நம் இலக்கை நாம் அறிந்தால் வெற்றி நம்மை அறியும்..!!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவு ஷிவ்கேராவின் யு கேன் வின் (You Can Win) என்ற புத்தக தொகுப்பிலிருந்து படித்ததில் பிடித்ததாக ஒரு புத்தகத்தில் படித்தேன். கட்டுரை பிடித்திருந்ததால் நாமும் நமது நண்பர்களுடன் பகிர்ந்திடலாமே..!! என்பதற்காகவே.  இனி அக்கட்டுரையிலிருந்து, நாம் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை நாம் அறிந்திருந்தால், அதை நாம் அடைய நமது அறிவு உதவி செய்யும். நாம் நமது கவனத்தை ஒருமுகப்படுத்தாமல் நமது இலக்கை அடையவே முடியாது. ஒருமுகப்படுத்துவதும், ஒருநிலைப்படுத்துவதும் சற்றே கடினம்தான், என்றாலும், இந்தத்திறன் கற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றேயாகும்.
ஃப்ளோரன்ஸ் சாட்விக். இவர், ஜீலை 4, 1952ல், கேட்னா கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை அடைவதற்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வெற்றிக் கண்டவர். உலகே அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஃப்ளோரன்ஸ் சாட்விக் அடர்ந்த மூடுபனியையும், ரத்தத்தை உறைய வைக்கும் குளிரையும், பல சமயங்களில் சுறா மீன்களையும் எதிர்த்துப் போராடினார். அவர் கரையை அடைய பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், பார்த்தது என்னவோ அடர்ந்த மூடுபனியைத்தான். கரையை பார்க்க முடியாததால், அவர் முயற்சியைக் கைவிட்டார்.

தான் கரைக்கு அரை மைல் தொலைவிலேயே இருந்ததை அறிந்து சாட்விக் மனம் வெறுத்துப்போனார். அவரால் நீந்த முடியாமல் அவர் முயற்சியைக் கைவிடவில்லை, அவரது இலக்கு எட்டக்கூடிய தூரத்தில் எங்கும் தெரியாததாலேயே கைவிட்டுவிட்டார். மற்ற எதுவும் அவரை தடுக்கவில்லை. அவர் "நொண்டிச்சாக்குச் சொல்ல விரும்பவில்லை. நான் கரையை மட்டும் பார்த்திருந்தால், வெற்றி இலக்கை அடைந்திருப்பேன்" என்று கூறினார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் திரும்பிச் சென்று கேட்னா கால்வாயை நீந்திக் கடந்தார். இம்முறை, மோசமான வானிலை இருந்தாலும் கூட, தனது மனதில் இலக்கை அவர் நினைவு வைத்திருந்ததால், அதனை அடைந்தது மட்டுமல்லாமல், அந்தக் கால்வாயை இரண்டு மணிநேரம் முன்னதாகவே கடந்து ஆண்களின் சாதனையையும் முறியடித்தார். என்ன நண்பர்களே..!! நமது இலக்கை இதே போன்று அறிந்து அடைவோமா..??!!! அடுத்தப் பதிவில் இதே புத்தகத்திலிருந்து மற்றொரு கருத்தை பகிர்கிறேன்.
You can leave a response, or trackback from your own site.

11 Responses for this post

 1. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..!

 2. உண்மைலேயே நல்லா இருக்கு அண்ணா . அவரோட நம்பிக்கை வீண் போகலை..! அதே மாதிரி நாமும் தன்னம்பிக்கையோடு இருந்தா வெற்றி நிச்சயம் ..!!

 3. சிறப்பாக உள்ளது!

 4. //ப.செல்வக்குமார் said...
  உண்மைலேயே நல்லா இருக்கு அண்ணா . அவரோட நம்பிக்கை வீண் போகலை..! அதே மாதிரி நாமும் தன்னம்பிக்கையோடு இருந்தா வெற்றி நிச்சயம் ..!! //

  நிச்சயமாக....
  நாம் வெல்வோம்..!! கருத்துக்கு நன்றி செல்வா..!!

 5. //yohannayalini said...
  அருமை //

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.

 6. //எஸ்.கே said...
  சிறப்பாக உள்ளது!//

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..!

 7. இன்றைய தலைமுறைகளுக்கு பயனுள்ள பதிவுவாழ்த்துக்கள் ..

 8. //FARHAN said...
  இன்றைய தலைமுறைகளுக்கு பயனுள்ள பதிவுவாழ்த்துக்கள் .. //

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..!

 9. உங்க பதிவுகள் ஒவ்வொன்னும் சின்ன சின்னதா இருந்தாலும் தேவையான விசயத்தோட நச்சுன்னு இருக்குங்க..

Post a Comment