விடா முயற்சி..... விஸ்வரூப வெற்றி..!

விடா முயற்சி..... விஸ்வரூப வெற்றி..!

முன்னுரை.-                அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் முன்கூட்டிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதிலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கட்டுரை பகிர்வில் தங்களுடன் உரையாடுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டமைக்கும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பதிவு ஒரு விளம்பர நாளேட்டில் படித்தது. மையக்கருத்து பிடித்திருந்ததால் எமது சொந்த நடையில் பகிர்வுக்காக தங்களுடன் பகிர்கிறேன். ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் - காற்று பிரேக்.-           ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் இளமையிலேயே இயந்திர அமைப்பில் நாட்டம் கொண்டவராம். இவரின் தந்தை பண்ணை இயந்திரங்கள் செய்யும் பட்டறை ஒன்றை வந்திருந்தாராம். ஹவுஸின் இலட்சியம் இரயில் வண்டியை உடனே...Read more »

ஹைக்கூ - நிலவின் அச்சம்..!

ஹைக்கூ - நிலவின் அச்சம்..!

பெண்ணே..! உன் அழகை கண்டுஅஞ்சுகிறது போலும் அமாவசையன்று நிலவு..! ...Read more »

அலைபேசி தொந்தரவுகளுடன் இடரான பேருந்து பயணம்

அலைபேசி தொந்தரவுகளுடன் இடரான பேருந்து பயணம்

வணக்கம் நண்பர்களே..!  முந்தைய பதிவான அலைபேசியும் - குறுஞ்செய்திகளும் பதிவில் அடுத்த பதிவில் சமூக கருத்துடன் பகிர்வதாக குறிப்பிட்டுயிருந்தேன். அப்பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு. கடந்த தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்தில் சாதாரணமாக சனி்க்கிழமைகளில் ஞாயிறு விடுமுறைக்காக மக்கள் அவரவர் சொந்த பகுதிக்கு செல்ல (எம்மைப்போல) அலைகடலென திரண்டு இருப்பதை பார்க்கும்போதே ”ச்சபா... இப்பவே கண்ண கட்டுதே..”! என வடிவேலு பாணியில் எண்ணத் தோன்றும். அதுவும் பண்டிகை காலங்களில் என்றால் சொல்லவா வேண்டும்..??!!!! ச்சப்பப்பா...!!!! கொடுமைடா சாமி..!!! என்று தோனும். பேருந்துக்குள் இருக்கும் கூட்டத்தை...Read more »

அலைபேசியும் - குறுஞ்செய்திகளும்

அலைபேசியும் - குறுஞ்செய்திகளும்

வணக்கம் நண்பர்களே..! முந்தைய இடுகையில் அஆஇ (அலைபேசியின் ஆபத்துகளும், இடர்களும்) பற்றி பார்த்தோம். இப்பதில் அவற்றின் அவசியம் குறித்தும், அவற்றின் மூலம் நம் மக்கள் செய்யும் அட்டகாசங்கள் குறித்தும் யாமறிந்தவரை பகிர்கிறேன். அதற்கு முன்பாக அலைபேசியின் முக்கிய அவசியங்களை காண்போம். (ஃக்கி...ஃக்கி.. உங்களுக்கு தெரியாததா...????!!!!!) அலை(கொலை)பேசியின் அவசியம்.- நமது வருகை குறித்து தெரிவிக்கவும், காலதாமதம் ஏற்பட்டால் அறிவிக்கவும், தவறிய அழைப்பு செய்ய (இது பெரும்பாலும் இளம்வயது பெண்கள் செய்கிறார்கள்) முக்கியமான செய்தி பேச, உரையாட, தகவல் பரிமாற, பொழுது போக்க, படம் பார்க்க, பாட்டு கேட்க, கடலைபோட, மொக்கைபோட, கூட்டஅழைப்பில் அரட்டை அடிக்க...Read more »

அஆஇ (அலைபேசியின் ஆபத்துகளும், இடர்களும்)

