகுள் தேடுதளத்தில் அதிகளவில் தேடப்பட்டுள்ளன. மேலும்
டிவிட்டர் 2000 ஃபாலோவிங் - 740 ஃபாலோவர்ஸ், மற்றும்
ஃபேஸ்புக் 2240 நண்பர்கள் என சமூக வலை தளங்களிலும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.
ஆகவே, நண்பர் அவர்கள் மேலும் பல பதிவுகள் படைக்கவும். அவரது தகவல் சேவைகள், நகைச்சுவை பகிர்வுகள் மற்றும் கவிதைப் படைப்புகள் இன்னும் மெருகேற்றத்துடன் தொடரவும் மீண்டும் ஒரு முறை பாராட்டுகளுடன் வாழ்த்துகளை தெரிவிப்போம் வாருங்கள் நண்பர்களே..!!
* * * * * * *