இலவசங்களால் பாதிக்கப்படும் பாமரமக்கள்..!!

வணக்கம் வலையுலக நண்பர்களே..!! மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்பதிவின் வாயிலாக தங்களுடன் எமது கருத்தினைப் பகிர்ந்திட சூழ்நிலையை அமைத்துக் கொண்டதில் மட்டற்ற மகிழச்சி. தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில் நாம் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இலவசங்களை வாரி வழங்கி, மக்களை சோம்பேறியாக்க போகும் அடுத்த தமிழக முதல்வர் யார் என்பதே..!!!???

அடுத்த முதல்வராக யார் வந்தாலும் பாதிக்கப்பட இருப்பது அடித்தட்டு மக்கள் என்றும், பாமரமக்கள் என்றும் வர்ணிக்கபடும் கிராமத்து மக்கள்தான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. காரணம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றளவும் முழுமையாக கிடைக்கப்பெறாமையே..!!! அதற்கு சில உதாரணங்கள்.

அரசின் மணல்குவாரிகளால் அதிகளவில் மணல்கள் சுரண்டப்படுகின்றன. இதனால் ஆறுகளை சுற்றியுள்ள பல கிராமங்களில் போதிய அளவில் குடிநீர் வசதி இல்லாமையும், குடிநீர்த்தட்டுப்பாடும், சுற்றுச்சூழல் மாசுபாடுகள், சுகாதார சீர்கேடுகள் மற்றும் சுவாசக்கோளாறுகளும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. 
இவற்றுக்கு முக்கிய காரணம் மணல்கொள்ளையை அரசே ஏற்று நடத்துவதும் அதில் உள்ள பல்வேறு முறைகேடுகளும்தான். ஒரு குறிப்பிட்ட நபர்களின் ஆதாயத்திற்காக ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கக்கூடிய அவல நிலை இன்று பல்வேறு இடங்களில் அரங்கேறிகொண்டுதான் இருக்கின்றன. அதை தடுப்பதற்கான வழிமுறையை இனிவரும் எந்த அரசும் செயல்படுத்தாது. காரணம் அவர்களுக்கு தேவை ஒரு குறிப்பிட்ட அளவு ஆதாயப்பங்கு. 

இதனால் சாலைகள் பழுதடைந்து போதல், குடியிருப்பு வீடுகளில் மண்துகள்கள் காற்றின் மூலம் உட்புகுதல், உணவுகளிலும் கலந்துவிடுதல் என பல்வேறு பிரச்சினைகள் அப்பாவி மக்களை இன்றளவும் வாட்டிவதைக்கிறது.

இதுவரை இலவசம் என்ற மாயையை காட்டி மக்களை  ஏமாற்றியவர்கள் மட்டுமின்றி இனிவருபவர்களும் இதையே ஒரு வாக்குகளை சேகரிக்கும் புதிய யுக்தியாக கையாளுவது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழர்களை  கையாளாகதவர்களாகவும், இயலாதவர்கள் என்ற நிலையை உருவாக்கி விடுகின்றனர்.

உழவர்களின் நாடாக இருந்த தமிழகத்தை விரைவில் சோம்பேறிகளின் நாடாக்குவதிலும், உழைக்காமல் பொழுதைகழிக்க வைக்கும் கேவலமான நிலைக்கும் நம்மை  ஆளாக்குகின்றனர். இனியாவது சுயநலவாதிகளின் ”இலவசம்” எனும் தந்திரத்தை அறிந்துகொள்வோம் ..!!!!

தமிழனே..!!! உலகிற்கே 
உழைப்பை கற்றுக் 
கொடுத்தவன் நீ..!! 
இப்பொழுதே விழித்திடு..!! 
உனக்கான பாதையை 
இனி நீயே வகுத்திடு..!!!
தலைவர்களை நம்பி 
கெட்டது போதும் இனியாவது 
தன்மானத்தை காத்திட..
தன்னம்பிக்கையுடன் புறப்படு..
இலவசங்களை புறக்கணித்து..!!
இனிவரும் தலைமுறையாவது 
இலவசமின்றி பிறக்கட்டும்..!!!
* * * * * * * *
You can leave a response, or trackback from your own site.

30 Responses for this post

  1. தமிழனே..!!! உலகிற்கே
    உழைப்பை கற்றுக்
    கொடுத்தவன் நீ..!!
    இப்பொழுதே விழித்திடு..!!
    உனக்கான பாதையை
    இனி நீயே வகுத்திடு..!!!
    தலைவர்களை நம்பி
    கெட்டது போதும் இனியாவது
    தன்மானத்தை காத்திட..
    தன்னம்பிக்கையுடன் புறப்படு..
    இலவசங்களை புறக்கணித்து..!!
    இனிவரும் தலைமுறையாவது
    இலவசமின்றி பிறக்கட்டும்..!!!///

    புறப்படடா தமிழா புறப்படடா....