அஆஇ (அலைபேசியின் ஆபத்துகளும், இடர்களும்)

வணக்கம் நண்பர்களே..! நாம் இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அலைபேசியையும் (செல்போன்) நம்மையும் பிரிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அலைபேசியை அதிகமாக பேசுவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுத் தகவல்களும், வலைப்பக்கங்களில் காணப்படும் உதாரணத்திற்கு... நம்ம நண்பர் ! . பனித்துளி சங்கர் ! அவர்களின் இன்று ஒரு தகவல் 21 - மனித இனத்தை மெல்ல அழிக்கும் மொபைல் போன்கள் !!!  இதுபோன்ற பயனுள்ள  கட்டுரைகளும் (இதுவரை படிக்காதவங்க அவசியம் படிப்பீங்கன்னு நம்புறேன்..!!) நாம் படித்து பல தகவல்கள் அறிந்தாலும், நம்மை அந்த நிமிடம்...Read more »

இலக்குகளை ஏன் நிர்ணயிப்பதில்லை ?

இலக்குகளை ஏன் நிர்ணயிப்பதில்லை ?

இலக்குகளின் முக்கியத்துவம், அவசியம் குறித்து முந்தைய பதிவுகளில் பகிர்ந்தோம்.  இலக்குகளும்... கனவுகளும்... என்ற பதிவில் நம்மில் ஏன் பலர் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதில்லை? என்பதை அடுத்த பதிவில் பகிர்வதாக முடித்திருந்தேன் அதன் தொடர்ச்சியாக....  இப்பதிவு. இலக்குகளை நாம் நிர்ணயித்துக் கொள்ளாமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் பின்வருவனவும் அடங்கும். நம்பிக்கையற்ற மனப்பாங்கு தோல்வி பற்றிய பயம் பேராவல் இன்மை புறக்கணிக்கப்படுவோம் என்ற பயம் தள்ளிப் போடுதல் தாழ்ந்த சுயமதிப்பு இலக்குகளின் முக்கியத்துவம் அறியாமை இலக்கு அமைத்தல் பற்றிய அறிவின்மை பொதுவாக இலக்குகள் SMART ஆக இருக்க வேண்டும். S - Specific...Read more »

இலக்குகளும்... கனவுகளும்...

இலக்குகளும்... கனவுகளும்...

வணக்கம் நண்பர்களே..!! முந்தைய பதிவில் இலக்குகளை அடைய மனதை ஒருமுகப்படுத்துவது குறித்தும், இலக்குகள் ஏன் முக்கியமானவை? என்பது குறித்தும், கால்பந்தாட்ட கோல் இலக்கை மையப்படுத்தி ஒரு சில கருத்துகளையும் பகிர்ந்து அறிந்தோம். அதன் தொடர்ச்சியாக  இப்பகுதியில் நம்முடைய இலக்குகளை அடைய கனவுகள் எவ்வாறு உறுதுணையாக உள்ளது எனவும் அவற்றை எவ்வாறு நனவாக்குவது எனவும் பார்ப்போம்.மக்கள் இலக்குகளைக் கனவுகளோடும், விருப்பங்களோடும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். கனவுகளும், விருப்பங்களும் நமது ஆசைகளே தவிர வேறெதுவுமில்லை. ஆசைகள் பலவீனமானவை, கீழ்வருவன துணை செய்தால், ஆசைகள் வலுவாகி விடும்.  வழிகாட்டுதல் (Direction)  அர்ப்பணிப்பு (Dedication)  மன...Read more »

இலக்குகள் ஏன் முக்கியமானவை ?

இலக்குகள் ஏன் முக்கியமானவை ?

