நேற்றைய நாளை இன்று - இன்றைய நாளை இன்றே..!
7:08 PM
Praveenkumar
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..!
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு எழுதும் வாய்ப்பை அமைத்துக் கொண்டேன். இந்தப் பதிவு ஏதாவது கருத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும் என்று சிந்தித்ததால் தாமதம். (உமக்குதான் சிந்தித்து எழுதுவது வரலியே விட்டுருங்கனு புலம்புவது கேட்குதுங்க... சரி விதி யாரை விட்டது விசயத்துக்கு வருவோம்) தொழில்நுட்ப தாக்கம் நிறைந்த இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் நிறைய பயனுள்ளதகவல்கள் ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் கிடைப்பதால் அவற்றை தட்டச்சு செய்து வலைப்பக்கத்தில் பதிவிடுவதற்கு அதிக முயற்சி எடுக்கவில்லை. (அதற்கு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதால்.. ஒரு சலிப்புத் தன்மை அம்புட்டுத்தேன்..) அதனால்தான் இவ்வளவு...... நீண்ட......... இடைவெளி. சரி நண்பர்களே... கருத்துக்கு வருவோமா..!!. (ங்கொய்யாலா இன்னும் வரலியா... )
சொன்ன சொல்லையும், எரிந்த கல்லையும், கழிந்த நேரத்தையும் திரும்பப் பெற முடியாது என்பதை உணர்த்தும் ஒரு மிகச்சிறிய கதை ஒன்றை சமீபத்தில் ஒரு தினசரியில் படித்தேன். அது எனக்கு பிடித்திருந்ததால், கொஞ்சம் எழுத்து நடையை மாற்றி சிலமாற்றங்கள் செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்பதற்கே இப்பதிவு.
வழிப்போக்கன் ஒருவன் நீர்பாய்ந்தோடும் ஆற்றின் கரையில் இரவு நேரம் தங்க நேர்ந்தது. அவன் கைகளுக்கருகில் பை நிறைய கற்கள் இருந்தன. பொழுது போகாததால் அவற்றிலிருந்த கற்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆற்றில் வீசினான். விடிந்தும் விட்டது. கடைசியாக இருந்த கல்லை வீசுவதற்கு முன் ஒருமுறை உற்றுப்பார்த்தான். இது பளபளப்பாக இருந்தது. உற்றுநோக்கியதில் அது வைரக்கல் என்று தெரிந்தது.
”வைரக்கற்கள் என்று தெரியாமல் பை நிறைய இருந்த கற்களை ஆற்றில் வீசி இழந்துவிட்டோமே..”!! என்று அந்த வழிப்போக்கன் வாழ்நாளெல்லாம் வருத்தப்பட்டான். (இதற்குமேல் வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்).
நேரமும் நம் கைகளில் இருக்கும் வைரக்கற்கள்தாம். நாம் அதை ”வீசி எறிகிறோமா”..!!! ”போற்றிப் பாதுகாக்கிறோமா”...!!! என்பது நம் கைகளில் தான் உள்ளது. (அதானால் கைகடிகாரத்தை மணிக்கட்டில் கட்டச் சொல்கிறார்களோ...!!!.) ஒவ்வொரு நொடியையும் முழுமையாக செலவழித்தால் ஓராண்டில் இரண்டு ஆண்டுகளைக்கூடத் திணிக்க முடியும்.
(எங்க இப்பொழுதெல்லாம் அலைபேசியிலும் கணினியிலும்தான் நேரமே போகிறது...!!! வேலை வேலை என உயர்அலுவலர்கள் நன்றாகவே திணிக்கிறார்கள்.... ஹி... ஹி... ஹி....)
நாளை செய்யலாம் என்று செய்ய வேண்டியவற்றைத் தள்ளிப் போடுபவர்கள் ஒன்றை உணரலாம். நாளை என்பது வருவதே இல்லை. அப்படி வரும்போது அது இன்றாகவே வருகிறது.
You can leave a response, or trackback from your own site.


Posted in







Tomorrow never comes.....
A nice post with a good message.
@Chitra வாங்க சித்ரா மேடம் தங்கள் கருத்துக்கு நன்றி..!
நாளை என்பது வருவதே இல்லை. அப்படி வரும்போது அது இன்றாகவே வருகிறது.
எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
நிறைய எழுதுங்கள் பிரவின்.
@santhanakrishnan
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே..!
ஒரு சிறு கதையை கூறி எங்களை அதிகம் சிந்திக்க வைத்துவிட்டீர்கள் நண்பரே!
நல்லதொரு கருத்தை இனிதாக ஏற்றுக்கொள்ளும் வண்ணம் படைத்த விதம் அருமை.
அடுத்த படைப்பை அவலுடன் எதிர்பார்த்து......
கதை நல்லா இருக்குங்க .. !!
//”போற்றிப் பாதுகாக்கிறோமா”...!!! //
எப்படிங்க அதைய போற்றிப் பாது காக்குறது ..?
கடிகாரத்த தூக்கி பெட்டிக்குள்ள போட்டுடட்டுமா ..?
இல்லேன்னா ஒரு புலவர கூட்டிட்டு வந்து கடிகாரத்தைப் பற்றி பாட்டு ஒண்ணு பாட சொல்லலாமா ..?
ரெம்ப நல்ல பதிவுங்க பிரவின்... கரெக்ட் தான் காலம் பொன்னானது தான்.... இப்ப எல்லாம் காலம் கம்ப்யூட்டர்னு ஆகி போச்சு...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி.. ம. பிரேம்குமார் நண்பரே..!!
ப.செல்வக்குமார் said...
கதை நல்லா இருக்குங்க .. !!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. நண்பரே..!!
//ப.செல்வக்குமார் said...
//”போற்றிப் பாதுகாக்கிறோமா”...!!! //
எப்படிங்க அதைய போற்றிப் பாது காக்குறது ..?
கடிகாரத்த தூக்கி பெட்டிக்குள்ள போட்டுடட்டுமா ..?
இல்லேன்னா ஒரு புலவர கூட்டிட்டு வந்து கடிகாரத்தைப் பற்றி பாட்டு ஒண்ணு பாட சொல்லலாமா ..? //
பாதுகாப்பது அவரவர் திறமை நண்பரே..!
நீங்களே பெரிய (மொக்கை) புலவர் தானே..! நீங்களே ஒரு பாட்டு எழுதலாமே..!?? ஹி.. ஹி.. ஹி..!!
//அப்பாவி தங்கமணி said...
ரெம்ப நல்ல பதிவுங்க பிரவின்... கரெக்ட் தான் காலம் பொன்னானது தான்.... இப்ப எல்லாம் காலம் கம்ப்யூட்டர்னு ஆகி போச்சு...//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்கமணி மேடம்.
ading.... idha innaikudhan naan edhalayo padichen copy adichi matterai mathitiya nall moolada unakku
வாங்க குணலக்ஷ்மி.
ஹா... ஹா.... ஹா.....
சமீபத்தில் ஒரு தினசரியில் படித்தேன். அது எனக்கு பிடித்திருந்ததால், கொஞ்சம் எழுத்து நடையை மாற்றி சிலமாற்றங்கள் செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்பதற்கே இப்பதிவு. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.