  2. //உழுவர்களின் நாடாக இருந்த தமிழகத்தை விரைவில் சோம்பேறிகளின் நாடாக்குவதிலும், உழைக்காமல் பொழுதைகழிக்க வைக்கும் கேவலமான நிலைக்கும் நம்மை ஆளாக்குகின்றனர். இனியாவது சுயநலவாதிகளின் ”இலவசம்” எனும் தந்திரத்தை அறிந்துகொள்வோம்//

    விழித்து கொள்ளுங்கள் மக்களே....

  3. சரியான சாட்டையடி விளாசல் அலசல் மக்கா...
    மக்கள் தெளிவு அடையணும் ம்ம்ம்ம் பார்ப்போம்....

  4. இங்கு யாரும் மாறப்போவதில்லை!
    ஊதற சங்கை ஊதுவோம்;விடியும்போது விடியட்டும்!

  5. நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு போட்டிருந்தாலும் நச் பதிவா போட்டுட்டேங்க நண்பா

  6. கவலை படாதீங்க வர போகும் அரசு இலவசம் தராது....

  7. //கலாநேசன் said...
    good post// நன்றி நண்பரே..!

  8. பகிர்வுக்கு நன்றி நண்பா

  9. //MANO நாஞ்சில் மனோ said...

    புறப்படடா தமிழா புறப்படடா....

    விழித்து கொள்ளுங்கள் மக்களே....

    சரியான சாட்டையடி விளாசல் அலசல் மக்கா...
    மக்கள் தெளிவு அடையணும் ம்ம்ம்ம் பார்ப்போம்....// தங்களது தொடர் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா...!

  10. //சென்னை பித்தன் said...
    இங்கு யாரும் மாறப்போவதில்லை!
    ஊதற சங்கை ஊதுவோம்;விடியும்போது விடியட்டும்!// ம்ம் அதுவும் சரிதான் தலைவரே..!! கருத்துக்கு நன்றி.

  11. //ரஹீம் கஸாலி said...
    நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு போட்டிருந்தாலும் நச் பதிவா போட்டுட்டேங்க நண்பா//

    மிக்க நன்றிங்க நண்பரே..!!

  12. //உழவர்களின் நாடாக இருந்த தமிழகத்தை விரைவில் சோம்பேறிகளின் நாடாக்குவதிலும், உழைக்காமல் பொழுதைகழிக்க வைக்கும் கேவலமான நிலைக்கும் நம்மை ஆளாக்குகின்றனர். இனியாவது சுயநலவாதிகளின் ”இலவசம்” எனும் தந்திரத்தை அறிந்துகொள்வோம் ..!!!!//


    ha ha ha haa innumaa vilakkam yellaam?!!

  13. //சௌந்தர் said...

    கவலை படாதீங்க வர போகும் அரசு இலவசம் தராது....// ஹி..ஹி..ஹி... அப்படியா..! ரைட்டு... மக்கா..!!

  14. //ம. பிரேம்குமார் said...

    Good post// வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

  15. //விக்கி உலகம் said...

    பகிர்வுக்கு நன்றி நண்பா//
    தங்களது ஆதரவுக்கு நன்றி தலைவா..!!!

  16. //ஷர்புதீன் said...

    //உழவர்களின் நாடாக இருந்த தமிழகத்தை விரைவில் சோம்பேறிகளின் நாடாக்குவதிலும், உழைக்காமல் பொழுதைகழிக்க வைக்கும் கேவலமான நிலைக்கும் நம்மை ஆளாக்குகின்றனர். இனியாவது சுயநலவாதிகளின் ”இலவசம்” எனும் தந்திரத்தை அறிந்துகொள்வோம் ..!!!!//


    ha ha ha haa innumaa vilakkam yellaam?!!// ஹி..ஹி..ஹி.. கருத்துக்கு நன்றி தலைவா..!!

  17. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    உண்மை... !

    Thanks...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவா..!!!

  18. //தோழி பிரஷா said...

    Good post praveen.// வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

  19. இடுகைக்கு பாராட்டுகள். தேவையான செய்திகள் இடுகையை தொடர்க

  20. //malathi in sinthanaikal said...

    இடுகைக்கு பாராட்டுகள். தேவையான செய்திகள் இடுகையை தொடர்க// வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  21. விழிப்புணர்வுப் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  22. //இராஜராஜேஸ்வரி said...
    விழிப்புணர்வுப் பதிவுக்குப் பாராட்டுக்கள்.//
    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

  23. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
    Very useful post
    Free makes worry//
    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க தலைவா.

  24. நல்ல பதிவு

  25. உங்களின் விழிப்புணர்வு இடுகைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் மக்களுக்கு தேவையான செய்திகள் உங்களின் ஆக்கம் வெற்றி அடையட்டும் .உங்களின் இடுக்கில் உள்ள பாடல் வாழ்ந்தாலும் தமிழர்க்கும் எனத்தொடங்கும் பாடல் எழுதியது பாவாணர் அல்ல . பெருஞ்சித்திரனார் .

  26. நல்லாயிருக்குங்க........................நம்ம பக்கமும் வாங்க..............

Post a Comment