வணக்கம் நண்பர்களே..!! முந்தைய  பதிவில் ஷிவ்கேராவின் யு கேன் வின் (You Can Win) என்ற புத்தக தொகுப்பிலிருந்து படித்ததில் பிடித்ததாக நம் இலக்கை நாம் அறிந்தால் வெற்றி நம்மை அறியும் என்ற பதிவில் இலக்குகளை அமைத்தலும் அடைவதும் குறித்து சாட்விக் சாதனையுடன் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் நம்முடைய இலக்குகள் ஏன் முக்கியமானவை ? என்பதை சுருக்கமாக பார்ப்போம்.நல்ல சுட்டெரிக்கும் வெய்யிலி்ல், நல்ல சக்தி வாய்ந்த ஒரு லென்ஸை ஒரு தாளின் மேல் அசைத்துக் கொண்டிருந்தால், அந்தத் தாளில் தீ பற்றவே பற்றாது. ஆனால் அதை ஒரே இடத்தில் மையப்படுத்திப் பிடித்து கொண்டிருந்தால், அந்தத் தாள்...Read more »

நம் இலக்கை நாம் அறிந்தால் வெற்றி நம்மை அறியும்..!!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவு ஷிவ்கேராவின் யு கேன் வின் (You Can Win) என்ற புத்தக தொகுப்பிலிருந்து படித்ததில் பிடித்ததாக ஒரு புத்தகத்தில் படித்தேன். கட்டுரை பிடித்திருந்ததால் நாமும் நமது நண்பர்களுடன் பகிர்ந்திடலாமே..!! என்பதற்காகவே.  இனி அக்கட்டுரையிலிருந்து, நாம் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை நாம் அறிந்திருந்தால், அதை நாம் அடைய நமது அறிவு உதவி செய்யும். நாம் நமது கவனத்தை ஒருமுகப்படுத்தாமல் நமது இலக்கை அடையவே முடியாது. ஒருமுகப்படுத்துவதும், ஒருநிலைப்படுத்துவதும் சற்றே கடினம்தான், என்றாலும், இந்தத்திறன் கற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றேயாகும். ஃப்ளோரன்ஸ் சாட்விக். இவர், ஜீலை 4, 1952ல்,...Read more »

இப்படியாக இருப்போமா..?!!!

வணக்கம் நண்பர்களே..! நாம் வாழ்க்கையில் முக்கியமான பணிகளை / கடமைகளை எப்படி செய்ய வேண்டும்  என்றும், அவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும், ஏதோ யாம் கற்ற மற்றும் பெற்ற அனுபவங்களை வைத்து இக்கருத்துகளை எமக்காகவே எழுதிவைத்தேன். அவற்றை நமக்காக நம் நண்பர்களுடன் பகிர்ந்திடவே இப்பதிவு. உண்ணுவோம் - விவேகமாக உறங்குவோம் - நிம்மதியாக உடுத்துவோம் - தூய்மையாக உரையாற்றுவோம் - மென்மையாக எண்ணுவோம் - நல்லவிதமாக கற்றிடுவோம் - தெளிவாக நடந்திடுவோம் - பணிவாக நம்புவோம் - உறுதியாக நடந்துகொள்வோம் - நாகரீகமாக திட்டமிடுவோம் - ஒழுங்காக பணியாற்றுவோம் - உண்மையாக...Read more »

படித்ததில் பிடித்தது - நம்பிக்கையும் பேச்சும்..!

வணக்கம் நண்பர்களே..! வழக்கம் போல் மாதத்திற்கு ஏதாவது இரண்டு பதிவு போடவேண்டுமே என்பதற்காக.... அலுவலகத்தின் சுவரினை வெறித்துப் பார்த்து யோசிக்கையில் அங்கே இருந்த வாசகத்தையே பதிவாக போட்டுவிடலாம் என தோன்றியது. (நல்ல பதிவு எழுதனும்னா நிறைய யோசிக்க வேண்டி இருக்கே..! அதனால, அதுக்கு நான் சரிபட்டு வரமாட்டேன்) வேறு என்ன செய்வது ஏதாவது உருப்படியா சிந்தனை வரனும்னா சுவரை பார்க்கனும். இல்லைனா சுவரில் முட்டியாவது யோசிக்கனும் என்று மொக்கை பதிவர்கள் சங்கத்துல சொல்லியிருப்பதால சுவரில் அப்புறம் முட்டி யோசிக்கலாம். அதுவரை அங்கு படித்ததை பகிர்வுக்காக பதிவிடலாம் என்பதற்காகவே இப்பதிவு.*...Read more »

நேற்றைய நாளை இன்று - இன்றைய நாளை இன்றே..!

