இலக்குகளை ஏன் நிர்ணயிப்பதில்லை ?

இலக்குகளின் முக்கியத்துவம், அவசியம் குறித்து முந்தைய பதிவுகளில் பகிர்ந்தோம்.  இலக்குகளும்... கனவுகளும்... என்ற பதிவில் நம்மில் ஏன் பலர் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதில்லை? என்பதை அடுத்த பதிவில் பகிர்வதாக முடித்திருந்தேன் அதன் தொடர்ச்சியாக....  இப்பதிவு.

இலக்குகளை நாம் நிர்ணயித்துக் கொள்ளாமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் பின்வருவனவும் அடங்கும். 
  • நம்பிக்கையற்ற மனப்பாங்கு
  • தோல்வி பற்றிய பயம்
  • பேராவல் இன்மை
  • புறக்கணிக்கப்படுவோம் என்ற பயம்
  • தள்ளிப் போடுதல்
  • தாழ்ந்த சுயமதிப்பு
  • இலக்குகளின் முக்கியத்துவம் அறியாமை
  • இலக்கு அமைத்தல் பற்றிய அறிவின்மை
பொதுவாக இலக்குகள் SMART ஆக இருக்க வேண்டும்.
  • S - Specific - திட்டவட்டமானது
  • M - Measurable - அளவிடக்கூடியது
  • A - Achievable - சாதிக்கக் கூடியது
  • R - Realistic - யதார்த்மானது
  • T - Time bound - கால எல்லைக்குட்பட்டது.
இலக்குகள் கீழ்வருமாறு இருக்கலாம்.
  • குறுகியக் கால இலக்குகள் - ஓர் ஆண்டு வரைக்கும்
  • இடைக் கால இலக்குகள் - மூன்று ஆண்டுகள் வரைக்கும்
  • நீண்டகால இலக்குகள் - ஐந்து ஆண்டுகள் வரைக்கும்
  • இலக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலானதாகவும் இருக்கலாம்.
ஆனால், அப்போது அவை வாழ்வின் குறிக்கோளாகிவிடும். நமக்கு குறிக்கோள் இல்லாவிட்டால், நமது இலக்குகளை ஒவ்வொன்றாக அடைந்தாலே போதும் என்ந ஒரு வித கிட்டப்பார்வையுடன் வாழத் தொடங்கிவிடுவோம். இலக்குகளைச் சிறுசிறு பகுதிகளாப் பிரித்துக் கொண்டால், அவற்றை எளிதில் அடைந்து விடலாம். 

அடிகொண்டு அளந்தால் வாழ்க்கை கடினமானது.
ஆனால் அங்குலம் கொண்டு அளந்தாலோ, அது மிக எளிதானது.
 * * * * *
You can leave a response, or trackback from your own site.

18 Responses for this post

  1. அருமையான கட்டுரை அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இன்னும் இது போல நிறைய கட்டுரைகள் வெளியிட வேண்டுகிறோம்.

  2. தங்களது ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே..!

  3. சரியான இலக்கில் கட்டுரை பயணிக்கிறது! நன்றி பிரவின்.

  4. தங்களது ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!

  5. நிச்சயம் பலரும் தெரிந்து கொள்ள வேண்டுயவைகள்.. இது போன்ற பதிவுகளை திரட்டிகளில் பிரபலமடைய செய்யவேண்டியது படிப்பவர்கள் கடமை..

    வாழ்த்துக்கள் பிரவீன் இதுபோல நிறைய எழுதுங்க..

  6. தங்களது வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தர்ஷி..!

  7. SMART work praveen...
    quite good... :)

  8. தங்களது வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சத்யசீலன்.

  9. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிங்க.

  10. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சித்ரா மேடம்..!!

  11. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் பிரவின்குமார்,
    மிக அருமையான பயனுள்ள கட்டுரை. வேறொரு தளத்தின் வழியே தங்களின் தளம் வந்தேன். வந்தது வீணாகவில்லை. இலக்கை பற்றிய தங்களின் தொடர் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரரே. ஜிம்மிக்ஸ் வேலை எல்லாம் காட்டாமல் மிக இயல்பாக தொடர் நகர்கின்றது. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர் இன்னும் சிறப்பாக வெளிவர எனது பிரார்த்தனைகளுடன்.

  12. நல்லா இருக்கு அண்ணா ., இலக்குகள நிர்ணயிக்கரதுல இத்தன வகை இருக்கா..? தெரிந்துகொண்டேன் ..!!

  13. //பார்வையாளன் said...
    very useful//
    தங்களது ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே..!

  14. //பி.ஏ.ஷேக் தாவூத் said...
    அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் பிரவின்குமார்,
    மிக அருமையான பயனுள்ள கட்டுரை. வேறொரு தளத்தின் வழியே தங்களின் தளம் வந்தேன். வந்தது வீணாகவில்லை. இலக்கை பற்றிய தங்களின் தொடர் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரரே. ஜிம்மிக்ஸ் வேலை எல்லாம் காட்டாமல் மிக இயல்பாக தொடர் நகர்கின்றது. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர் இன்னும் சிறப்பாக வெளிவர எனது பிரார்த்தனைகளுடன்.//

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத் அவர்களே..!
    தங்களது ஆதரவுக்கும் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பரே..!

  15. ப.செல்வக்குமார் said...
    நல்லா இருக்கு அண்ணா ., இலக்குகள நிர்ணயிக்கரதுல இத்தன வகை இருக்கா..? தெரிந்துகொண்டேன் ..!!

    தங்களது ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செல்வா..!

  16. அருமையான கட்டுரை பிரவின்குமார்.. இதில் இருக்கும் விசயங்கள் அனைத்தையும் நான் ஏற்கனவே படிதிருக்கிறேன்.. இருந்தாலும் இது போன்ற நல்ல விசயங்களை திரும்பத் திரும்பப் படிப்பதில் தவறில்லை.. நன்றி.

  17. ஃபாலோயர் ஆயாச்சு..

Post a Comment