இலக்குகளும்... கனவுகளும்...

வணக்கம் நண்பர்களே..!! முந்தைய பதிவில் இலக்குகளை அடைய மனதை ஒருமுகப்படுத்துவது குறித்தும், இலக்குகள் ஏன் முக்கியமானவை? என்பது குறித்தும், கால்பந்தாட்ட கோல் இலக்கை மையப்படுத்தி ஒரு சில கருத்துகளையும் பகிர்ந்து அறிந்தோம். அதன் தொடர்ச்சியாக  இப்பகுதியில் நம்முடைய இலக்குகளை அடைய கனவுகள் எவ்வாறு உறுதுணையாக உள்ளது எனவும் அவற்றை எவ்வாறு நனவாக்குவது எனவும் பார்ப்போம்.
மக்கள் இலக்குகளைக் கனவுகளோடும், விருப்பங்களோடும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். கனவுகளும், விருப்பங்களும் நமது ஆசைகளே தவிர வேறெதுவுமில்லை. ஆசைகள் பலவீனமானவை, கீழ்வருவன துணை செய்தால், ஆசைகள் வலுவாகி விடும். 
 • வழிகாட்டுதல் (Direction) 
 • அர்ப்பணிப்பு (Dedication) 
 • மன உறுதி (Determination) 
 • கட்டுப்பாடு (Discipline) 
 • கெடு (Deadlines) 
 இதுவே ஒரு ஆசையை இலக்கிலிருந்து வேறுபடுத்துகிறது. இலக்குகள் என்தெல்லாம் இறுதி கெடுவோடும், ஒரு செயல்திட்டத்தோடும் கூடிய கனவுகளாகும். கனவுகளை நனவாக்குவது வெறும் விருப்பம் அல்ல, பேரார்வமே.
  
கனவினை நனவாக்குதற்கான வழிகள். 
 1. நிச்சயமான, தெளிவாக எழுதப்பட்ட இலக்கை வைத்திருங்கள். 
 2. அதை நிறைவேற்ற ஒரு திட்டத்தை வைத்திருங்கள்.
முதல் இரண்டு கருத்துகளையும் ஒரு நாளைக்கு இரண்டு முறை படித்து மனதில் நிறுத்துங்கள். அடுத்தப் பதிவில் ஏன் பலர் (என்னையும் சேர்த்துத்தான்) இலக்குகளை அமைத்துக் கொள்வதில்லை என்பதை குறித்து காண்போம். அதுவரை தங்களது கருத்துகளையும் அறிவுரைகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்கள் வாசக நண்பன் பிரவின்குமார்.
* * * * * * *
You can leave a response, or trackback from your own site.

18 Responses for this post

 1. //மங்குனி அமைசர் said...
  good one //
  தங்களது ஆதரவுககும் கருத்துக்கும் நன்றி அமைச்சரே..!!

 2. //வெறும்பய said...
  thelivaa irukku nanpaa... //

  தங்களத வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

 3. நல்லா எழுதிருக்கீங்க..

 4. அன்பின் நண்பருக்கு வணக்கம் உங்களின் ஒவ்வொரு பதிவும் மனிதனின் முன்னேற்றத்திற்கு தேவையான நுணுக்கங்களை மிகவும் அழகாகவும் , தெளிவாகவும் இதயத்தில் பதிய செய்கிறது . வாழ்த்துக்கள் தோழரே . நானும் முயற்சிக்கிறேன் இந்த பதிவில் நீங்கள் சொல்லி இருக்கும் நல்ல எண்ணங்களை பின்பற்றுவதற்கு . பகிர்வுக்கு நன்றி

 5. //Dharshi said...
  நல்லா எழுதிருக்கீங்க.. //

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தர்ஷி..!

 6. //!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  அன்பின் நண்பருக்கு வணக்கம் உங்களின் ஒவ்வொரு பதிவும் மனிதனின் முன்னேற்றத்திற்கு தேவையான நுணுக்கங்களை மிகவும் அழகாகவும் , தெளிவாகவும் இதயத்தில் பதிய செய்கிறது . வாழ்த்துக்கள் தோழரே . நானும் முயற்சிக்கிறேன் இந்த பதிவில் நீங்கள் சொல்லி இருக்கும் நல்ல எண்ணங்களை பின்பற்றுவதற்கு . பகிர்வுக்கு நன்றி//

  நட்பின் இலக்கணமே வணக்கம் நண்பா..!! தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும், ஊக்கமிக்க மற்றும் தன்னம்பி்க்கையளிக்கும் மிக தெளிவான மற்றும் விரிவான கருத்துப்பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!

 7. நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !

 8. //ஈரோடு தங்கதுரை said...
  நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !//

  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி நண்பரே..!!

 9. //கனவுகளை நனவாக்குவது வெறும் விருப்பம் அல்ல, பேரார்வமே.//

  எனது விருப்பத்தையும் பேரார்வமாக்கி விரைவில் வெற்றிபெறுவேன் ..! நல்லா இருக்குங்க ..!

 10. //சசிகுமார் said...
  nice //

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!!

 11. //ப.செல்வக்குமார் said...
  //கனவுகளை நனவாக்குவது வெறும் விருப்பம் அல்ல, பேரார்வமே.//

  எனது விருப்பத்தையும் பேரார்வமாக்கி விரைவில் வெற்றிபெறுவேன் ..! நல்லா இருக்குங்க ..! //

  தாங்கள் விரைவில் தங்களமு இலக்கை அடைய வாழ்த்துகள். தங்களது கருத்துப்பகிர்வுககும் ஆதரவுக்கும் நன்றி செல்வா..!

 12. அருமை நண்பரே இலக்குகளும்... கனவுகளும்... நன்றாக புரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி... தொடர்கிறேன்

 13. Please visit....

  www.mypno.com
  www.mypno.blogspot.com
  www.khaleel-baaqavee.blogspot.com
  www.khaleelbaaqavee.blogspot.com
  www.ulamaa-pno.blogspot.com

 14. //கமல் said...
  அருமை நண்பரே இலக்குகளும்... கனவுகளும்... நன்றாக புரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி... தொடர்கிறேன் //

  தங்களது ஆதரவுக்கும் பாராட்டுகளுடன் கூடிய கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!!

 15. //கலீல் பாகவீ said...
  Please visit....

  www.mypno.com
  www.mypno.blogspot.com
  www.khaleel-baaqavee.blogspot.com
  www.khaleelbaaqavee.blogspot.com
  www.ulamaa-pno.blogspot.com //

  அவசியம் வருகிறேன். தஙகள் வருகைக்கு நன்றி..!!

Post a Comment