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..!மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு எழுதும் வாய்ப்பை அமைத்துக் கொண்டேன். இந்தப் பதிவு ஏதாவது கருத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும் என்று சிந்தித்ததால் தாமதம். (உமக்குதான் சிந்தித்து எழுதுவது வரலியே விட்டுருங்கனு புலம்புவது கேட்குதுங்க... சரி விதி யாரை விட்டது விசயத்துக்கு வருவோம்)  தொழில்நுட்ப தாக்கம் நிறைந்த இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் நிறைய பயனுள்ளதகவல்கள் ஊடகங்கள் மூலம்  உடனுக்குடன்  கிடைப்பதால் அவற்றை தட்டச்சு செய்து வலைப்பக்கத்தில் பதிவிடுவதற்கு அதிக முயற்சி எடுக்கவில்லை. (அதற்கு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதால்.. ஒரு சலிப்புத் தன்மை...Read more »

கனிமொழியும், கணினிமொழியும் - ஓர் ஒப்பீடு

பதிவுல நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!தமிழ்வாழ்க தமிழன்வளர்க என்று தலைப்பை வைத்து விட்டு தமிழைப்பற்றியும் எழுதாமல் தமிழனைப்பற்றியும் எழுதாமல்... (என்னத்த எழுதறது ஏதாவது தெரிந்தால்தானே) மாதத்திற்கு ஒரு முறை வரும் அமாவசை, பௌர்ணமி போல எப்பொழுதாவது பதிவும், பின்னூட்டமும்.. போட்டு நானும் ஒரு வாசகப்பதிவர்தான்னு தக்கவைத்துக் கொள்வதை தெரிந்தும், என்னையும் நம்பி பின்தொடர்பவர்களுக்கும், என்னை நிறைய எழுதுங்க.. அப்பப்ப.. வலைப்பக்கத்தை அப்டேட் பண்னுங்க என்று பின்னூட்டம் அளித்து ஊக்கமளிக்கும் சக பதிவுலக நண்பர்களுக்கும்  எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ...Read more »

கண்ணீர்னா ரொம்ப பிடிக்குமாம்..!!

வணக்கம் நண்பர்களே..! மடகாஸ்கர் பகுதியில் தூங்கும் பறவையின் கண்களிலிருந்து, கண்ணீரை குடிக்கும் ஒருவகை அந்துப் பூச்சியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்களாம். பொதுவாக மான் போன்ற பாலூட்டிகளின் கண்களிலிருந்து அந்துப் பூச்சிகள் கண்ணீரை குடிக்குமாம். விலங்குகள் பூச்சிகளை விரட்டுவதில்லை. ஆனால், முதல் முறையாக பறவையின் கண்களிலிருந்து, அந்துப் பூச்சி கண்ணீர் குடிப்பதை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடிதுள்ளனராம். அந்துப் பூச்சி கண்களை மூடிக்கொண்டு தூங்கும்,  பறவைகளின் கண்களிலிருந்து தும்பிக்கை போன்ற உறிஞ்சும் அவயத்தை பயன்படுத்தி, கண்ணீரை குடிக்கிறது. இது தூங்கும் பறவையை தொல்லை செய்வதில்லையாம்.  அந்துப் பூச்சிக்கு தேவையான உப்பு கண்ணீரிலிருந்து கிடைக்கிறது...Read more »

குறுஞ்செய்தி மொக்கைகள் - சிரிக்க.. சிந்திக்க..

முன் குறிப்பு: இந்த பதிவு முழுவதும் மொக்கை என்பதால் பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம். மேலும் ஆங்கிலத்தில் வரும் எஸ்.எம்.எஸ்களை தமிழில் மொழி பெயர்த்து நமது செந்தமிழில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்க்காகவே. உங்களுக்கு ஏற்கனவே இதுபோல் ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி வந்து இருக்கலாம். நமது தமிழில் எழுதி பார்க்கும் போதும் கொஞ்சம் மகிழ்ச்சி அதற்காகத்தான் இப்பதிவு 1.மரண மொக்கை - (குறுஞ்செய்தியில் வந்தது)ஒரு ஊருல மொக்கசாமினு ஒருத்தன் இருந்தான். அவன் கடவுளை நினைத்து வரம் வேண்டி பயங்கரமா தவம் இருக்க, கடவுளும் அவன் மீது இரக்கப்பட்டு கண்முன் தோன்றி ”என்ன வரம் வேண்டும்...Read more »

என்றென்றும் நீ என் இதயத்தில்..!

பெண்ணே..! என் கண்களில் உன்நினைவுகளின் உருவம் உலக உருண்டைபோல் சுழல்வதால், உயிர் கண்மணிகள் இரண்டும் சொர்க்கமொன்றும் நரகமொன்றுமாய், மாறி மாறி உன் நினைவுகளால் கொல்கிறது..! நீ விரும்புவதுபோல் நடித்தபோது சொர்க்கத்தில்...! - அது பொய்த்தோற்றமிட்ட கானல்நீரென உணர்ந்த போது நரகத்தில்...! இருப்பினும் ஏனோ தெரியவில்லை..??!! என்றென்றும் நீ  என் இதயத்தில்..!                       * * * * * * * * * ...Read more »

சில விஷயங்கள் யாராலும் மாற்றவே முடியாது..!

முடியாது..! முடியாது..! சில விஷயங்களை யாராலும் மாற்றவே முடியாது..! 1.காலிங்பிளவரை தலையில் வச்சிக்க முடியாது..! 2.கோல்டுபில்டரை அடகுவைக்க முடியாது..! 3.கோல மாவுல தோசை சுட முடியாது..! 4.மழையா பேய்ந்து வெள்ளமா போனாலும் குளிர்ஜொரத்தில குளிக்க முடியாது..! 5.இதுபோன்ற வீணாப்போன குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வந்தாலும் நம்மலால படிக்காமா இருக்க முடியாது.! 6.படித்துட்டு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு முன்அனுப்பு (பார்வாட்) பண்ணாம இருக்கமுடியாது..! 7.பிடிக்கலைனாலோ உள்பெட்டி(இன்பாக்ஸ்)  நிரம்பிவிட்டாலோ அழித்தல் (டெலிட்) பண்ணாம இருக்கவே முடியாது.! 8.இப்படி (எஸ்.எம்.எஸ்)-ல வந்த மொக்கைகளையும், சிரிப்புளையும், சிந்தனைகளையும் படித்தபின் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் என்னைப்போன்று நிறைய நண்பர்களால் இருக்கவே...Read more »

காதலின் எதிரியாய்...!

காதலின் எதிரியாய்...!

காதலும் நெல்லிக்கனியும் எதிரிகளே..!எப்படித் தெரியுமா..?  பித்தத்தை சமன்படுத்தும் நெல்லிக்கனியும் - அதனை அதிகரிக்கச் செய்யும் காதலும் எதிரிகள் தானே..?!! (VS) நெல்லிக்கனி முன்னால் கசந்து பின்னால் இனிக்குமாம்..! காதலோ முன்னால் இனித்துபின்னால் கசக்குமாம்..! காதலின் எதிரியாய்...! * * * * * * * * ...Read more »

சிந்தனையால் கிடைக்”கலாம்”..!

சிந்தனையால் கிடைக்”கலாம்”..!

சிந்தனைகள் சிந்தனை விதைகள் சரியாக சிதறினால் சிற்பமும்  கிடைக்”கலாம்”..! கவிதையும் கிடைக்”கலாம்”..! - ஏன் இன்னொரு ”அப்துல்கலாமும்"  கிடைக்”கலாம்”..!? * * * * * * * *வேகத்திலும் விவேகமாய்...!நீ எவ்வளவு ”பொறுமை”யாய்செயல்களல் செயல்படுகிறாயோ..அதற்கேற்ப ”காலம்” வேகமாச் செல்லும்நீ வி”வேகமாய்” செயல்பட்டால்காலம் பொறுமையாகச் செல்லும்..!”காலம்” எதற்க்குமே நிகரற்றகாலத்திற்கு நிகரானது..!* * * * * * * *குறிப்பு. இந்த வரிகள் நான் காலத்தையும், சிந்தனையையும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக என் மனசாட்சி எனக்காக எழுதியது. நண்பர்களே..! உங்களுக்கும் பிடித்திருந்தால் கருத்துக்களையும், ஓட்டுகளையும் பதிவு செய்யுங்கள். நன்றிகளுடன் வலைப்பதிவு வாசகன். ...Read more »

இவர்களே சாதனையாளர்களாய்....!

சாதனையாளர்களான - இவர்கள் தோல்வி படிக்கட்டுகளை மிதித்தேசாதனை மேடைகளிலும்..சரித்திர பாடங்களிலும் இடம்பெற்றனர். இவ்உலகத்தில் எவராலும் முடியாததுஇவரால் முடியும்! - ஆனால்இவரால் முடியாதது,எவராலும் முடியாது! இவரின் விலகாத விடாமுயற்சி,தளராத தன்னம்பிக்கை,அயராத கடின உழைப்பு, இம்மூன்றால் அசைக்க முடியாத வெற்றியை எளிதாக பெற்றிடும்இவர்களே சாதனையாளர்களாய்....தொடர்கின்றனர்.....! ஏன் அந்த இவர்களாய் நாம் இருக்கக்கூடாதுநண்பர்களே? ...Read more »

காலமே உன் உயிர்

                                          நண்பா! இருக்கும் காலங்களை இருட்டில் தொலைக்காதே..! தொலைத்தால் மீண்டும் ”இழந்தகாலம்” கிடைக்குமா..? கிடைத்தால் ”இறந்தகாலம்” மீண்டும் நடக்குமா..!? அனைத்தையும் தெரிந்துகொள்.! மனிதர்களை புரிந்துகொள்.! உலகத்தினை அறிந்துகொள்.! நீ எடுத்த வைக்கும் ஒவ்வொரு அடியும் சாதனைகளுக்கு அடித்தளமாகட்டும்..! சாதனைகளுடன்.... உன் வாழ்க்கைப்பயணம் தொடரட்டும்.......! ...Read more »

பேருந்துக் காதல்..! - தொடர் பதிவு

பேருந்துக் காதல்..!  - தொடர் பதிவு

அனைத்து வலைப்பதிவு நண்பர்களுக்கும் வணக்கம். ”பேருந்துக் காதல்” தலைப்பே கொஞ்சம் விவகாரமாகத்தான் இருக்கு. தொடர்பதிவு எழுதிட பிரபலபதிவர்கள் வரிசையில் எப்பொழுதாவது பதிவிடும், வலைப்பதிவு வாசகனாய் இருந்த என்னையும் சேர்த்து வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் பிரபலம்தான் என ஊக்குவித்து இங்கு என்னை அழைத்த எமது அருமை நண்பர் பனித்துளி சங்கர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை இந்த வாய்ப்பின் முலம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொடர் எங்கே ஆரம்பித்தது என்றும் தெரியல...? எங்கே முடியும் என்று தெரியல...? தொடர் பேருந்தாய் போகிறது....! (அதெல்லாம் உமக்கு எதற்கு அதான் தொடர் பதிவுனு சொல்லிடோம்ல...Read more »

நட்பின் பிரிவு

நட்பின் பிரிவு

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும் அதன் “வாசம்” என்றும் இதயத்தில் வீசும்...! சிறகில்லா பறவையும், சிறகடித்து பறப்பதென்றால் “நட்பு” எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...! பாலில் கலந்த நீரைப்போல எம்இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..! பால்நீரிலிருந்தும் பாலை மட்டும் பிரித்திடுமாம் அன்னப்பறவை...! எம்இரத்தத்திலிருந்து நம்நட்பை பிரிப்பதென்றால்... எம்உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தால் மட்டுமே...!! ...Read more »

எமது கற்பனை கவிதைகள்-2

மொழி..!என்னவள் பேசும் "தமிழ்" அமுத மொழி..! எப்போதாவது பேசும் "ஆங்கிலம்" கணினி மொழி..! என்னிடம் பேசுவது "மௌன மொழி"..! இருவரும் பேசுவது "காதல் மொழி"..! உச்சரித்துப் பேசினால் "கனிமொழி"..! உதடுகளால் பேசினால் "தேன்மொழி"..! எதிர்கால உலகத்தில் பேசப்படும் "முதல் மொழி" என்னவளின் "பழம்பெரும் செம்மொழி" அதுவே அனைவருக்கும் "செந்தமிழ் மொழி"..!  கனவுகள்...! நண்பர்களே ! கனவு காணுங்கள்....!  என்னைப்போல் கனவுகளில் கன்னி அவளை காணாதீர், நினைவுகளை பெருக்கிடுவாள்...! நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..! பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...! பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...! ஆழ்வாராய் இருப்பவனையும், போக்கிரியாய் மாற்றிடுவாள்...! ...Read more »

படித்ததில் மிகவும் பிடித்த புத்தகம்

படித்ததில் மிகவும் பிடித்த புத்தகம்

படிப் படியாய் படி! புத்தக ஆசிரியரைப் பற்றி: டாக்டர்.இரா.ஆனந்த குமார் இ.ஆ.ப.  தமிழார்வமும் தன்னம்பிக்கையும் நிரம்பிய இளைஞர்.கவிதைகளின் காதலர்; கருத்துக்களின் கருவூலர். படிப்பை சுமையாய் நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாய் மாற்றும் கலையை இந்நூலில் கற்றுத் தருகிறார். கேலி சித்திரங்களுடன், தோழைமை உணர்வோடு பேச்சு நடையில் ஆழ்ந்த கருத்துக்களை அடுக்கிச் சொல்லும் புத்தகமாக இந்நூல் வடிவம் பெற்றுள்ளது. சுயசரிதைக் குறிப்புகளுடன் கூடிய சுய முன்னேற்றப் புத்தகமாக மலர்ந்துள்ள இந்நூல் இளைய தலைமுறைக்கு பிடித்த ஓர் இளம் எழுத்தாளரை அறிமுகப்படுத்துகிறது எனலாம். இந்நூல் வதம்பசேரி கிராம பள்ளியில் கரி அரைத்ததிலிருந்து பின்லாந்தில் பனி...Read more »

எமது கற்பனை கவிதைகள்-1

எமது கற்பனை கவிதைகள்-1

நினைவலைகள்..!பெண்ணே !உன் கனவுகளே இல்லையென்றால் என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !உன் நினைவுகளே இல்லையென்றால் என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !உன்னை காணாமல் இருந்திருந்தால் எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !உன் நினைவால் என் நினைவில்லை !என்றுமே என்னில் உன் நினைவலை !உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும் உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால் நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை ! ***************** சிரிப்பு...! மௌனக் கதவுகள் இசைந்து திறக்கும் பொழுதும்... செவ்"வாய்" இதழ்கள் அசைந்து மலரும் பொழுதும்... பூக்கின்ற...Read more »